சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்த கல்வியாகும் அந்தக் கல்வி நம் வீட்டிலேயே துவங்குவதே மேலும் சிறந்ததாகும்
கர்ப்பக் கால உணவுப் பழக்கம் சில குறிப்புகள்
கொழுப்புச் சத்தும் தேவையானதுதான். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை, குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். ஒரு நாளைக்கு 70 கிராம் என்ற அளவுக்கு உணவில் எண்ணெய் சேர்க்கலாம்.
கர்ப்பக் காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு 50 மடங்கு அதிகரித்துவிடுவதால், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு, இரும்புச் சத்து மிகமிக அவசியம்.
இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொள்வதனால்கூட மலச்சிக்கல் ஏற்படலாம். இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இரும்புச் சத்து அதிகம் உள்ள வால்நட், பேரீச்சம்பழம் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பால், மோர், தயிர் போன்ற பால் பொருட்களில் இதைப் பெறலாம். காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது. பாலில் பாஸ்பரஸும் உள்ளது. இதுவும் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் அவசியம்.
அனைத்து வைட்டமின் மற்றும் தாது உப்புகள் எளிதில் கிடைக்க பச்சைக் காய்கறிகள், நார்ச் சத்துள்ள உணவுகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவில் ஒன்றரை கப் வேகவைத்த காய்கறி அல்லது ஒரு கப் பச்சைக் காய்கறியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால், சோடியமும் தேவைப்படுகிறது. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல், குறைத்துக்கொள்வது நல்லது.
ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது, செரிமானப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும். இரண்டு கப் பால் குடித்துவிட்டோமே என்று தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்.
ஒன்பதாம் மாதம்
37-வது வாரத்தில், குழந்தையின் நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்கும்.
தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மார்பகத்தில் பால் சுரக்க ஆயத்தமாகும். பனிக்குடம் உடைந்ததும் பால் சுரக்க ஆரம்பித்துவிடும்.
பிரசவத்தை எளிமையாக்க, சொல்லிக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்...
எட்டாம் மாதம்
குழந்தை 2.5 கிலோவும், 45 செ.மீ. உயரமும் இருக்கும்..
எழாம் மாதம்
குறிப்பு: இந்த மாற்றங்கள், அவரவர் உடல்நிலை, எடை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடலாம்.
பிரசவம் தொடர்பாக மற்றவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நினைத்துப் பயப்பட வேண்டாம்.
பிரசவத்தை எதிர்கொள்வது பற்றி, டாக்டர் சொல்லித்தந்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இது உங்களுக்கு இரண்டாவது குழந்தை என்றாலும், மீண்டும் டாக்டரிடம் பயிற்சி முறைகளைக் கேட்டுக்கொள்ளவும்...
ஆறாம் மாதம்
பெண் குழந்தையாக இருந்தால், இனப்பெருக்க மண்டலம் உருவாகும். குழந்தையின் நடுக்காது எலும்பு வலுவடையும். இதனால், செவித்திறன் மேம்படும்.
ஐந்தாம் மாதம்
எலும்பு மஜ்ஜைகள் உருவாக ஆரம்பிக்கும். இந்த எலும்பு மஜ்ஜையே, ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடையும்.
குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக, பால் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு இந்த நேரத்தில் மார்பகத்தில் ஒருவகையான திரவம் சுரக்கலாம். இது, எதிர்காலத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கவலை வேண்டாம்.
தாயின் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளைக் கண்டறிய, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.
செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. நார்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நான்காம் மாதம்
குழந்தை தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும். வெளிப்புறச் சத்தங்களைக் கேட்கத் தொடங்கும். பனிக்குட நீரில் சுற்றிச்சுற்றி வரும்.
குழந்தை ஐந்து முதல் ஆறு இன்ச் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
இந்த நேரத்தில், சருமத்திலும் மாற்றங்கள் தெரியும். ரத்தக்குழாய்கள் அதிக அளவில் வேலை செய்யும். ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக, சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படலாம். கருப்பைக்கு முன்பைக்காட்டிலும் இரண்டு மடங்கு ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. சிறுநீரகத்துக்கு 25 சதவிகிதம் அதிகமாக ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. எனவே, இதயம் அதிக அளவில் வேலை செய்யும்.
தொடர் மற்றும் எளிமையான பயிற்சிகள் செய்வது, தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியத்தைத் தரும்.
கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்த, நல்ல புத்தகங்கள் வாசிப்பது, இனிமையான பாடல்கள் கேட்பது நல்லது. இது, வயிற்றில் வளரும் கருவுக்கு ஆரோக்கியமான உடல், மன வளர்ச்சியைக் கொடுக்கும்.
மூன்றாம் மாதம்
இந்தச் சின்னஞ்சிறு குழந்தை சிரிக்கும், சிணுங்கும், கை விரலை சூப்பும், பனிக்குடத்தின் நீரை விழுங்கி, அதைச் சிறுநீராக வெளியேற்றும்.
குழந்தையின் இதயத் துடிப்பை அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் துல்லியமாகக் கேட்க முடியும்.
நன்கு சுத்திகரிக்கப்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பாலைப் பருகுவது நல்லது.
மருத்துவரின் ஆலோசனைப்படி,
வயிறு மற்றும் இடுப்புப் பகுதி பெரிதாகும் என்பதால், அதற்கு ஏற்ற ஆடைகளைத் அணிய வேண்டும். எலாஸ்டிக் தன்மையுள்ள ஆடையைப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் மாதம்
குழந்தைக்கு- தலை, கண், காது உருவாகத் தொடங்கும். கைகளும் கால்களும் அரும்பும். கரு உருவாகிய ஆறாவது வாரத்தில், அதன் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி அடையத் தொடங்கும்.
இந்த நேரத்தில் குழந்தையின் இதயம் நிமிடத்துக்கு 80 முறைக்கும் மேல் துடிக்கும்.
அதிகமான சோர்வு ஏற்படும். நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
இந்த மாதத்தில் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சியைக்கொண்டு, பிரசவத் தேதியை மருத்துவர் கணக்கிடுவார்.
முதல் மாதம்
முதல் மாதத்தின் இறுதியில், மிகமிகச் சிறு அளவில் கரு வளர்ச்சியடைந்துவிடும். சினைக் குழாய் (ஃபெலோபியன்) வழியே பயணித்து, கருப்பையை அடையும்.
கருப்பைக்குள் நுழைந்ததும், இந்தக் கரு இரண்டாகப் பிரியும். ஒன்று 'எம்ப்ரியோ' (embryo) எனப்படும் சிசு. மற்றொன்று, நஞ்சுக்கொடி.
ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, தைராய்டு, ஆர்.எச். ஃபேக்டர், ரத்த வகை, இரும்புச் சத்து குறைபாடு மற்றும் ருபெல்லா கிருமித் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கண்டறியப்படும்.
சிறுநீரகப் பரிசோதனை மூலம் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இதய நோய், தைராய்டு பிரச்னை போன்று வேறு உடல்நலக் குறைபாடு காரணமாக மாத்திரை மருந்துகள் ஏதேனும் எடுப்பவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவற்றைத் தொடரலாம்.
தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற எந்தப் பிரச்னைகளுக்கும் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, ஃபோலிக் அமிலம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சத்தான உணவுகளை நன்றாகச் சாப்பிட வேண்டும். இது, வயிற்றில் வளரும் கருவுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகளை இயற்கையான முறையில் அளிக்கும்.
கருத்தரித்த சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரை குமட்டல் நீடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்னை மூன்றாவது மாதத்திலேயே நின்றுவிடும். சிலருக்கு கர்ப்பக் காலம் முழுவதுமே லேசான குமட்டல் இருக்கலாம்.
வெறும் வயிற்றில் இருப்பதும் குமட்டலை அதிகரிக்கச் செய்யும். காலையில் ஏதேனும் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறி!!!
நீங்கள் அடிக்கடி டாய்லெட்டை உபயோகிக்கிறீர்களா?
அப்படியானால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்தாலோ அல்லது சமீபத்தில் உங்கள் துணைவருடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டிருந்தாலோ இது ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது கருவுற்றலின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்
. இது பெரும்பாலும் கருவுற்றல் நிகழ்விலிருந்து ஒரு வாரத்திற்குள் நிகழும்.
உங்களுடைய சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் சரி. உங்களால் சிறு சிறு அளவில் தான் சிறுநீர் கழிக்க முடியும். இது உங்களுக்கு வெறுப்பூட்டத்தக்கதாக இருக்கலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் கர்ப்ப காலம் முழுவதும் தொடர்வதோடு, குழந்தைப் பிறப்பிற்கு சற்று முன் தான் சரியாகும். இது மட்டுமின்றி, வழக்கத்திற்கு மாறான வெளிப்போக்கு ஆகியவையும் கருவுற்றலை உறுதி செய்யும் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
இது ஏன் நிகழ்கிறது?
கருவுறுதலின் போது பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் சேர்ந்து ஒரு கருவை உருவாக்கி கருப்பை சுவற்றிற்குள் நுழைந்து HCG எனப்படும் ஒருவித ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலில் குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் அதிகப்படியான ரத்த ஓட்டத்திற்கும் காரணமாக அமைந்து சிறுநீரகப்பையினை சற்று கடுப்பிற்குள்ளாக்கி அதிகப்படியாக செயல்படச் செய்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு சிறு சிறு அளவில் கழிக்க நேரிடுகிறது. கருவுற்றலின் மற்றுமொரு பொதுவான அறிகுறி மாதவிடாய் தள்ளிப் போகுதல்.
கருவுற்ற ஒருவர் நாட்கள் செல்லச்செல்ல கருப்பை விரிவடைந்து சிறுநீரகத்தின் மீது அழுத்தம் அதிகரித்து சிருநீர் கழித்தலை உந்தும். எனவே கர்ப்பத்தின் போது அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பொதுவான அறிகுறிக்கு இது காரணமாக அமைகிறது. இதனால் பல முறை நடு இரவில் தூக்கத்தின் போது நீங்கள் எழுவதையும் வழக்கமாகக் காணலாம்.
ஃபோலிக் அமிலம் அவசியம் தேவை
குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்துவிட்டால், ஆறு மாதங்களுக்கு முன்பே டாக்டரின் ஆலோசனையின்பேரில், ஃபோலிக் அமிலம் சத்து மாத்திரை சாப்பிடலாம். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், கரு நல்லபடியாக வளரவும், கருச்சிதைவைத் தடுக்கவும், குழந்தை எந்தக் குறையுமின்றி பிறக்கவும் உதவுகிறது.
ஆண்கள் புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றைக் கைவிட்டு ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு செய்யவேண்டியவை. கர்ப்பம் தரித்ததும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாற்றங்களையும் தெரிந்துகொள்வது, பல குழப்பங்களையும் பயத்தையும் போக்கும்.
குழந்தைக்குத் திட்டமிடுதல்
'குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்று தம்பதியர் முடிவுசெய்துவிட்டால், உடனே உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி, சில மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.
இருவரும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பி.எம்.ஐ. 25-க்குள் இருக்க வேண்டும். முட்டை மற்றும் விந்தணு தரத்துடன் இருக்க உடல் எடை கட்டுக்குள் இருப்பது அவசியம்.
சராசரி உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பது, சிசேரியன் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
தைராய்டு, சர்க்கரை, ருபெல்லா, சின்னம்மை, ஹெபடைடிஸ் பி, டி.பி., எச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.
எச்சரிக்கை: ருபெல்லாவுக்கான தடுப்பு ஊசியை, ஒரு பெண் போட்டிருந்தால், அதிலிருந்து ஒரு மாதத்துக்கு தாய்மை அடையக் கூடாது.
தாய்மை
'கருவுறுதல்' பற்றிப் பலர் சொல்லும் கட்டுக்கதைகளையும், பிரசவம் பற்றிய தவறான கண்ணோட்டங்களையும் உண்மை என நம்பும் பல பெண்கள், மகப்பேறு அனுபவத்தையே கொஞ்சம் திகிலோடுதான் எதிர்கொள்கிறார்கள்.
'கருத்தரித்தல்' என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான சூழலும் ஊட்டமிக்க உணவுகளும், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தை இனிய அனுபவமாக மாற்றுகின்றன.
RECENT POST
தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?
ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...
-
Rendu perum fb la friends,,, apram msg panni close agi number share panniketanga daily what's app la msg panni pesipanga(nerula pathadh...
-
பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவது பெண்ணின் வயது அது தரிக்கும் மாதத்தை வைத்து சீனர்கள் இப்படி ஒரு அ...
-
PART - 3 ( Sasi & Keerthi Love Story ) Keerthi calling to Sasi📲📲📲📲 Keerthi: helo enga...