குழந்தையின் மூளை நரம்பு மண்டலம் முதிர்ச்சி அடையும். 32-வது வாரத்தில், குழந்தையின் ஐந்து புலன்களும் செயல்பட ஆரம்பித்துவிடும்.
வயிற்றின் தோல் வழியே ஊடுருவும் வெளிச்சத்தை, குழந்தை உணரத் தொடங்கும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும். 32-வது வாரத்தில், 'ரேப்பிட் ஐ மூவ்மென்ட்' எனப்படும் தூக்கத்தில் கண் அசைவு என்ற செயல் குழந்தைக்கு ஏற்படும். மிக ஆழ்ந்த தூக்கத்தின்போது, இந்தக் கண் அசைவு நிகழும். தினமும் குழந்தை தூங்குவதையும் விழித்துக்கொள்வதையும் விக்கலையும் உணர முடியும்.
குழந்தை 2.5 கிலோவும், 45 செ.மீ. உயரமும் இருக்கும்..
குழந்தை 2.5 கிலோவும், 45 செ.மீ. உயரமும் இருக்கும்..
உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
பொய்ப் பிரசவ வலி அடிக்கடி ஏற்படும். இது உங்கள் கருப்பையின் தசைகள் உறுதியாவதற்காக உங்கள் உடல் மேற்கொள்ளும் தற்காப்புப் பயிற்சி.
குழந்தையின் சுழற்சியை உணரலாம். சோர்வு, நெஞ்சு எரிச்சல், சிறுநீர், தூக்கம், மலச்சிக்கல், கால் வலி போன்ற பொதுவான பிரச்னைகள் ஏற்படலாம்.
பொய்வலி ஏற்படும்போது, நம் பாட்டி வைத்தியமான கைவைத்தியங்கள் கைகொடுக்கும்...
செய்யவேண்டியவை:
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை கண்டறியும் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்பு எலும்பில் அழுத்தம் அதிகரிக்கும். இதற்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, பிரத்யேக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
எளிய வீட்டு வேலைகள் செய்வது,
நடைப்பயிற்சி போன்றவை
பிரசவத்தை சுலபமாக்கும்...