Showing posts with label Agriculture. Show all posts
Showing posts with label Agriculture. Show all posts

வீட்டுத்தோட்டம் தேவையான வலைதளங்கள்

வீட்டுத்தோட்டம்
தேவையான வலைதளங்கள்

1. www.tn.gov.in/horticulture
2. www.tnau.ac.in/agritech/tamil/horticulture
3. www.floriculture.com
4. www.hometime.com
5. www.net.tips.com
6. www.todayshomeowner.com
7. www.indiainteriordesigns.com
8. www.hgtv.com
9. www.art.com
10. www.crafthome.com
11. www.designsplus.com
12. www.doityourself.com
13. www.garden.org
14. www.avalvigadan.com
15. www.garden.org
16. www.homearts.com
17. www.homeharvest.com
18. www.homeportfolio.com
19. www.homes.com
20. www.mastergardening.com
21. www.readersdigest.com
22. www.sampler.com
23. www.seedman.com
24. www.wapango.com
25. www.vangalam.com
26. www.kumuthammanvasnai.com
27. www.thegardenhelper.com
28. www.toohome.com
29. www.yardmart.com
30. www.800florels.com
31. www.bestflowers.com
32. www.bouquetsdirect.com
33. www.bulb.com
34. www.dutchbulbs.com
35. www.flowerclub.com
36. www.flowersbud.com

பட்டங்களும் பட்டத்துக்கேற்ற பயிர்களும் :

பட்டங்களும் பட்டத்துக்கேற்ற பயிர்களும் : 

பட்டம் என்றால் என்ன? 
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும்.

பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில்
பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில்
அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், மற்றும் காய்கறிப் பயிர்களும்
பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.

மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கீட்டும்
அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில்
அறுவடை செய்யலாம்.

மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.

மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும்,
சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.

நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும்
அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும்,
அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.

மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு
முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு
முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும்
புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது
இல்லை. மாறாக கிருமிகளை அழிக்கின்றன.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறொரு
பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி
செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை .

அவை இடைக்காலத்தில் பெரும்பாலும் அழிந்து
விடுகிறது.


“ஆடிப்பட்டம் தேடி விதை!' என்று சொல்வதுண்டு.

ஒரு விதை சரியான நேரத்தில், சீதோஷ்ண நிலையில் விதைக்கப்படும் போதுதான் அது முழு வளர்ச்சியடைந்து பலன் தரும். 

ஆடி 18ஆம் நாளும்
அதற்குப் பின்னர் வரும் நாட்களும் விதைகள் விதைப்பதற்கு தகுந்த காலமாக உள்ளன. எனவே
இதனை "ஆடிப்பட்டம்" என்றனர்.

பறவைகள் தன் எச்சத்தின் மூலம் ஒரு புறம் விதைக்க, விலங்குகள் இடம்பெயர்தல் மூலம் தன் உடலில்
ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளை நிலங்களில் தூவுகின்றன. 

காற்றும் நீரும் விதைகளைக்
கொண்டு சென்று, உலகின் பல்வேறு இடங்களில் சேர்க்கின்றன். வண்டுகளும் தேனீக்களும்
பட்டாம்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுகின்றன. இப்படி, இயற்கையில் அனைத்து
ஜீவராசிகளும் மரங்களையும் தாவரங்களையும் பெருகச் செய்வதில் தங்களுக்கான பங்கை ஆற்றி வருகின்றன. 

மனிதர்களாகிய நாம் நம் பங்கிற்கு
என்ன செய்கிறோம்? காய்களையும் பழங்களையும் சாப்பிடுகிறோம், மரங்களை வெட்டுகிறோம், பெருகி
வரும் மக்கள் தொகையால், பல அரிய தாவரம் மற்றும் விலங்கினங்களை அழிக்கிறோம்.

எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். அதில் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும்
சிறிதுகாலம் தாக்குப்பிடிக்கும். 

வேப்ப விதைகளை
மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்பட வேண்டும். 

நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும்.

மாவிதைகள் 15 நாட்களிலும் 
கொய்யா விதைகள்
16 நாள் வரையிலும் தாக்குப் பிடிக்கும்.

ஆகவே இந்த ஆடி 18க்கு தயாராக இருங்கள்.
உங்கள் கையினால் ஒரு விதைக்கு வாழ்வு கொடுங்கள்.

மிகவும் சுவையான கனிகளின் பருத்த திரண்ட விதைகளையே தேர்வு செய்து நட்டு வையுங்கள். 

உங்கள் குழந்தைகளையும் இதில்
அவசியம் பங்கு கொள்ளச் செய்யுங்கள்.

இதுவரை வீணே வீழ்ந்திருந்த நாம் இனிவரும் இந்த ஆடிப்பட்டத்தில் விதைபோல் முளைத்தெழுவோம்!
விருட்சங்களாவோம்!


பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்:

வெங்காயம் - வைகாசி, புரட்டாசி, மார்கழி, கரும்பு கார்த்திகை, தை,
பீர்க்கங்காய் - புடலை, பாவை - சித்திரை, ஆடி, வாழை - கார்த்திகை, மார்கழி, ஆவணி,

மரவள்ளி - கார்த்திகை,
அவரை - சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி, பருத்தி - ஆவணி, புரட்டாசி, மாசி,
கத்தரி - ஆடி, மாசி,

தட்டப்பயறு ,பாசிப்பயறு,
வெண்டை - மாசி, பங்குனி,

துவரை, மொச்சை - ஆடி,
மிளகாய், கொத்தவரை - வைகாசி, ஆனி, ஆண்டு முழுவதும் பயிரிடலாம் 

ஆமணக்கு,
ஆவணி புரட்டாசி, கார்த்திகை. தை, மாசி,

தக்காளி, பொரியல் தட்டப்பயறு,
முருங்கை - புரட்டாசி, ஐப்பசி,

மக்காச்சோளம், பட்டுவளர்ப்பு, கார்/குருவை/

எள் - ஆடி, சித்திரை,

சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி - ஆனி முதல் சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி,

ஆவணி - புரட்டாசி வரை)
சுண்டல் - ஐப்பசி, கார்த்திகை,

சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி - புரட்டாசி

நெல், - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

முதல் தை - மாசி வரை)
ஊளுந்து - ஆடி, மாசி,

குறிப்பு :
கம்பு - மாசி, பங்குனி,

மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். நாட்டுச்சோளம் சித்திரை, மாசி, கார்த்திகை, கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள்
தென்னை ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி, கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம்...

இயற்கை விவசாயம் (காலத்தின் கட்டாயம்)

இயற்கை விவசாயம் -  காலத்தின் கட்டாயம்

இயற்கை விவசாயம் இந்த மண்ணுக்கும், மனிதனுக்கும் மட்டுமல்லாமல் இந்த பூமியில்
வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்ற
ஒரே இயற்கையான பாதுகாப்பு.

பல நூறு விதமான பயிரினங்கள் நம் நாட்டில் இருந்துள்ளன என்றும் அவை காலப்போக்கில் மறைந்து
காணாமல் போய்விட்டன என இயற்கை விஞ்ஞானி
நம்மாழ்வார் கூறியுள்ளார்.

சுமார் 166 பயிரினங்கள், 50,000 நெற்பயிர் இனங்கள்,
500 சோள ரகங்கள், 500 மிளகுப் பயிரினங்கள், 1000 மாமர வகைகள், என பல பயிரினங்களும், 20 வகை
வெள்ளாட்டு இனங்களும் 42 வகை செம்மறியாட்டு இனங்களும், 15 வகை எருமை இனங்களும், 30 வகை
கோழி இனங்களும், 18 வகை விலங்கினங்களும் சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே பரிணமித்துள்ளன.

இத்தனை உயிர்களைப் படைத்து பரிணமிக்கச் செய்துள்ள
இயற்கை, மனிதனுக்கும் இப்பூமியில் வாழும் உரிமையைக்
கொடுத்துள்ளது. ஆனால், மனிதனோ தான் மட்டுமே
இப்பூமியில் வாழ பிறந்திருப்பதாக எண்ணிக்கொண்டதன் விளைவு 
இன்று நம் பூமி பெரும் அபாயத்தை ச்
சந்தித்துக் கொண்டிருக்கிறது . நாம் மட்டுமல்ல பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.

இதை புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை  அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம் மண்ணின் துயர் போக்கலாம்.


மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில்
எடுக்கப்பட்ட தடயங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே
நமது முன்னோர் பயிர் சாகுபடி நுட்பம் குறித்து அறிந்து
இருந்ததைச் சொல்கிறது என்கிறார்கள். ஆனால், இன்று
நாம் அதிக மகசூல் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் விளைநிலங்களை கொலைக்களங்களாக மாற்றி
வருகிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரிலே பூமித்தாயை நிலைகுலையச் செய்து வருகிறோம்.

நாம் விளைவித்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
உதாராணமாக மாடுகள். மனிதர்களின் வாழ்வில்
மாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. வயற்காட்டில்
ஏர் உழ, நீர் இறைக்க, வண்டியை இழுக்க எனப் பலவிதங்களிலும் உழைப்பதோடு விளைச்சலுக்குத்
தேவையான எருவினையும், உண்ண உணவினையும் (பாலாக) மாடுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு உயிரும்
பிறவற்றைச் சார்ந்தே வாழ்கிறது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல் ரீதியாக
மட்டுமே பார்த்தால் அது நம்மை அழிவினை நோக்கியே
இட்டுச் செல்லும்.

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என மனிதனை மட்டும் உயிராகப் பார்க்காமல் எல்லாவற்றையும் நம்மோடு அரவணைத்துக் கொள்வதே.... ஆன்மீகப் பார்வை.
மனிதனைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளும், கால்நடைகளும், பறவைகளும் என அனைத்தும் நலமாய் வாழ்வதற்குரிய சூழல் இந்தப் பூமியில் இருக்க வேண்டும்.
இவை ஒவ்வொன்றின் நலவாழ்வும் மற்ற உயிரினங்களின்
வாழ்வில் பின்னிப் பிணைந்தவை என்பது விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இயற்கை விவசாயம் என்பது அடிப்படை ஆதாரமாக உள்ளது. 

பூமியில் பல நுண்ணுயிர்கள் புழு, பூச்சிகள் இருப்பதால் தான், நிலம்
வளமாகி விளைச்சல் பெருகுகிறது.

இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் இடப்படும்
நிலங்களில் மண்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!
மண்புழு உழவனின் நண்பன் எனத் தெரிந்திருந்தும், இரசாயன நஞ்சுகளை நிலங்களில் விதைத்து நண்பர்களையே கொல்லும் அறிவீனத்தைச் செய்தோம். அதற்கெல்லாம் விளைவாகத்தான் இன்று பெயர் தெரியாத பல விநோத
நோய்களுக்கு மனித இனம் ஆளாகி வருகிறது!!!

விதைப்பந்து- Seed Ball

விதைப்பந்து- SEED BALL


விதைப்பந்து (Seeds Ball) என்பது களிமண் மற்றும் உரம் (compost) அல்லது பசுஞ்சாணத்தாலான உருண்டை ஆகும். இவற்றின் நடுவே மூலிகைகள் (அ) வண்ண மலர் (அ) மரம் விதைகள் இருக்கும்.

 பொதுவாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம் (அ) வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதைகள் முளைக்காது.
எனினும் விதைப்பந்தானது அவ்வாறில்லை. நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள் (அ) 
காடுகள் (அ) மலைகள் இருந்தால் இதனை வீசி செல்லலாம். அவ்விதைகள் மழை வரும் வரை எலி, எறும்பு, குருவிகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
 விதைகளை பொறுத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும். எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். இதன்போது விதைப்பந்தில் கலந்துள்ள உரம் (அ) சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். உரம் (அ) சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும். மேலும் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கியும் விடும்.
நிலத்தில் விழுந்த இந்த உருண்டைகலிலுள்ள களிமண் உருகி நிலத்தோடு ஒட்டும் மற்றும் அதிலுள்ள கலப்பு கூட்டு உரம் விதை வளர துணை புரியும்.

அவ்வாறு எறியப்பட்ட பந்துகளில் உள்ள விதைகள் முளைத்து அந்த இடமே பச்சை பசேலென்று காட்சியளிக்கும், எங்கெல்லாம் வறண்ட தரிசு நிலம் காணப்பட்டதோ அங்கு அழகிய வண்ண மலர் செடிகளின் விதைகளை தூவ நந்தவனாமகும். இந்த முறையால் சிறு பறவைகள் , பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் ஆகியன பயன்பெறும்.


எனவே ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள். பறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக விதைகளை நிலத்தில் எச்சமாக விதைத்துச் செல்கிறது. அதைப்போல் நாமும் விதைப்பந்தை விதைப்போம்.

வீரியமான விதைப்பந்து!

*தண்ணீரோடு மாட்டுச் சிறுநீர் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*மாட்டுச்சாணத்தோடு மண்புழு உரம் சேர்த்தால் வீரியம் அதிகரிக்கும்.

*கறையான் புற்று மண்ணைப் பயன்படுத்தினால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

*விதைப்பந்து தயாரிக்கச் சிறிது சாம்பலைச் சேர்த்தும் தயாரிக்கலாம். இல்லையென்றால் விதைப்பந்துகள் ஈர நிலையில் இருக்கும்போது அதன்மீது சாம்பலைத் தூவிவிட்டால் பூச்சிகள் தாக்காது.

*புளி, சப்போட்டா போன்ற மர வகைகளும் இந்த முறையில் நன்றாக வளரும்.

*கடினத் தோல்கொண்ட விதைகளைத் தண்ணீர் கலந்த பஞ்சகவ்யா, மாட்டுச் சிறுநீரில் 2-லிருந்து 4 மணி நேரம் ஊறவைத்துப் பயன்படுத்தலாம்.


விதைப்பந்து தயாரிப்பு முறை

தேவையான பொருட்கள்

களிமண் 5 பங்கு

விதைகள் 1 பங்கு

கலப்பு உரம் (அ) சாணம் 1 பங்கு

ஒரு பாத்திரம்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

கலப்பு உரம் மற்றும் விதைகளை ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கவும்.

பின்னர் இதனுடன் களிமண்ணை கலந்து, சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து பிசையவும். நீரின் அளவு அதிகமாககூடாது.

திடமான கலவை உருண்டை பதம் வந்தவுடண், பெறிய உருண்டையாக 
பிடித்து அதிலிருந்து சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

பிறகு இரவு முழுவதும் காய விடவும், காலையில் விதைப்பந்து தயார்.

இறுதியாக இந்த விதைப்பந்து எங்கு பசுமையாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கு வீசிவிடவும்.

இந்தியா விவசாயம்

இந்தியா விவசாயம்.

இந்தியா

ஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தியா 32 லட்சத்து 82 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது. இங்குச் சுமார் 126 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி, `2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 60.5 சதவிகித நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

மேலும், 50 சதவிகித மக்கள் விவசாய நடவடிக்கை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய மக்களில் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 18 சதவிகிதம் வரை விவசாயத்தின் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. 

2013-14 -ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் வளர்ச்சி கண்ட விவசாயம் 2016-17-ம் ஆண்டு முதல் சற்று சரியத் தொடங்கியுள்ளது. இந்தியா உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களில் 85 சதவிகிதம் பொருள்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. 

மீதமுள்ள பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா அரிசி, பருப்பு, கோதுமை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. மேலும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாகத் திகழ்கிறது. 

இந்தியா தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 லட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது. 

வாழை வகைகள்

வாழை வகைகள்

பேயன் வாழைப்பழம், 

ரஸ்தாளி வாழைப்பழம், 

பச்சை வாழைப்பழம், 

நாட்டு வாழைப்பழம்

மலை வாழைப்பழம், 

நவரை வாழைப்பழம், 

சர்க்கரை வாழைப்பழம்

செவ்வாழைப்பழம்,

 பூவன் வாழைப்பழம்,

கற்பூர வாழைப்பழம், 

மொந்தன் வாழைப்பழம், 

நேந்திர வாழைப்பழம், 

கரு வாழைப்பழம், 

அடுக்கு வாழைப்பழம்

வெள்ளை வாழைப்பழம்

 ஏலரிசி வாழைப்பழம், 

மோரீஸ் வாழைப்பழம் 

என பலவகைகள் உள்ளன.

ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை

ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை

10 கிலோ நாட்டுப்பசு சாணி, 10 லிட்டர் கோமியம், ஒரு கிலோ கடலை மாவு ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, வயலில் இருந்து ரசாயனம் கலக்காத இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பிடி ஈர மண் எல்லாவற்றையும் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு 200 லிட்டர் தண்ணீரில் விட்டு இரண்டு நாள் நிழல்ல காய வைக்கணும்.

இந்த கலவையை காலையிலும் மதியமும் வலது புற வாக்கில் சுற்ற வேண்டும். இதை வளர்ச்சி
ஊக்கியா பயன்படுத்தலாம். இது ஒரு ஏக்கருக்கான 20 நாட்களுக்குத் தேவையான அடிஉரம்.


கிராம்பு குறித்த சில தகவல்கள்

கிராம்பு குறித்த சில தகவல்கள்:

மணப்பொருளாகவும், மூலிகைத்தன்மை
உடையதுமான கிராம்பு தொன்றுதொட்டுச்
சித்தர்களாலும், தற்காலத்தில் மருத்துவப்
பயன்பாடுகளுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு
சந்தையில் அதிகம் தேவைப்படும்
பொருளாக மாறிவருகிறது.

சைவ உணவான பாயசம், கடலை
குருமா, அசைவ உணவான பிரியாணி,
உட்பட பல உணவுப்பொருட்களில்
மணத்தையும் சுவையையும் கூட்டவல்லதாக
கிராம்பு உள்ளது.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும்
அருமருந்து கிராம்பு..

பல்வலி வந்தால், வலிக்கும் இடத்தில்
ஒரு கிராம்பை வைத்து அழுத்திப்பிடித்தால்
பல்வலி போயே போச்...

வாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு
கிராம்பு நல் மருந்து.

ஆயுர்வேத மருந்துகளில் கிராம்புக்கு
முக்கிய இடம் உண்டு. செரிமானக்குறைவு,
சுவாசக் கோளாறைசரி செய்ய உதவும் கிராம்பு

கிராம்பைப் பொடி செய்து
வைத்துக்கொண்டு தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குறையும். கொழுப்பைக் கரைக்கும். |

வெந்நீரில் கிராம்புத் தைலம் இரண்டு சொட்டு விட்டு ஆவி பிடிக்க தொண்டை வலி, கபக்கட்டு, காய்ச்சல், ஜலதோஷத்துக்கு
நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பில் கார்போ ஹைட்ரேட்,
ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச்
சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ்,
தயமின், ரிபோ பிளேவின், நயாசின்,
வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை
உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,
தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

பற்பசை, செண்ட், சோப் என கிராம்பு
பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்கள்
நிறைய உண்டு.

மீன் அமினோ அமிலம் தயாரிப்பது எப்படி?

மீன் அமினோ அமிலம் தயாரிக்க

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்துல 5கிலோ மீன் கழிவு அல்லது மீன் துண்டுகளைப் போட்டு 5 கிலோ
நாட்டு சர்க்கரையும் போட்டு நல்லா குலுக்கி இறுக்கமா மூடி 45 நாள் நிழல்ல வைக்கணும். 

45 நாள்ல இரண்டும் மிக்ஸ் ஆகி பசை மாதிரி மாறி இருக்கும்
இதை நல்லா வடிகட்டி 10 லிட்டர் தண்ணீர்க்கு 150-மிலி மீன் அமினோ அமிலம்ங்கிற கணக்கில் நல்லா
கலந்து நெற்பயிரில் தெளிக்கலாம்...

விவசாயம் இயற்கை விவாசாயமாக மாறிய கதை

விவசாயம் இயற்கை விவாசாயமாக மாறிய கதை 

மண் மணம் மாறாமல், நீர்வளம் குறையாமல், சுற்றுச்சூழல் அழியாமல், உணவு குணம் குன்றாமல், உடல்நலம் கெடாமல் நமது முன்னோர் பின்பற்றிய உழவுத் தொழில், தற்போது இயற்கை வேளாண்மை என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கையோடு இயைந்த வேளாண் நடைமுறைகளைத்தான் உழவு என்று நமது முன்னோர்கள் கூறிவந்தனர். 

1960-களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்காக அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் 
பசுமைப் புரட்சி.

அதிக மகசூல் தரும் கலப்பு விதை, வேதி இடுபொருள், நீர்ப்பாசனம் போன்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் மூலம் உணவு உற்பத்தி பெருக்கப்பட்டதையே பசுமைப் புரட்சி என்றழைக்கிறார்கள்.

உணவு உற்பத்தியைப் போலவே நோய் உற்பத்தியும் இந்தியாவில் பெருகவே, இதற்கான காரணத்தை தேடியபோது, பசுமைப் புரட்சி தந்த பக்கவிளைவுகள் என்று தெரியவந்தது. அதனைத் தடுக்கும் விதமாக, 2000-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புத்துயிர் பெற்றுள்ளது இயற்கை வேளாண்மை எனும் நமது பழைமையான உழவு முறை..

விவசாயம்

இந்தியா 80 விழுக்காடு விவசாயத்தை சார்ந்து இருந்த நாடு. 

 விவசாயம், பயிரிடுதல், இதுவே இந்தியாவின் பிரதான தொழிலாக இருந்தது அன்று. 

அது இல்லையென்றால் தென்னிந்திய விவசாயத்தின் தனிச்சிறப்பான நெல், கரும்பு மற்றும் உயிர் காக்கும் சஞ்சீவினிகளான வெந்தயம், பிப்பிலி, கடுகு, கிராம்பு போன்ற சுவையூட்டிகளும் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்குமா? அவையெல்லாம் எற்றமதி செய்யப்பட்டதற்கான ஒரு ஆதாரமாக, இங்கே பிப்பிலி என்று அழைக்கப்பட்ட மிளகு தான் உலகெங்கும் பெப்பெராக பெயர் பெற்றிருக்கிறது, அரிசி தான் ஆங்கிலத்தில் ரைஸ் போன்ற தகவல்கள் இங்கிருக்கும் வளங்களோடு, விவசாயமும் பண்டை மாற்றத்திற்கு ஏதுவாக அமைந்தது என்பதை நாம் உணரலாம். 

இயற்கை விவசாயம் என்பது பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் ஒரு முறை ஆகும், இது பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள், ஆண்டிபயாட்டிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களைப் பயன்படுத்துவதைத் தவிற்த்து இயற்கை எச்சங்களைக் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும் வேளாண் முறையாகும். அத்தகைய இயற்கை விவசாயம் பற்றியதே இந்தக் கட்டுரை.

வேளாண்மை தேன்றிய கதை

இந்தியாவின் தொன்மையான விவசாய முறை என்பது இயற்கை விவசாயம் தான். இயற்கை விவசாயம் என்பது பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் ஒரு முறை ஆகும். இது பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள், ஆண்டிபயாடிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களைப் பயன்படுத்தி பயிரிடும் முறையைக் காட்டிலும் சிறந்தது. 3000 வருடங்களாகத்தான் இயற்கை விவசாய முறை உலகெங்கும் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு முன்பெல்லாம் விதைத்து நீர் பாய்ச்சு பின் அறுவடை செய்யும் முறை தான் வழக்கத்தில் இருந்திருக்கிறது. அமெரிக்க பயிர் சார் ஆராய்ச்சி கழகம் ஐரோப்பிய பயிர்களை கொண்டு செய்த ஆராய்ச்சியில்,இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கும் பயிர்களில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் விளைவாகத்தான் சில விஞ்ஞானிகள் அதனினும் ஊட்டச்சத்து கொண்ட பயிர்களை விளைவிக்கும் நோக்கம் கொண்டு செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். 

1905 ற்கு பிறகு தான் இந்தியாவில்  பூச்சிக்கொல்லிகள் என்ற ஒன்று விவசாயிகளின் பார்வைக்கு பட்டது.

வேளாண் துறையில் ஆராய்ச்சி தொடங்கிய காலம் எதுவென்று யாராலும் குறிப்பிட முடியாது. 

ஏனென்றால் சேற்றில் காலை வைத்து நடவு நட்டு, பயிர்களை பாதுகாக்க முயற்சி எடுத்த ஒவ்வொரு விவசாயியும் ஒரு வகையில் ஆராய்ச்சியாளன் தான். ஏனெனில், ஒரு பயிரை காப்பாற்ற தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப பயிரைப் பாதுகாக்க அவன் செய்கின்ற செயலிலும் பரிசோதனைகள் இருக்கின்றன.

ஒரு சிறிய உதாரணம்: 

செம்மண்ணில் எள்ளும் நெல்லும் வளமாக விளையும் தான். ஆனால் கடுமையான மழைப் பொழிந்தால் நெற்கதிர்கள் ஒரளவுக்கு தாக்குபிடிக்கும், ஆனால் எள்ளுக்கு அப்படியில்லை. இதனை அனுபவத்தினால் தான் உணர்ந்து தெரிந்து கொள்ள முடியுமே தவிர நான்கு சுவற்றுக்குள் படித்து தெரிந்துகொள்வதனால் அந்த குறிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துவிடுவோம் ? 
என்பது ஒரு முக்கியமான கேள்வி.
  
வேளாண் ஆராய்ச்சிகள்

இந்தியாவில் 1905 ஆம் ஆண்டு தான் ”முதல் வேளாண் ஆராய்ச்சி” தில்லியை தலைமை இடமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. 

இந்தியா “தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம்” என்ற ஒரு அரசு சார் விவசாய ஆராய்ச்சி மையத்தை 1905 ல் தொடங்கப்பட்டு நமது நாட்டு விவசாயிகளுக்கு தேவையான பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. 

1905ல் இந்த மையம் தொடங்கப்பட்டிருந்தாலும் 1950 களில் தான் வேளாண் சார்ந்த விரிவான ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டது. அது படிப்பறிவு இல்லாத பல விவசாயிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தது.

செயற்கை உரம் பயிருக்கு விளைவிக்கும் தீங்குகள் என்னவென்றால் ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் செயற்கை உரங்கள் பெரும்பாலும் பெட்ரோலியப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செயற்கை உரங்களின் மூலம் விவசாயிகளுக்கு அதிக மகசூல் தர முற்பட்ட ஆராய்ச்சியில் பயிருக்கு தகுந்த ஊட்டச்சத்தை தரும் உரம் தயாரிக்க முடியாமல் போனது தான், செயற்கை உரம் கொண்டு விவசாயம் புரிவதை தவிற்க வேண்டி இருக்கிறது. சரி இயற்கை உரம் என்றால் என்ன ? இதனை எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று இருக்கின்றது அல்லவா. அதில் மக்கும் குப்பை, சிறிது காலம் மக்கிய பிறகு தனது தன்மை மாறி இருக்கும் அது தான் நமது மண்ணிற்கு உரம், பயிருக்கு பலன் தரும் இயற்கை உரம். பல இயற்கை உரங்கள் இருக்கின்றது. மக்கும் குப்பை மட்டும் அல்லாது இறந்த செடி கொடி மரங்கள், இறந்த உயிரினங்கள், காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் போன்றவைகளை குழிக்குள் போட்டு விவசாயிகளின் மீது அதிக அக்கறையுடனும் மண் புழுக்கள் கொண்டும் இயற்கை உரங்களை செய்து தரும் தன்னார்வலர்கள் கிராமப்புரங்களில் உள்ளனர்.

மேலும் மரபியல் விஞ்ஞானி       
எம். எஸ் சுவாமிநாதன் தனது பெயரிலேயே ஒரு தான்னார்வ ஆராய்ச்சி மையத்தினை 1988 ல் நிறுவி விஞ்ஞானப்பூரவமாக பல ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கினார். 
அன்று முதல் அவர் வழிகாட்டுதலில் இன்றும் வேளாண் சார்ந்த பல ஆராய்ச்சிகளை மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது அந்த மையம். பல முக்கிய ஆராய்ச்சிகளை செய்து வரும் அந்த மையம் கடற்கரை சார்ந்த விவசாய ஆராய்ச்சி திட்டம், பருவநிலை மாற்றம், பல்லுயிர், உயிரித்தொழில் நுட்பம், எகோடெக்னாலஜி, உணவு பாதுகாப்பு, தகவல் கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி என்று பல அவசியமான ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது. அதில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் 

“கடல் நீர் கொண்டு சதுப்பு நிலத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியும் ஒன்றாகும். 

இது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட வினோத ஆராய்ச்சி. இதன் விவரங்களை நேரில் அணுகி விளக்கம் பெற நாம் நமது நாகை மாவட்ட கடலோர விவசாயிகளை அனுகலாம். இந்த வேளாண் ஆராய்ச்சி மையமே இந்தியாவில் விவசாயத்திற்கென்று தொடங்கப்பட்ட முதல் தனியார் ஆராய்ச்சி மையாமாகும். இதன் பல முயற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் இந்திய அரசு வேளாண் ஆராய்ச்சி மையமே பாராட்டியுள்ளது.

இவர்களது ஆராய்ச்சிகளை இந்திய விவசாயிகள் ஆதரித்தாலும் வரவேற்றிருந்தாலும், வேளாண் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் அதன் சிந்தனைகளுக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளையும் துணிச்சலாக எதிர்த்தார் ஒருவர். அவர் தான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அவர் இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர். இவர் தெரிவெடுத்த இந்த பார்வையால் தான் இந்திய விவசாயிகள் விவசாயத்தில் நாம் தவறவிட்ட பல உன்னதாமான விவசாய முறையின் பலனை உணர்ந்தனர் எனலாம்.

விவசாயிகள் அதனை தவறவிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவெனில், முதன் முதலில் செயற்கை உரங்களை இந்தியாவில் பிரபலமடையச் செய்த போது செயற்கை உரங்களின் பயன்பாடு தான் சிறந்த விவசாயத்திற்கான வழி என்று விவசாயிகளின் மனதில் பதியும் வண்ணம் பிரகடனப் படுத்தியதே ஆகும். செயற்கை உரங்களின் சிறப்புகளாக அவர்கள் கூறிய கவர்ச்சியான ஒன்று என்னவென்றால் 
”அதிக மகசூல்” என்பது தான்.

இயற்கை விவசாய முறை

பயிரைத் தேர்ந்தெடுத்தல் :முதன் முதலாக பயிரிடுவதற்கான நிலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் நிலத்திற்கேற்ற பயிரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பருவனிலை மாற்றத்தை குறிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். பூச்சிக்கொல்லிகளையும் செயற்கை உரங்களையும் அறவே தவிற்க வேண்டும். தேர்வு செய்த நிலத்தில் எந்த பகுதியில் மட்டும் பயிரிட இருக்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மண் வளத்தை சோதித்தல்

நிலத்தில் உள்ள மண்ணின் தரத்தையும், தன்மையையும் குணத்தையும் சரி பார்க்க வேண்டும். அதனை தெளிவாக தெரிந்து, மண்ணின் குணத்தையும் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். னாம் தேர்வு செய்த நிலத்தில் அதற்கு முன்பு செயற்கை உரங்கள் பயன்படுத்தியிருந்தனர் என்றால் அது எந்தெந்த செயற்கை உரங்கள் என்று பட்டியல் போட்டு தெரிந்து கொள்ள் வேண்டும். அந்த நிலத்தில் பயிரிடத் தேவையான சாதனங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

தாவர ஆரோக்கியம்

80 முதல் 90 விழுக்காடு சத்துக்கள் மண்ணிலிருந்து தான் கிடைக்கின்றது. அந்த தாவரத்திற்கு தேவையான இயற்கை உரங்களை நேரடியாகவோ அல்லது தண்ணீர் அல்லது உகந்த திரவத்தில் கரைத்து இடுவது. தாவரத்திற்கு தேவையான ஊட்டச்ச்த்தை சரியான அளவில் இடுவது.

பூச்சிகள்

பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியை நன்கு கற்றறிந்து தேவையான பூசிகள் எது என்று கண்டறிந்து அதனி தாவரம் இருக்கும் பகுதிக்கு உட்படுத்தி அதனை கண்கானிக்க வேண்டும். அதன் பலனையும் நன்கு ஆய்ந்து கண்கானிக்க வேண்டும்.

இடற்பாடு மற்றும் குறைபாடுகள்

தாவரத்திற்கென்று ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் அல்லது தொற்றுகள் இருப்பின் அதனை கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும்.

களைகளை கண்டறிந்து அகற்றுவது தேவையான ஒன்றாகும். இல்லையெனில் தாவரத்திற்கு இடப்படும் உரங்களும் ஊட்டச் சத்துகளும் பயனற்று போகிவிடும். அதில் பாதி பயனை எந்த பலனும் அளிக்காத களைகளுக்கு சென்று, முயற்சி வீனாகும் நிலை ஏற்படும்.

வளர்ந்து வந்த பயிரைப் பயன்பாட்டிற்கு அறுவடை செய்வது. அதனை பாதுகாப்பது. அதற்கு பின் அறுவடை செய்த நிலத்தை அடுத்து பயிரிட ஆயத்த படுத்துவது. பின் மண்ணின் அதே பயிரைப் பயிரிடாமல், சூழலுக்கேற்ற மாற்று பயிரைப் பயிரிடுவது..

இயற்கை விவசாயம் வழக்கொழிந்த அவலம்

உண்மையில் பூச்சிகள் நமது விவசயிகளுக்கு பெரிய சவாலான ஒன்றாகத்தான் இருந்தது. கால மாற்றத்திற்கும் வாழ்வியல் மாற்றத்திற்கும் ஏற்ப பயிர் வளர்ப்பு சார்ந்த புது வகை பிரச்சனைகளும் விவசாயிகளுக்கு தோன்றியது. அந்த சம காலத்தில் தான் பூச்சிக்கொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். அது அறிமுகப்படுத்தும் காலத்தில் விவசாயிகளுக்கு, பயிர்களை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கும் அந்த பூச்சிகளின் பங்கும் பயிரின் வளர்ச்சிக்கு உகந்தது என்பது தெரியாது. உண்மையில் அந்த புச்சிகள் பயிர்களின் நண்பன். ஆனால் அந்த புரிதல் விவசாயிகளுக்கு இல்லை. இதனை பூச்சிக்கொல்லியை தயாரித்தவர்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி விவசாயம் செய்வதே அமெரிக்கா போன்ற நாடுகள் பல ஆண்டு காலமாக  பின்பற்றி வந்த முறை. ஆதலால், தனது விவசாய முறையை உலகெங்கும் பிரகடனப்படுத்தவே, செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வியாபாரப்படுத்தினரா அல்லது அவர்கள் வணிகம் சார்ந்த பார்வையில் லாபம் ஈட்டும் நோக்கம் கொண்டு செயல்படுத்தியிருக்கின்றனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இந்த பூச்சிக்கொல்லிகள் கொஞ்சம் கொஞ்சமாக நமது மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் விவசாயிகள் பல ஆண்டுக்காலமாக இதனைப் பயன்படுத்தி வந்தனர். பூச்சிக்கொல்லிகளும், செயற்கை உரங்களும் மண்ணை மலடாக்குவதற்கு அதில் உள்ள அதிக அளவில்லான திரவங்களே காரணம் என்ற ஒரு தோராயமான புரிதல் போதும் இந்த கட்டுரையை மேலும் படிக்க. 21 ஆம் நூற்றாண்டில் இதன் விளைவாக ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல்களும், மேலும் நீர் நிலைகளில் போதிய நீர் இல்லாமையும், போதிய மகசூல் இல்லாமல் கடன் பட்ட விவசாயிகளும் செய்வதறியாது தவித்தனர். இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு வந்த பற்பல் சிக்கல்கள் தான் முதன் முதலில் அவர்களை சற்று சிந்திக்க வைத்தது. அப்போது கூட சொட்டு நீர் பாசனம் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது விவசாயிகளுக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. நம்மாழ்வாரும் கிட்டத்தட்ட சம காலத்தில் தான் செயற்கை விவசாயத்திற்கு எதிரான தனது போராட்டத்தை தொடங்கினார்..

இயற்கை விவசாயமும் அதன் நம்பிக்கையும்

செயற்கை விவசாயத்தையும் பன்னாட்டு நிறுவனத்தின் நோக்கத்தையும் அழிக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோலாக இருந்ததாகத் தெரியவில்லை. நமது மண்ணின் வளத்தை முற்றிலும் அழித்துவிடக்கூடிய ரசாயனங்களையும், ஆண்டிபயாட்டிக்குகளையும், பயிருக்கு துணை போகாத பூச்சிக்கொல்லிகளையும் தான் அவர் எதிர்த்தார். அதன் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தனது கடைசி மூச்சு இருக்கும் வரை போராடினார். இவர் தமிழ் நாட்டில் இருந்து தான் இந்த அறவழிப் போராட்டத்தை நிகழ்த்தினார். ஆனால் இவரது நடவடிக்கைகளை சமூக ஆர்வலர் மற்றும் விவசாயி அண்ணா ஹசாரே பாராட்டிய பிறகு, இவரது பார்வை தமிழகம் தாண்டி இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. இயற்கை விவசாயத்திற்கென்று ஒரு தன்னார்வ தொண்டு மையம் “வானகம்” என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி மிக துரிதமாக பல இளைஞர்களின் மனதில் விவசாயம் பயிலுவதின் அவசியத்தை விதைத்தார். இன்றும் சில ஐ டி துறையில் பணிபுரியும் சிற்சில பொறியாளர்கள் விவசாயத்தை செய்யும் விருப்பம் கொண்டு, விவசாயம் சார்ந்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள் என்றால் அதற்கு நம்மாழ்வார் போன்றோர் முக்கிய காரணம். இன்று சொட்டு நீர் பாசனத்தின் அவசியத்தை மட்டுமல்ல ஒற்றை நெல் சாகுபடியும் சாத்தியம் என்ற புரிதலுக்கு பல விவசாயிகள் வந்திருக்கின்றனர்..

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட ஒரு ஐ டி தொழிலாளி, தான் பணிபுரியும் துறையில் ஈடுபாடு குறைந்ததால், வேலையை விட்டுவிட்டு ஒரு முழு நேர விவசாயியாக மாறியதாக கூறி, தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

இன்றும் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு சென்று பார்த்தால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காய்கறிகளை வட மாநிலத்திலிருந்து கொண்டு வரும் வசதி கொண்ட பல லாரிகள் நிற்கும். அதே சமயத்தில் ஊரெங்கும் “ஆர்கானிக் வெஜிடபுள்ஸ் ஷாப்” என்கிற கருத்தியலில் தனியாக பிராண்ட் தொடங்கி தான் லாபம் சம்பாதிக்கும் ஆசையையும் கார்ப்புரேட்டுகளுக்குள் தூண்டி விட்டிருக்கிறது, இயற்கை விவசாயத்தை மக்கள் அங்கீகரித்த பார்வை. இது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் தான். விளை நிலங்களை பிளாட் போட்டு விற்கும் வழக்கத்தையும் சட்டம் போட்டு சிறிது காலம் தடுத்து வைக்கத் தான் முடிந்தது சட்டப் போராளிகளால். ஆனால் இளைஞர்கள், குறிப்பாக கிராமத்தில் பிறந்து வாழ்ந்த இளைஞர்கள் தெளிவாக சிந்தித்தால், விவசாயம் காக்கப் படுவது மட்டுமல்ல, விவசாயம் என்றாலே இயற்கை விவசாயம் தாம் என்ற நிலை கொண்டு வர முடியும். இந்த கட்டுரை மூலமாக நான் ஒவ்வொரு விவசாயிக்கும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நமது மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் மக்காத பிளாஸ்டிக் பைகள், பாலிதீன் பைகள் ஒரு விவசாயியான நான் என் உயிர் மூச்சு இருக்கும் வரை பயன்படுத்தமாட்டேன் என்ற ஒரு உறுதிமொழியை ஒவ்வொரு விவசாயியும் எடுத்துக்கொள்வது, விவசாயத்திற்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கே நன்மை பயக்கும். விவசாயத்தின் நன்மைக்கு தேவையான வழிகளை நீங்களும் கீழே பகிரலாம்...

நன்றி: 
சமத்துவ சாரதி

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...