Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

பாரதியார்

பாரதியார்




சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!


எட்டயபுரம், பிறந்த ஊர், சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர், மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். 

வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்

எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ½ ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி,'பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்த

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையம் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள் பாரதி என்றால் சரஸ்வதி

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்

14 ½ வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்

முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே, `சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை

பாரதிக்கு பத்திரிகை குரு `தி இந்து’ ஜி சுப்பிரமணிய ஐயர், அரசியல் ஆசான், திலகர், ஆன்மிக வழிகாட்டி அரவிந்தர், பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி

தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும். `பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. 

`ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். `என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்


கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிய மாட்டார். பூணூல் அணிய மாட்டார். `பூணுலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது

கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் 
வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!


எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு


 தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி

 தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது

 விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்

 ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். 

தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 
20 –க்கும் குறைவானவர்களே

இரட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன்


தலித் மக்களுக்காக போராடிய போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் !!!!  

" நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும்சதையாக இருந்து தலித்களுக்குபாடுபட்டோம் "

"இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும்நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வதுஅவர்களின் சுயநலமாகும். 

நம்முடையஇடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறிவந்து கொண்டிருக்கிறோம் "
ரெட்டமலை சீனிவாசன்

செனைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டுவட்டத்தில் கொளியாலம் என்னும்கிராமத்தில், ரெட்டமலை ஆதிநாயகிதம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 7, 1859 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியஅரசியலுக்கு காந்தி வருவதற்கு முன்பே, இமண்ணில் தீண்டாமை, சாத்தியகொடுமைகளை எதிர்த்து போராடியவர்

1887 ஆம் ஆண்டு அரங்க நாயகியை மணந்தார்

18891 ஆம் ஆண்டு பறையர் மஹா ஜன சபையை நிறுவி தீண்டாமைகொடுமையை எதிர்த்தார்

1893 - பறையர் என்ற வார இதழை துவக்கி தலித்மக்களின் விடுதலைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

1894 - பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்தினார்

1895 - சென்னைக்கு வருகை தந்த ஆளுநர் லார்ட் எல்ட்சின் அவர்களிடம்தமிழகத்தில் நிலவிய தீண்டாமை, சாத்திய கொடுமைகளை குறித்தும், தலித்கள்சரிசமமாக வாழ கல்வி , வேலைவாய்ப்பு அரசியல் பற்றி ஒரு பெரிய கோரிக்கைவிண்ணப்பம் ஒன்றை நேரடியாக கொடுத்தார்
1897 - சென்னை விக்டோரியா மண்டபத்தில் பூர்வீக குடிமக்களின் மாநாடுநடத்தினார்

1899 - சென்னையில் உள்ள வெள்ளைக்காரர்களின் வீட்டில் பட்லராக பனிசெய்தவர்களின் குறைகளை களைய இரவு 11 -மணிக்கு பிறகு பொது கூடம்ஒன்றை சென்னை ராயபேட்டையில் உள்ள தூய வெசுலியன் ஆலயத்தில் நடத்திஆட்சியாளர்களுக்கு தெரிவித்தார்

1901 - இங்கிலாந்து சென்றார் 1904 - தென் ஆபிரிக்க , நேட்டலில் உள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பலராக பனி புரிந்தார் .

அங்கே பணியாற்றி கொண்டிருந்த காந்தி அவர்களுக்கும்மொழிபெயர்பாளராகவும் இருந்தார் அபோதுதான் அவருக்கு தமிழ் கற்றுகொடுத்தார் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்கு கற்றுகொடுத்தார்.

1921 மீண்டும் சென்னைக்கு வந்தார் அப்போது அரசியலாக பரிணமித்துள்ளநீதிகாட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1923 ஆண்டுமுதல் 1938 ஆண்டுவரை சென்னை சட்டப்பேரவை உறுபினராகஇருந்து பணியாற்றினார் அப்போது தலித்களை பிற சாதி இந்துக்கள் போல் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். பொதுச்சாலையில் நடக்கவும் பொது கிணற்றில்தண்ணீர் எடுக்கவும் பொது இடங்களில் அரசு அலுவலங்களில் நுழைவதற்குஉரிமை அளிக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் எனசட்டசபையில் உரையாற்றினார். இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் 1925ஆண்டு புனித ஜார்ச் கோட்டை அரசுப்பதிவிதழ் 1 A / 2660 ( No . L .X .M ) இன் கீழ்தலித் மக்களும் பிறரைப்போல சமமாக மதிக்கப்பட வேண்டுமென அரசுஆணையிட்டது .

1926 ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின்சேவையை பாராட்டி அவருக்கு " ராவ்சாகிப்" என்ற பட்டத்தை அரசு வழங்கிகௌரவித்தது.

1928 தலித்கள் கல்வியால் தான் முனேற முடியும்என்ற அடிப்படையில் ஒரு "கல்வி கழகத்தை"ஆரம்பித்தார். அதன்மூலம் ஏழை மாணவர்களைகல்வி கற்கவும் செய்தார்

1928 ஆண்டு ரெட்டமலை சீனிவாசனின்துணைவியார் அரங்கநாயகி அம்மாள் தமது 60வயதில் இயற்கை எய்தினார். அம்மையாரின்கல்லறையில் ..தீண்டப்படாத மக்கள்பொதுச்சாலையில் நடக்கவும், பொது கிணற்றில்குடிநீர் எடுக்கவும் உரிமை வாங்கி தந்த 1925 ஏப்ரல் 28ஆம் நாள் அரசு வெளியிட்ட தீண்டாமைஒழிப்பிற்கான அந்த அரசு ஆணைபொறிக்கப்பட்டுள்ளது.

1930 - லண்டன் முதல் வட்ட மேசை மாநாட்டிலே 5 ஆவது மன்னரிடம்உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள். ஆனால் ரெட்டமலை சீனிவாசன் தன கோர்ட் பக்கெட்டில் " ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்டஅடையாள அட்டையை அணிந்திருந்தார். மன்னர் கை குலுக்க முன்வந்த போதுரெட்டமலை சீனிவாசன் அதை மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டுஉங்களுக்கு ஒட்டிக்கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்குகை கொடுக்க முடியும்? " என கேட்டார்." இந்தியாவில் உள்ள தீண்டாமை,சாதிகொடுமை, பற்றி உங்களோடு விவரிக்க எனக்கு தனியாக நேரம் கொடுக்கஉறுதியளிதால் நான் உம்மோடு கை குலுக்கிறேன்" மன்னர் சரி என்றதும்அருகில் சென்று மன்னரோடு கை குலுக்கினர் இம்மாநாட்டில் தீண்டபடாதமக்களுக்கு அரசியல் அதிகாரம், கல்வி கற்க உரிமை, வயது வந்தோர்அனைவருக்கும் வாக்குரிமை, சட்ட சபையில் அரசியல் பிரதிநித்துவம் போன்றமிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

1931 - ரெட்டமலை சீனிவாசன் தலித்மக்களுக்கு செய்த பணிகளை பாராட்டி அரசுஅவருக்கு " ராவ் பகதூர் " என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

1931 செப்டம்பர் - இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டுபுரட்சியாளர் அம்பேத்கருக்கு உற்ற துணையாக இருந்து தலித்மக்களின்விடுதலைக்கு போராடினார். தீண்டாமை ஒழிப்பு, கல்வி உரிமை, அரசியல்,பொருளாதார உரிமைகள், தனித்தொகுதி ஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமைபோன்ற கோரிக்கைகளை ஏற்றுகொண்டு உடனே மன்னர் அரசனை பிறபித்தார்.

1932 செப்டம்பர் 20 ஆம் நாள் ஐந்தாம் ஜார்ச் மன்னர் அளித்த அரசு ஆணையாகியதீண்டபடாத மக்களுக்கு வழங்கப்பட தனித்தொகுதி இரட்டை வாக்குரிமையைஎதிர்த்து காந்தி ஏரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.அணைத்து சாதி,மத தலைவர்கள் ஒன்று கூடி புரட்சியாளர் அம்பேத்கரிடம்காந்தியை காப்பாற்ற வேண்டுமென கேட்டுகொண்டனர் அதனடிப்படையில் 1932செப்டம்பர் 26 ஆம் நாள் அனைவரும் ஒன்றுகூடி பூனாவில் தலித் மக்களுக்குகிடைத்த தனி தொகுதி உரிமையில் சில மாற்றங்களுடன் ஒப்புக்கொண்டார்.

1936 ஜனவரி 1 இல் ரெட்டமலை சீனிவாசன் சமூக பணிகளை பாராட்டி அரசுஅவருக்கு "திவான் பகதூர்" பட்டம் கொடுத்து ஊக்கிவித்தது.

1937 சென்னை மாநில முதல்வராக இருந்த போது, ஜமின் முறை ஒழிக்கப்பட்டபோது ஜமின்தரர்கள் நிலங்களை உழவர்கள், விவசாயிகள் கைப்பற்ற வேண்டும்என அறிக்கைவிட்டார்.உழுபவனுக்கே நிலம் சொந்தமென முழங்கினார்.

1937 ரெட்டமலை சீனிவாசனின் தொண்டுகளை பாராட்டி திரு வி க அவர்கள்"திராவிடமணி" என்ற பட்டத்தை வழங்கினார்

1938 - ஆகஸ்ட் 27 ஆம் நாள் தீண்டபடாத மாநில அட்டவனைபட்டியல்முன்னேற்ற ஆலோசனை வழங்கல் வாரிய அமைப்பின் ஆலோசகராகநியமிக்கப்பட்டார்

50 ஆண்டுகளுக்கு மேல் தலித் விடுதலைக்காக தொடர்ந்து அரும்பணியாற்றியமாபெரும் போராளி ரெட்டமலை சீனிவாசன் அவர்கள் தனது 85 வயதில் 1945செப்டம்பர் 17 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

அஞ்சலை அம்மாள் -கடலூர்

 அஞ்சலை அம்மாள் -கடலூர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தியாகங்கள் பல புரிந்த வீரர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கிடைப்பது என்பது அரிதுதான். எத்தனையோ தியாகிகளின் வரலாறு கால ஓட்டத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து வெளியில் தெரியாமலே பொய்விட்டது. வேறு சிலரது வரலாறோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படாத காரணத்தாலேயே மறக்கப்பட்டும் விட்டது. ஒரு நாட்டின் தியாக வரலாறு முறைப்படி அரசாங்கத்தின் முத்திரையோடு பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட தியாகிகளை மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். குறைந்த பட்சம் சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களிலாவது அவர்களது நினைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமாகாத சில பெயர்களில் கடலூர் அஞ்சலை அம்மாளும் ஒருவர்,  இவரது கணவரும் ஒரு தியாகி. இவரது மகளும், மருமகனும்கூட தியாகிகள். இப்படி குடும்பமே தியாகிகள் குடும்பமாக இருக்கும் ஒருசிலரில் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்று. 


கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும்.

”விடுதலைக்கு மகளிரெல்லாம் 
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா! 

”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்) 

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார். 

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்...

1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் : 

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார். 

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்) 
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார். 

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம். 
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்!


”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!



அஞ்சலை அம்மாள்:
அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 
1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 
1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். 

சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


மரத்தடியில் கடலூர் அஞ்சலையம்மாள் – செல்வநாயகி 

“நேற்று என் தந்தை தோண்டினார்
நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி
இன்று நான் தோண்டுகிறேன்
அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன
நாளை என் மகன் தோண்டினால்
எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?” 

இது மாதிரி நாட்டு நிலைமையை நச்சென்று பேசும் கவிதைகள் நாம் முயலாவிடினும் மனதில் பதிந்துவிடுகின்றன. தீவிரவாதம் இப்படியே தொடர்ந்தால் நாளை நாடு இந்தக் கவிதையின் கடைசி வரி சொல்வது போல்தான் இருக்கும். வன்முறையை வளர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கும் கணிசமான பங்குண்டு இப்போது. இது தவிரவும் சில வேடிக்கைகள். அண்மையில் வெற்றிபெற்றிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு “நாங்களே காரணம்” என்று கட்சிகளுக்குள் நடக்கும் கூத்துகளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். 

நாட்டு விடுதலைக்காகக் குடும்பத்துடன் சிறைக்குப் போனவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது இன்றைய தலைவர்களை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது.
கடலூர் அஞ்சலையம்மாள் தன் கணவர், மகள், மருமகன் எனத் தன்னோடு சேர்த்து தன் குடும்பத்திலிருந்து நான்கு பேருடன் இந்திய விடுதலைக்குப் பங்காற்றியவர். 

1890ல் பிறந்து 1961 வரை வாழ்ந்த இவர், சுதந்திரப் போராட்டத்தில் தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி ஆவார். 

1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டம், 
1937ல் உப்புக் காய்ச்சும் போராட்டம், 
1933ல் மறியல் போராட்டம், 
1940ல் தனிநபர் அறப்போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் அஞ்சலையம்மாள். கடலூர், வேலூர், திருச்சி, பெல்லாரி சிறைகளில் இருந்தவர். கருவுற்றது முதல் பேறு காலம் வரை பெண்களைக் கண்களுக்குள் வைத்துக் காப்பாற்றும் வழக்கம் நம்மிடையே உண்டு.

தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கு. கலியபெருமாள்


புலவர் கு. கலியபெருமாள் (04.மார்ச்.1924 16-மே-2007) என்பவர் பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என வாழ்ந்த போராளியாவார்.


பிறப்பும், கல்வியும்:


இவர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சௌந்திர சோழபுரத்தில் ஓரளவு வசதியான குடும்பத்தில் அஞ்சலை, குஞ்சான் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். சௌந்திர சோழபுரத்தில் துவக்கக் கல்வியும், பென்னாடத்தில் பள்ளிக் கல்வியையும் பெற்றார். புதுமுக வகுப்பை மயிலத்தில் உள்ள சிவஞான பாலையா சுவாமிகள் மடத்தினரால் நடத்தப்பட்ட கல்லூரியில் கற்றார். இக்காலக் கட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து. சுயமரியாதை நூல்களையும், துண்டறிக்கைகளையும் கொண்டுவந்து சக மாணவர்களுக்கு வழங்கிவந்தார். பின் திருவையாறு கல்லூரியில் புலவர் படிப்புப் படிக்க இணைந்தார். அக்கல்லூரியில் சாதி பேதம் அதிகமாக பார்க்கப்பட்டது. பார்ப்பண மாணவர்கள் உள்ள விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தனை அதை எதிர்த்து கலியபெருமாள் புத்துலக சிற்பகம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி மாணவரக்ளை திரட்டி போராடி அங்கு இருந்த பேதத்தை ஒழித்தார். கல்வியை முடித்தப்பின் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கினார். இவருடைய துணைவியார் பெயர் வாலாம்பாள்.

சாருமஜூரை சந்தித்தல்:

இந்திய அளவில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மஜூம்தார் தமிழகத்திற்கு வந்தபொழுது. அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து இரகசியமாகக் கூட்டம் போட்டார் கலியபெருமாள். சாருமஜூம்தார் தோற்றுவித்த இ.ம.க.(மா.லெ) இயக்கம் தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள்.

போராட்டங்கள்:

ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொது மக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

வெடிவிபத்து:

1970 ம் வருடம் அவரது சொந்தக் கிராமமான செளந்திரசோழபுரத்தில் உள்ள தனது தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்று இளைஞர்கள் இவர் முன்னிலையில் தற்பாதுகாப்புக்காக வெடிகுண்டு தயாரித்தபொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும் அதே இடத்தில் சிதறிப்போனார்கள். அருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று தீவிரவாத இளைஞர்களின் உடல்களையும் அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள்.

மரண தண்டனை:

1971-ல் கலியபெருமாளும்,அவரது மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் மரணதண்டனையும், இளையமகன் சோழ நம்பியார், கலிய பெருமாளின் ஒன்றுவிட்ட தம்பிகள் மாசிலாமணி, இராஜமாணிக்கம், ஆறுமுகம் கலியபெருமாளின் மனைவியின் அக்காள் அனந்தநாயகி ஆகியோருக்கு ஆயுள் தண்டணையும் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் அவரது குடும்பமே சிறையில். இவர்களை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பினர் 1973இல் குடியரசு தலைவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

சிறைவாழ்வுக்கு முடிவு

1981இல் கலியபெருமாளும் அவர் குடும்பத்தினர் ஆக ஏழு பேர் சிறையில் வாடுவதை அறிந்த தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் "கன்ஷியாம் பர்தேசி" என்பவர் நேரில் வந்து சந்தித்து பின் மனித உரிமை ஆர்வலர்களை ஒரிங்கிணைத்து குழு அமைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்கள் அனைவரையும் 1983 ஆம் ஆண்டு நிபந்தையற்ற நீண்டகால பரோலில் வெளியே மீட்டு வந்தார். தமிழகத்தில் நக்சல் இயக்கத்தைத் துவக்கிய இவர் பிறகு தமிழ்த் தேசியராக மாறினார் .

சுயசரிதை நூல்:

இவர் தனது வாழ்க்கை வரலாறை மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.

“ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை என்றார்...

மறைவு:

16-05-2007 அன்று மறைந்தார். அவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில், 22-2-1970-இல் அவரது தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் மரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அவ்விடம் `தென்னஞ்சோலை செங்களம்' என அழைக்கப்படுகிறது.



தோழர் தமிழரசன்

தோழர் தமிழரசன்  (14.4.1945 - 1.9.1987) 


தமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார்.  
அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம்,
கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மசூம்தார் வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். 

தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.

 சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிப்பு செய்துவந்தார்..

மிசா காலகட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர்.

 மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார்

தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக 
புது இயக்கம் கண்டனர்..


தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். 

அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை  நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.


தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின்  அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்..

தமிழ்நாடு விடுதலைப்படை

தமிழ்நாடு விடுதலைப்படை  
தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக தமிழரசன்  இருந்தார். இது தமிழர்களுக்காக தனி தேசம் அமைக்க போராடிய தமிழ்த்தேசிய அமைப்பாகும்.

1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை. 

இந்த இயக்கம் சூலை 2, 2002 அன்று இந்திய அரசால் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

 இந்திய அரசால் 2002ல் பொடா சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது.

துவக்கமும் நோக்கமும்:

தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் முதல்முறையாக தமிழ்நாடு விடுதலைப்படை அறிவிப்பை வெளியிட அதனால் பள்ளி ஆசிரியரும், இடதுசாரி இயக்கவாதியும், நக்சலைட்டு தலைவருமான கலியப்பெருமாள் ஈர்க்கப்பட்டார். நக்சல்பாரிகளுடன் தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்தாக்கத்தில் புலவர் கலியப்பெருமாளும் தமிழரசனும் அன்பழகன் சுந்தரமும் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தனர். நக்சல்பாரிகள் இந்திய மார்க்குசிய லெனினிய பொதுவுடைமை கட்சியுடன் (இபொக மாலெ) ஒருமித்த இந்தியாவின் கருத்தாக்கத்தில் உடன்பட்டனர். அதனால் கலியப்பெருமாள், தமிழரசன், சுந்தரம் போன்றோர் கொண்ட தனித்தமிழ்நாடு கொள்கையை இந்திய பொதுவுடைமை தலைமை நிராகரித்தது. இது நக்சல்பாரிகள் இயக்கம் தமிழ்நாடு தரப்பு இந்தியத்தரப்பு என அதிகாரப்பூர்வமாக இரண்டாக நக்சல் இயக்கம் பிரிவுபட வழிவகுத்தது. இதனால் தமிழ்நாடு தரப்பு சுந்தரம் தலைமையில் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய பொதுவுடைமை  கட்சியையும் அதன் ஆயுதப்பிரிவாக தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப்படை படையணியையும் உருவாக்கினர்.

இந்த இயக்கத்தின் நோக்கம் தனித்தமிழ்நாடு கொள்கையாகவும் அதை அடைய ஆயுதப்போராட்டமே வழி என்பதாகவும் இருந்தது.

ஆரம்பகால செயல்பாடுகள்:

1985ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளிலும் சமூகத்தின் பகைவர்களாக அவர்கள் கருதும் நபர்களை கொலை செய்தும் வந்தார்கள். அவர்களுக்கான நிதியை பெருக்க இந்தியமயமாக்கப்பட்ட வங்கிகளை கொள்ளையடித்தனர். அப்படி ஒரு வங்கியை செப்டம்பர் 1, 1987 அன்று கொள்ளையடிக்கும் போது தமிழரசனும் அவருடைய இயக்கத்தினர் நால்வரும் காவல்துரையினர் பொதுமக்களின் வேடத்தில் இருந்து அடித்துக்கொன்றனர்..

தமிழரசன் கொலை செய்யப்பட்ட பிரகு லெனின் எனப்படும் தெய்வசிகாமணி தவிபவுக்கு தலைவரானார். இவரின் தலைமையில் இயக்கத்தின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடைந்தன. தவிபவின் கிளைகள் செயம்கொண்டம், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காட்டு மாவட்டங்கள் என விரியத்தொடங்கின. மார்ச்சு 29 1994 அன்று லெனின் என்கிற தெய்வசிகாமணி தென்னார்காட்டின் முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தை வெடி வைத்து தகர்க்க முயன்ற போது கொல்லப்பட்டார். லெனின் தெய்வசிகாமணி மறைவுக்கு பின்னர் கூவாகம் இராமசாமியும் இளவரசனும் அதன் தலைவர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வீரப்பனால் கன்னட நடிகர் 2000ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட போது மீண்டும் தவிப பற்றி அதிகம் செய்திகள் அடிபட்டது. இதிலிருந்து தவிப இயக்கதினருக்கும் வீரப்பன் கூட்டத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. வீரப்பன் விடுவிக்கக்கோரிய சிறைக்கைதிகளில் 5 தவிப இயக்கத்தினர் இருந்தார்கள்.

தமிழரசன் தலைமை:
தமிழரசன் தலைமையில் 
தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக 'தமிழ்நாடு விடுதலைப் படை'யை நிறுவியவர். 

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு 'அரசியல் விடுதலை' பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார். தமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து 

கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மஜும்தார் வேண்டுகோலை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.

 சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தோழிப்பு செய்துவந்தார்.

மிசா காலகட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். 

மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார். தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர். தமிழகத்துக்குக் காவிரியில்  தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின்  அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர்

இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. குறிப்பிட்ட நாளில் தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றி வங்கியைவிட்டு வெளியே வந்தனர். இதை எதிர்பார்த்த காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்தனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் இறந்தனர்..

மற்ற தலைமைகள்:

தமிழரசன் மறைவுக்குப்பின் தெய்வசிகாமணி எனப்படும் லெனின் தவிப தலைவரானார். இவர் காலத்தில் தவிபவின் நடவடிக்கைகள் மேலும் வேகம் கொண்டன. அதன் கிளைகள் செயங்கொண்டான், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காடென பெருகின. இவரின் தலைமையில் தவிப காவல்நிலையங்களையும் ஆயுதங்களையும் கொள்ளையடிக்க தொடங்கினர். மார்ச்சு 29 1994 அன்று முத்தாண்டிக்குப்பத்தில் இருந்த காவல்நிலையத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியின் போது தெய்வசிகாமணி கொல்லப்பட்டார். அதன்பிறகு கூவாகம் இராமசாமியும் இளவரசனும் மாறனும் இப்படைக்கு தலைமை தாங்கினர்..

கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகள்: 

தவிப ஒரு காலத்தில் கடலூர், சிதம்பரம், பெரம்பலூர் பகுதிகளில் இயங்கிவந்தனர். இந்த பகுதிகளில் மட்டும் 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட முந்திரிகாடுகளை தங்கள் வசம் வைத்திருந்தனர். தவிபவில் உள்முரண்கள் அதிகமாகி அதனால் நடந்த சண்டையில் கூவாகம் இராமசாமி உட்பட 12 தவிப நபர்கள் கொல்லப்பட்டனர். கூவாகம் இராமசாமி கொலை தொடர்பாக இளவரசனும் கைது செய்யப்பட்டார். இந்த சண்டை முடிந்ததன் பிறகு மாறன் தவிபவின் பல நபர்களை நேரில் சந்தித்து தன் பக்கம் சேர்த்துக்கொண்டு தவிபவின் தலைவரானார். மாறன் தலைமையில் தவிப கிளைகள் பெரம்பலூர், கடலூர், தனவூர், கிழக்கு செங்கற்பட்டு, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருச்சி, விழுப்புரம், நாகை, சென்னை, தர்மபுரி, தூத்துக்குடி என பரவி இருந்தன..

வீரப்பனாருடன்

தமிழ்நாடு விடுதலைப்படைக்கு நெருக்கமாக இருந்த மற்றொரு ஆயுதக்குழு வீரப்பன் படையினர் ஆகும். தவிப இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மாறன் தமிழ்நாடு கர்நாடக காவல்துறையால் தேடப்பட்ட போது மாறன் வீரப்பன் பாதுகாப்பில் ஒளிந்திருந்ததாகவும் கருதப்படுகிறது. வீரப்பனும் தவிபவும் கர்நாடக அரசை பொது எதிரியாக கருதினர். கர்நாடக தமிழக நீர் பங்கீட்டு சிக்கல்களில் கர்நாடக அரசு காவிரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு தராததும் கர்நாடக மாநிலத்திலுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதும் தவிபவும் வீரப்பனும் கர்நாடக அரசை பகைப்பதற்கு பொதுக்காரணங்களாக இருந்தன. வீரப்பனின் தம்பி அர்சுனன் கர்நாடக அரசால் கொல்லப்பட்டதும் மற்றொரு காரணமாய் வீரப்பன் குழுவினருக்கு இருந்தது..

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...