Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. காலியிடங்கள்: ஹெட் ஆப் எக்ஸ்கவேசன் 1, எக்ஸ்கியூட்டிவ் 3, ஹெட் ஆப் மைன் சர்வேயர் 1, அசிஸ்டென்ட் மைன் சர்வேயர் 18 என மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளன. வயது மற்றும் கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. கடைசிநாள்: 22.6.2020. விபரங்களுக்கு: http://open.ntpccareers.net/2020_ExpSenMgmt/index_files/adeng.pdf

புள்ளியியல் துறையில் வேலை


மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Consultant - 03
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
பணி: Junior Consultant - 25
சம்பளம்: மாதம் ரூ.70,000
பணி: Executive Assistant - 20
சம்பளம்: மாதம் ரூ.35,000

மத்திய பாதுகாப்பு படையில் தலைமை காவலர் வேலை

   
சிஆர்பிஎஃப் என அழைக்கப்படும்  மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: மத்திய பாதுகாப்பு படை (Central Reserve Police Force)
பணியிடம்:  இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள்: 1412 (ஆண்-1331, பெண்-81)
பணி:  தலைமை காவலர் (Head Constable (General Duty))
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

இந்திய உணவு கழகத்தில் 585. காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 585 (வடக்கு மண்டலத்தில் 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39) 

வயதுவரம்பு: 01.07.2029 தேதியின்படி  28க்குள் இருக்க வேண்டும். 


தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பாத்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: 

இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: 

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை:  

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு மண்டலத்தின் ஒரு பதவிக்கு மட்டும் www.fci.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க  கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitmentfci.in/assets/FINAL%20ADVERISEMENT%20WITH%20REVISED%20SCHEDULE.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்..


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 

28.2.2020 முதல் 30.3.2020

காப்பர் நிறுவனத்தில் பயிற்சிப் பணி

காப்பர் நிறுவனத்தில் பயிற்சிப் பணி
மத்திய அரசின்கீழ் இயங்கும் ஹிந்துஸ்தான் காப்பர்
நிறுவனத்தில் காலியாக உள்ள 161 அப்ரண்டிஸ்
பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன்
மெக்கானிக் டீசல், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட
வகையான பயிற்சிப் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு
அல்லது பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவில் ஐடிஐ படித்திருக்கவேண்டும். முப்பது
வயதிற்குள் இருக்கவேண்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்..

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.2.2020 

விவரங்களுக்கு: www.hindustancopper.com

எக்சிம் வங்கியில் 22 மேலாளர் வேலை

எக்சிம் வங்கியில் மேலாளர் வேலை
எக்ஸ்போர்ட் இம்போர்ட் பேங்க்
ஆஃப் இந்தியா எனப்படும் எக்சிம்
வங்கியில் காலியாக உள்ள 22 மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன

தலைமை மேலாளர், மேலாளர், துணை மேலாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட
பணிகளுக்கு சட்டம், பிஇ, பிடெக்,
எம்டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு, எழுத்துத்தேர்வு பற்றிய
விவரங்களை இணையதளத்தில்
தெரிந்துகொள்ளலாம்
ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும்..

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 22.2.2020

விவரங்களுக்கு: www.eximbankindia.in

மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

கவுன்சில் ஆஃப் சயின்டிபிக் அண்ட்
இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனத்தின்கீழ்
இயங்கும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மைனிங் அண்ட் ப்யூல் ரிசர்ச் நிறுவனத்தில்
காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..


எலெக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், ஃபிட்டர் பிளம்பர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டெண்ட் போன்ற பிரிவுகளில்
டெக்னீசியன் பணிகளுக்கு பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 

அஞ்சல்வழியில்
விண்ணப்பிக்கவேண்டும்

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

The Administrative Officer, Csir Central Institute Of
Mining And Fuel Reasearch, Barwa Road, Dhanbad -
826 004

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 17.2.2020

விவரங்களுக்கு: http://cimfr.nic.in

தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி

"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க 
 ரூபாய் 7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. 

எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம். பேப்பர் விண்ணப்ப படிவம் இல்லை. இண்டர்நெட் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். 

தேவையான ஆவணங்கள்:

1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அட்டை
3. ஆதார் அட்டை
4. ஒரு புகைப்படம்
5. சாதி சான்று
6. வருமான சான்று ( குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு 
     மிகாமல் இருக்க வேண்டும்)
7. கல்வி சான்று
8. ஓட்டுநர் உரிமம். பேட்ஜ் அவசியம் (இது வாகன கடனுக்கு மட்டும் 
    தேவை)
9. கொட்டேஷன்
10. திட்ட அறிக்கை

மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சி செய்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

கீழுள்ள  தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
http://application.tahdco.com/

விண்ணப்பிக்க உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுபவர்கள் அணுகலாம் -

இந்திய ஒளிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனம் சுருக்கமாக பி.இ.சி.ஐ.எல். ( B.E.C.I.L )

BECIL நிறுவனத்தில் சர்வேயர், புரோகிராமர் உள்ளிட்ட
பணியிடங்களுக்கு 77 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ., பி.டெக் மற்றும் கணினி அறிவியல் சார்ந்த பாடங்களை படித்து பட்டம்,
முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிகளுக்கான சரியான கல்வித்தகுதி வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில்
பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 17-ந்தேதியாகும். 

இது பற்றிய விவரங்களை https://www.becil
com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்

ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி
மையத்தில் காலியாக உள்ள 191 ராணுவ அதிகாரிப் பணிகளுக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்
டெலி க ம் யூனிகேஷன், ஐ டி , ஆர்க்கி டெக்சர்
ஏரோநாட்டிக்கல், ஏவியானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்
என்ஜினீயரிங் போன்ற பாடப்பிரிவுகள் அல்லது அந்தப் பாடப்பிரிவுகளைக் கொண்ட ஏதாவது பொறியியல் பாடப்
பிரிவில் இளநிலை படித்திருக்கவேண்டும். 

இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். 

கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கப்படுவார்கள். அதில் வென்றவர்கள் மட்டும்
பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்

விண்ணப்பிக்கக்
கடைசி_நாள்: 20.2.2020

விவரங்களுக்கு: www.joinindianarmy.nic.in

தேசிய நோய்த்தடுப்பு மையத்தில்

டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட்
ஆஃப் இம்யூனால ஜி நிறுவனத்தில்
காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபீசர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னிக்கல் ஆபீசர், டெக்னீசியன்
டிரேட்ஸ்மேன், நிர்வாக உதவியாளர்
ஸ்கில்டுவொர்க் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி களுக்குத் தேவையான கல்வித்
தகுதி, வயதுவரம்பு போன்ற தகவல்கள்
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 17.2.2020

விவரங்களுக்கு: www.nil.res.in

மத்திய அரசில் மருத்துவ அதிகாரிப் பணிகள்

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 137 மருத்துவ அதிகாரி, உதவிப்
பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

மருத்துவ அதிகாரி, ஆந்த்ரபாலஜிஸ்ட், உதவிப் பொறியாளர், சயின்டிஸ்ட் பி
உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளுக்குத் தேவையான கல்வித்
தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பக்கட்டணம் ஆகிய தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

மருத்துவ அதிகாரி பணிகளுக்கு
மட்டும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி கல்வித்தகுதி
பெற்றிருக்கவேண்டும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்..

விண்ணப்பிக்கக் 
கடைசி_தேதி: 13.2.2020

விவரங்களுக்கு: www.upsconline.nic.in

கால்நடை பல்கலையில் 67 பணிகள்

கால்நடை பல்கலையில் 67 பணிகள்
சென்னையில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பண்ணை மேலாளர், இளநிலப்
பொறியாளர், பைண்டர், பாய்லர் மேன்
கார்பென்டர், ஓட்டுநர், எலெக்ட்ரீசியன்
மெஷின் ஆபரேட்டர், ஸ்டெனோ, தட்டச்சர்
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், ஒயர்மேன்
உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பக்கட்டணம்
போன்ற தகவல்கள் இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன..

அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும்
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பங்களை 
அனுப்பவேண்டிய_முகவரி

Tamilnadu Vetrinary And Animal Sciences University,
Madhavaram Milk Colony, Chennai 600 051

விண்ணப்பிக்கக் கடைசி_தேதி: 27.2.2020

விவரங்களுக்கு: www.tanuvas.ac.in

அழகப்பா பல்கலையில் பேராசிரியர் பணிகள்

அழகப்பா_பல்கலையில் 
பேராசிரியர் பணிகள் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்
உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன

கவின்கலை, பொருளாதாரம், வரலாறு
இதழியல், அரசியல் அறிவியல், நாடகம்
மற்றும் திரைப்படக்கலை, இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, 
எனர்ஜி சயின்ஸ், கம்ப்யூட்டர்
சயின்ஸ், பயோடெக்னாலஜி, தாவரவியல் மைக்ரோபயாலஜி, பயோமெடிக்கல் சயின்ஸ்
உள்ளிட்ட 22 பிரிவுகளில் பேராசிரியர்
உதவிப் பேராசிரியர், முதல்வர் மற்றும் நூலகர் ஆகிய பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள்
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்க வேண்டும்..

விண்ணப்பங்களை 
அனுப்பவேண்டிய_முகவரி

Registrar, Alagappa University, Alagappapuram,
Karaikudi - 630 003.

விண்ணப்பிக்கக் கடைசி_தேதி: 19.2.2020

விவரங்களுக்கு: www.alagappauniversity.ac.in

ராணுவ_ஆராய்ச்சி_நிலையத்தில்ஃபெல்லோஷிபூ

ராணுவ_ஆராய்ச்சி_நிலையத்தில்
ஃபெல்லோஷிபூ 


டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்
ஆர்கனைசேஷன் (டிஆர்டிஒ) நிறுவனத்
தில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட்
உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன

ரிசர்ச் அசோசியேட், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பணிகளுக்குத்
தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு பற்றிய தகவல்கள்
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள்

விண்ணப்பிக்கக் கடைசி_நாள்: 19.2.2020

விவரங்களுக்கு: www.drdo.gov.in

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...