Showing posts with label சிந்திக்க வேண்டியவை. Show all posts
Showing posts with label சிந்திக்க வேண்டியவை. Show all posts

ஆண் தேவதை

ஓர் ஆணிண் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நான் அறிந்த என் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளேன்....  

ஓரு ஆண் தன்னுடைய சிறு வயதில் தாய் தந்தை அன்புடன் வளர்கிறான்.

பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் பழகுகிறான்.அவன் பதின்ம பருவங்களிள் வீட்டின் சுழ்நிலை அறிந்து அதற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளுகிறான்.
அவனுடைய ஆசைகள் நிராசை ஆகின்றன.

கல்லூரி பருவத்தில் தோழர்களுடன் பயணிக்கிறான்.அவனுடைய வாலிபத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம்.

உண்மையான அன்பிற்கும் பொய்யான உறவுக்கும் வேறுபாடு அறியும் காலம் அது

அந்த கல்லூரி பருவத்தில் காதல் வருகிறது... ஆனால் பல ஆண்களுக்கு வீட்டு சுழ்நிலை ,பொருளாதார சிக்கல்,சகோதர,சகோதரி வாழ்க்கை என தியாகம் செய்யப்பட வேண்டியுள்ளது பின் திருமணம் ..

திருமண வாழ்க்கையும் சில நேரங்களில் ஆண்களை சுழ்நிலை கைதியாக்குகிறது... பெற்றோரா? மனைவியா? என.குழம்பிதவிக்கிறான் அவன்

இதில் உறவினர்களின் தவறான புரிதல்களையும் தீர்க்க பாடுபடுகிறான்...
மனைவி குழந்தைகளின் தேவைகளை தீர்க்க வேலையில் ஈடுபட்டு பொருள் ஈட்டுகிறான்......

அவனுக்கான தேவைகள் சுருக்க படுகின்றன....
அவன் அவனுக்காக வாழ்வது அரிதாகி போகிறது சில ஆண்களின் வாழ்கையில்,
ஆணும் தேவதையே
தன் மனைவிக்கு, குழந்தைக்கு... முதுமையில் பெற்றோருக்கு
ஆண் தேவதைதான்.......

துக்கம்

தூக்கம் என்பது ஒரு வரப்ரசாதம்.
எவன் ஒருத்தன் படுத்தவுடன்
எந்த நினைவும் மனதை அலைக்களிக்காமல் கட்டை போலத் தூங்குகிறானோ
அவன் தான் மிகப் பெரிய பணக்காரன் என்னைப் பொருத்தவரை.

சிறு குழந்தைகளைப் பாருங்கள். நன்றாக விளையாடுவார்கள், சண்டை போட்டு அடி பட்டுக் கொண்டு வருவார்கள், ஏன் ரொம்ப சேட்டை பண்ணும்போது அம்மா அப்பாவிடம் மொத்து கூட வாங்குவது உண்டு, இருந்தாலும் படுக்கையில் படுத்து அம்மாவிடம் கதை கேட்டுக் கொண்டே நிமிடத்தில் தூங்கி விடுவார்கள்.

‘மகனே எதிர்காலத்தில் இந்தத் தூக்கத்துக்கு நாய் படாத பாடு படப் போற பாரு
அதனால இப்பயே அனுபவிச்சுக்கோ’ என்று கடவுள் பரிதாபப் பட்டு அந்த வரத்தை
நம்மோட சின்ன வயதிலே தந்திருக்கிறார்...

கார்ப்பரேட்_உலகத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள்:

1=> மூளையில் சரக்கு இருந்தால் மட்டுமே வேலை மூளை காலி என்றால், வேலை காலி.

2=> மேலாளரை பற்றி யாரிடமாவது குறை சொன்னால், நாம் என்ன குறை சொன்னோம், எப்ப சொன்னோம் என்பது முதற்கொண்டு மேலாளருக்கு தெரிந்துவிடும்.

3=> சொம்பு அடித்தால் மட்டுமே நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

4=> கார்ப்பரேட் உலகில் யாரும் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்பது வடிகட்டிய பொய்.

5=> வாடிக்கையாளர்களை ராஜாவாக நடத்தினால், வாடிக்கையாளர் நம்மை ராஜாவாக ஆக்குவான்.

6=>  கண்காணிக்க யாரும் இல்லை என்பது போல தெரியும், ஆனால் எல்லோரும் கண்கணிக்கப்படுவார்கள்.

7=>  எல்லோருக்கும் வேலைக்கு சிபாரிசு செய்தால் ஆபத்தில் முடிந்து விடும்.

8=> ஒரு முறை விடுமுறை அன்று அலுவலகம் வந்தால், எல்லா விடுமுறைக்கும் அலுவலகம் வரவைக்கபடுவார்கள்.

9=> ப்ரோமோஷன் வேண்டும் என்றால் பொறுமை வேண்டும். இங்கு பொறுத்தார் ப்ரோமோஷன் பெறுவார்.

10=> கடன் வாங்கி வீடு கார் வாங்கக்கூடாது.
சேமிக்க கற்று கொள்ள வேண்டும்.

ஒரு அறிவிப்பு

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இதைக் கண்டு பலர் வியந்தனர். இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா என்று..

400 ரூபாய் மட்டுமே என்றான்.

வரிசையில் ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.

அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.

" வாங்க சார்...வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்.. சீக்கிரத்துல உடையாது சார்..
400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார் "
என்று கூவினான்.

நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.
நல்லா யோசிக்கனும்.
சாத்தியமான்னு பார்கனும்.
ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது...

கார்ப்பரேட் கதை

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து
வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே
சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை
மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று
வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்
மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின
உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.
உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்
மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.
இல்லாவிடில் நான் நீண்ட காலம்
ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது
துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன்.

உன்னால் ஐந்து ஆண்டுகளில்
சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.

இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன்.

நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு
இருக்கலாம்” என்றான்.

மாடு தன் முட்டாள்
தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி:
நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது.

இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √

கருத்துக்களை மட்டும் கேட்கவும்

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:

என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக
நான் கருதுவது,

"நான் இன்னொருவருடைய "மனைவியுடன் கழித்த நாட்களே என்று". 

இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்  , யாரும் எதுவும் பேசவில்லை.
பேச்சாளர் தொடர்ந்தார்..

அந்த இன்னொருவருடைய மனைவி,
"என் தாய் தான்" என்றார்.
கூட்டத்தில் பலத்த சிரிப்பும்,
கரகோஷமும் ஏற்பட்டது.

இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.

வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி,"

என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.

கண் விழித்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்,
அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்....

நீதி :

அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்!

பிடித்தால் பகிருங்கள்...

தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.

அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.

வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்டப் பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு,
என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து,

" மேகா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.

வைரங்களை எங்கு எடுப்பாய்?

பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

முத்துக்களை எங்கு எடுப்பாய்?

கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

தங்கத்தை எங்கு எடுப்பாய்?

சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "

என்னை உற்று நோக்கியவராக,
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட
நீ புனிதமானவள்.

உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..
பெண்களின் உடலமைப்பு என்பது
இறைவன் தந்த பொக்கிஷம்

பொக்கிஷங்களை பொத்திப்பாதுகாப்பதே
அறிவார்ந்தவர் செயல்

அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்

பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்

பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்....

பிரபல குத்துச்சண்டை வீரர்  தன் மகளுக்கு  வழங்கிய அறிவுரை ...
***************************************************

காலம் மாறிவிட்டது

ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது.

காரணம்

மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,

உறவினர்களுக்கு உரிமை இல்லை,

ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,

தான் பெற்ற பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை

மெஷின் போன்ற வாழ்க்கை,
மெஷின்னுடன் தான் வாழ்க்கை,

மனைவி இல்லையென்றாலும் பரவாயில்லை மொபைல் இருக்கிறது,

உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,

நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.

அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.

உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.

நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுளிலில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எறிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.

எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.

உன் வாழ்க்கை
உன் மொபைலில் இல்லை
உன் அன்பு பேச்சில் இருக்கிறது!!

ராஜாவும், ரம்யாவும்

ராஜாவும், ரம்யாவும் ஒருத்தரையொருத்தர் புரிந்து கொண்ட அன்பான தம்பதி தான்.

ஆனால், மாமியார் கூட இருக்கிறது மட்டும் சுத்தமா ரம்யாவுக்கு பிடிக்கிறதே இல்லை. அவங்கள முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட சொல்லி அடிக்கடி சண்டை போடுவா ராஜா கூட, அவனும் சமாளித்துக்கொண்டே வந்தான். இன்னைக்கு முடிவாவே சொல்லீட்டா,

"ஒண்ணு நான் இந்த வீட்ல இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும்,
நீங்களே முடிவு பண்ணிக்கோங்கன்னா"

ரம்யா பிடிவாதக்காரி, இனி அவ கூட பேசி ப்ரயோஜனமில்லை என்பதை உணர்ந்தான் ராஜா. வேறு வழியின்றி அவள் முடிவிற்கு ஒத்துக்கொண்டான்.

"ரம்யா நீ எனக்கு ஒரு உதவி பண்ணணும் என்றான்"

பொறுமையாவே கேட்டா "நான் என்ன பண்ணணும் சொல்லுங்க"

என்னை பள்ளிக்கூடத்துல  சேர்த்தது முதல்... உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சது வரை,

எனக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் எனக்காக பாத்து பாத்து பண்ணினவங்க என்னோட அம்மா. அதனால எல்லா வசதியும் உள்ள ஒரு நல்ல முதியோர் இல்லமா பாத்து கொண்டு போய் விட வேண்டியது என்னோட கடமை. நான் இருக்கிற பிஸ்சியில என்னால அத பாத்து பண்ண முடியாதுங்றது உனக்கே தெரியும். அதனால எனக்காக நீ தான் இந்த உதவிய பண்ணிக்குடுக்கணும் என்றான்."

அதற்கு முழுமனதோடு ஒத்துக்கொண்டாள் ரம்யா...

நீ இன்னொரு உதவி கூட எனக்காக பண்ணணும் ரம்யா என சொல்லி தொடர்ந்தான் ராஜா...

அப்பா இல்லாம என்னை வளர்த்ததாலயோ என்னமோ, என்னோட அம்மாவுக்கு என்னைத் தவிர வேற உலகம் தெரியாது. என்னையே நம்பி இருந்ததால வெளி உலகம் தெரியாத வெள்ளந்தியாவே இருந்திட்டாங்க. நீ செலட் பண்ணுற முதியோர் இல்லத்துல எப்படி நடந்துக்கணும், யாரெல்லாம் நல்லவங்க, இத மட்டும் கொஞ்சம் விசாரிச்சு, நீ பாத்து பழகிட்டு வரணும், அப்றமா நாம அம்மாவ அங்க கொண்டு போய் சேத்திடலாம், அதுக்கப்புறம் அவங்க அங்க எந்த பிரச்சனையும் இல்லாம இருப்பாங்க இல்ல... என்றவன் மேலும்,

முதியோர் இல்லத்துல உள்ளவங்கள பத்தி முழுசா தெரிஞ்சு வர, நீ தொடர்ந்து ஒரு வாரம் தினமும் குறஞ்ச பட்சம் ஒருமணிநேரமாவது அங்க உள்ளவங்க கூட செலவு பண்ணணும் என்றான்...

ஓ தாராளமாங்க, என மலர்ந்த முகத்தோடு ஒத்துக்கொண்டாள் ரம்யா... நாம முதியோர் இல்லத்தில அம்மாவ கொண்டுவிட போறது இப்போதைக்கு அம்மாவுக்கு தெரிய வேண்டாம் என்றான் ராஜா... அதுவே தான் ரம்யாவுக்கும் சரியெனப்பட்டது...

ரொம்ப ஆர்வமா தேட துவங்கினா முதியோர் இல்லங்களை... அடுத்த நாளே ஏசி ரூம் வசதியுள்ள முதியோர் இல்லத்த கண்டுபிடிச்சு வந்தா ரம்யா... அதனோட அருமை பெருமையெல்லாம் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்த ராஜா கிட்ட சொல்லி சிலாகித்துக் கொண்டாள். அமைதியாக கேட்டுக்கொண்டான் ராஜா...

அடுத்த நாள் முதியோர் இல்லம் போய் வந்த ரம்யா அங்க உள்ள பெரியவங்கள பத்தியெல்லாம் சொன்னா... அவளை அங்க உள்ள எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போனதா பெருமையோடே சொன்னா... அதையும் அமைதியாக கேட்டுக்கொண்டான் ராஜா...

அடுத்த நாள் முதியோர் இல்லம் போய் வந்ததாக சொன்னாள் ரம்யா... அங்கே நடந்த சம்பவங்கள் எதையும் அவனுக்கு அவள் அன்றைக்கு சொல்லவில்லை... அவனும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை... அமைதியாவே இருந்தான்...

அடுத்தடுத்த நாட்களிலும் அவள் எதுவும் சொல்லவில்லை... அவள் போய் வருவதை மட்டும் உறுதி செய்து கொண்டான் ராஜா...

அவன் சொல்லியிருந்த நாட்கள் முடிந்தது. இன்றைக்கு தான் அம்மாவை முதியோர் இல்லம் கொண்டுவிட வேண்டிய நாள் அவன் ப்ரஷ்ஷாகவே இருந்தான். அவளிடம் சிறிது பதட்டம் தெரிந்தது. ராஜா ரம்யாவை அழைத்தான் "வா நான் அம்மா கிட்ட சொல்றேன் அவங்கள கொண்டு போய் முதியோர் இல்லத்தில விட்டு வரலாம் என"

கையை பிசைந்த படி வந்த ரம்யா அவன் கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் "வேண்டாங்க அவங்களும் நம்ம கூடயே இருந்துடட்டும், தனிமையா இருக்கும் பெரியவங்க ரொம்ப பாவங்க"

என்று சொன்னவள் மேலும் தொடர்ந்தாள்... இப்போ நீங்க எனக்கொரு உதவி பண்ணணும் "நாம வாரா வரம் சினிமாவுக்கு போற நேரத்துக்கு பதிலா அந்த முதியோர் இல்லம் போய் வரலாமாங்க? அங்க இருக்குறவங்களுக்கு காசு, பணம் எதும் தேவையில்லேங்க அன்பா, அக்கரையா பேசுற நாலு பேர் தாங்க வேணும்" எனக்கேட்டு அவனை பரிதாபமாக பார்த்தாள்.

அவன் சம்மதம் அன்பு முத்தத்தோடே அவளுக்கு கிடைத்தது. இப்போது அவன் அணைப்பிற்குள் இருந்த அவளிடம் திரும்ப அவன் கேட்டான்

"அம்மாவின் மாற்றமுடியா குறை சொல்லும் பழக்கத்த நீ எப்படி சமாளிக்க போகிறாய் என"

அதற்கு அவள் "காது கேட்காதது போல இருந்துட்டு போறேங்க,
கொஞ்ச நாள்ள அவங்களே மாறிடுவாங்க என நம்பிக்கையோடே சொன்னாள்..."

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...