Showing posts with label Employment. Show all posts
Showing posts with label Employment. Show all posts

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 23 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. காலியிடங்கள்: ஹெட் ஆப் எக்ஸ்கவேசன் 1, எக்ஸ்கியூட்டிவ் 3, ஹெட் ஆப் மைன் சர்வேயர் 1, அசிஸ்டென்ட் மைன் சர்வேயர் 18 என மொத்தம் 23 காலியிடங்கள் உள்ளன. வயது மற்றும் கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. கடைசிநாள்: 22.6.2020. விபரங்களுக்கு: http://open.ntpccareers.net/2020_ExpSenMgmt/index_files/adeng.pdf

அரசு மானியம் வழங்கப்படும் தொழில்கள்

அரசு மானியம் வழங்கப்படும் தொழில்கள்

 

 

படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி அதன்மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன. அத்திட்டங்களின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (யு.ஒய்.இ.ஜி.பி.) தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கீழ் உள்ள தொழில்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும்


மானியம் வழங்கப்படும் தொழில்கள்:

  1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
  2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
  3. வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
  4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
  5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
  6. ஏற்றுமதி ஆபரணங்கள்
  7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
  8. விளையாட்டுப் பொருட்கள்
  9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
  10.  ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்  


அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?


15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

 

தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனங்கள்

தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனங்கள் 

(Organizations Helpful for Eunterprenuers)


1)தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் , (டிஐஐசி) 27 ஒயிட்ஸ் ரோடு, சென்னை – 600014, போன் : 24331485
 
தொழிற்சாலை அமைக்க நிலம், கட்டடம், இயந்திரங்கள் ஆகியவை வாங்க தமிழ்நாடு தொழில் முதலிட்டுக் கழகம் சுலபமான நிபந்தனைகளின் பேரில் நீண்ட கால, மத்திய காலக் கடன்களை வழங்குகிறது. உலக வங்கி கடனுதவித் திட்ட்த்தின் கீழ், இயந்திரங்களை அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய, தொழில் நுட்ப உதவி ஆகியவற்றிற்கும் கடன்கள் பெறலாம். சிறிய தொழில்களுக்குக் கடன்  தொடங்குவோர், மின்சார உற்பத்தி இயந்திரங்கள் வாங்க விரும்புவோர்,போக்குவரத்து பேருந்து நட்த்துபவர்கள், கிராமங்களில் வைத்தியத் தொழில் செய்யும் மருத்துவர்கள் ஆகியோருக்கு உதவ, தனித்திட்டங்கள் பல உள்ளன.
2)தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO)     கத்திப்பாரா முனை, சென்னை – 600 016.
                                சிறுதொழில் தொடங்குபவர்களுக்குப் பெருமளவில் உதவி புரிகிறது சிட்கோ நிறுவனம். தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்கி வினியோகிப்பது.மற்றும் தவணை முறையில் தொழிற்கூடங்களைக் கட்டிக் கொடுப்பது, உற்பத்தில் பொருள்களை ஏற்றுமதி செய்து வியாபாரங்கள் நடத்த உதவி செய்வது, ஆகியவை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள சிறப்பான பணிகளாகும்.
 
 
3)சிறுதொழில் சேவை நிலையம்( Small Industries Service Institute),65-1,  ஜி.எஸ் டி ரோடு, சென்னை – 600 032.
 
               சிறுதொழிலுக்கு உதவி அளிக்க மைய அரசு, தொழில் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ், சிறுதொழில் வளர்ச்சிக்குத் தனது விரிவாக்கப் பணியை அனைத்து வ்ழிகளிலும் சங்கிலித் தொடர்போல் செய்து வருகின்றது. புதிய தொழிலைத் தேர்ந்தெடுத்து தொழில் சம்பந்தம்மான  அனைத்து விவரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஆயத்த  நிலையில் உள்ள் மாதிரி திட்டங்களையும் வழங்குகிறது. தொழில் நுட்பம், இயந்திரம், மூலப்பொருள்கள் இவைகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தருகின்றது. நிர்வாகத் தொழில் நுட்ப அறிவுறைகள் வழங்குகிறது. நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த, அதன் செயல் முறையை விளக்குகிறது. அத்துடன் நடமாடும் செயல்முறை விளக்க ஊர்திகளின் மூலம், கிராமப்புறப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோரை உருவாக்குகின்றது.

                மூலப் பொருள்களின் முழு உபயோகம் பற்றி பரிசோதனை செய்து, அதன் பலனை சிறுதொழில்களுக்கு நல்குகிறது. சிறு தொழில்களை அரசாங்கப் பண்டக சாலையில் வாங்கும் இயக்கத்தில் ஊக்குவிக்கிறது. தொழில் மையங்கள் நிறுவ தேவையான புள்ளி விவரங்களைச் சேகரித்து அளிக்கிறது. சிறு தொழில் சம்பந்தமான முக்கியமான விவரங்களைச் சேகரிக்கிறது. புதிய உற்பத்திப் பொருள்களுக்குள்ள வாய்ப்பு, சந்தை நிலவரம் ஆகியவற்றை அறிந்து கூறுகிறது. சிறுதொழில் அமைப்போர்க்கு தொழில் நிர்வாகப் பயிற்சி அளிக்கிறது.
  
4)தேசிய சிறு தொழில் நிறுவனம் ( என்.என்.ஐ.சி),165, அண்ணாசாலை, சென்னை – 600 006.
 
                மைய அரசின் பார்வையின் கீழ் 1985 பிப்ரவரியில் தேசிய சிறுதொழில் நிறுவனம் தொடங்கப்பட்ட்து. இந்நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சிகுப் பெரிய அளவில் உதவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், மற்றும் உள்நாட்டு இயந்திரங்களை இக்கழகம் சுலப தவணையில் சிறுதொழில் முனைவோர்க்கு அளிக்கிறது. அதனுடைய பயிற்சி நிலையங்களில், ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. அதனுடைய விற்பனைத்துறையில் ஏற்றுமதிப் பிரிவில், இந்திய சிறுதொழில்களில் உற்பத்தியாகும் தகுதி வாய்ந்த பொருள்களை மேலை நாட்டுலுள்ள நுகர்வோர்க்கு அறிமுகப்படுத்துகிறது.

5)தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ,(SIPCOT, State Industries Promotion Corporation of Tamilnadu),19ஏ.ருக்மணி லட்சுமிபதி சாலை,எழுப்பூர்,சென்னை – 600008,போன்: 28554479.

மாநிலத்தில் பரவலாகத் தொழில் வளர்ச்சியை முன்னேறச் செய்வதும், பின் தங்கியுள்ள பகுதிகள் தொழில் வளமடைய சிறப்பான வச்திகளை அளித்தலும் சிப்காட்டின் குறிக்கோளாகும்.
                இந்நிறுவனத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளாவன தொழில் வளர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை மேம்படுத்தி, தொழில் நட்த்த்த்  தேவையான வசதிகளை ஏற்படுத்தி, சுலப தவணை முறையில் நிலப்பகுதிகளை வழங்குகிறது. தொழில் வளர்ச்சிக்காக சில இடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சீர்திருத்தி, சாலை, மின்சாரம், தண்ணீர் மற்றும் வடிகால், குடிநீர் வசதிகள் முதலியவற்றை நிறைவேற்றி, தொழில் முனைவோர்க்குத் தக்க வசதிகளுடன் நிலம் வழங்கும் திட்ட்த்தை, சிப்காட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

6)தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் மையம் (I.I.C),  டி.என்.கே.ஹவுஸ், 49, அண்ணாசாலை,  சென்னை – 600 002.
 
                 இந்திய முதலீட்டு மையத்தின் ஆதரவில் இந்த வழி காட்டும் மையம், சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம்,தொழில் தொடங்க, ஒத்துழைப்பு, மற்றும் கூட்டு முயற்சிகள் ஆகியவற்றில் உதவுதல், போன்ற முக்கிய பணிகளை ஆற்றுகிறது.
 
7)டி.ஜி.டீ.டி (D.G.T.D) மண்டல அலுவலகம் ,எல்.ஏ மாளிகை, 735 அண்ணாசாலை, சென்னை – 600 002.
 
இந்நிறுவனம், நடுத்தர மற்றும் பெரிய தொழில்களைப் பதிவு செய்தல், இயந்திர இறக்குமதிக்கான அனுமதி பெறுவதில் உதவுதல், கச்சாப்பொருள்களின் இறக்குமதிக்கான உரிம்ம் பெறுவதில் உதவுதல்,போன்ற பணிகளைச் செய்து வருகிறது.
 
 

சுயதொழில் தொடங்குவது எப்படி

சுயதொழில்  தொடங்குவது எப்படி

சுயதொழில்: 


தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்பு பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது  தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத் தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பது பற்றி சிறிய உண்மை சம்பவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனிமையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2 கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டுப்பிடிப்பிற்காக எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறது.
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை இங்கு தரப்பட்டதற்கான நோக்கம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவனது கண்டுப்பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.

 

மானியம் வழங்கப்படும் தொழில்கள்:

 

  • மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
  • தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
  • வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
  • மருந்துப் பொருட்கள் உற்பத்தி
  • சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
  • ஏற்றுமதி ஆபரணங்கள்
  • மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
  • விளையாட்டுப் பொருட்கள்
  • சிக்கன கட்டுமானப் பொருட்கள்
  • ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

 

அரசு வழங்கும் சலுகைகள்:

 
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
 
உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மேலாளரை அணுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேண்டும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.

சுயதொழில் தொடங்குவது எப்படி?

 

ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம்.


ஒருங்கிணைப்பு:


முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்
செயல் துறைத் தலைவர் (வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
ஃபேக்ஸ்: 28588364

தொழில் நுணுக்கங்கள்:

 

தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு

 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான விதிகள் - START UP RULES

ஸ்டார்ட் அப்  நிறுவனங்களுக்கான விதிகள் - START UP RULES

 

 

  • நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில் மீது உங்களுக்கு தீவிர காதல் இல்லையெற்றாலும், அது உங்கள் மனதை ஆட்டிபடைக்கவில்லையெற்றாலும் அந்த தொழிலை தொடங்காதீர்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.
  • உங்கள்  தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள்  தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம்.
  • உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள்.
  • உங்கள் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டபோகிறது, எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதை தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.
  • உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துங்கள்.
  • ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது, உங்கள் ஊழியர்களுக்கு  நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்குமானால்,  நேரத்தை எப்படி பயனுள்ளதாய்  செலவழிப்பது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். விருப்பம் இல்லாத ஊழியர்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
  • திறந்த அலுவலக இடத்தை அமைத்திடுங்கள், அப்போதுதான் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை தெரியவரும், இது அவர்களின் ஆற்றலை அதிகபடுத்த உதவும்.
  • உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள், உங்கள் ஊழியர்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியுங்கள்.
  • நிறுவன கட்டமைப்புகளை உருவாக்குங்கள். யார் யாரிடம் அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்பதை வரையருங்கள்.
  • ஆடம்பரமான பொருட்களை வாங்காதீர்கள்.
  • உங்கள் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதற்கு பொது தொடர்பு நிறுவனத்தை (PR Firm) பயன்படுத்தாதீர்கள். உங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்களே அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.
  • உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை,  பொழுதுபோக்கு போன்றவற்றை புகுத்துங்கள்

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...