Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

காதல் வேண்டாம் அட்லிஸ்ட் ஒரு காஃபி போதும்

இத்தனை வருஷம் கழிச்சும் அவளை எதார்த்தமா பார்த்தும் அவகிட்ட பேசாம ஏண்டா கோவிச்சுக்கிட்டு வர்ற ?

அவ மேலே இருந்த லவ் எல்லாமே போய்டுச்சா ....என்றான் நண்பன் சசி

டே ....சசி இந்த கதிரோட காதல் என்னைக்குமே போவாதுடா ...

கயல் என்னை ஏமாத்திட்டான்னு அபாண்டமா பொய் சொல்ல மாட்டேன் ..

எங்க காதலுக்கு இந்த பாழாய் போன வசதி, அந்தஸ்து  தான் தடையா இருந்துச்சு ..
வீட்ல உள்ளவங்கள கொன்னுட்டு அவங்க பொணத்து மேலே எங்க காதல் வாழ விரும்பலை ...

மனசுக்கு பிடிச்சு தான் விரும்புனோம்
அதே மாதிரி எங்க ரெண்டு குடும்பத்து வாழ்வுக்காக எங்க மனசை கொன்னுட்டு தான் பிரிந்தோம் ..

இன்னும் அவளை நான் வெறுக்கலை
அவ எங்கிருந்தாலும் புருஷன் - பிள்ளைகளோட நல்லா இருக்கணும் ...
அவ வீடு இருக்குன்னா இந்த ஏரியாக்கு வந்தோம், தற்சயலா  பார்த்ததும் பேச கூட வேணாண்டா ஒரு ஸ்மைல்லாவது பண்ணியிருக்கலாமே?

என்னை பார்த்ததும் அவ உம்முன்னு இருக்கவும் தான் கோவிச்சுக்கிட்டு வந்திட்டேன் என்றான் கதிர் ...

அவ பில்டர் காஃபி எப்படி போடுவா தெரியுமா ?? ..

எவ்வளவு டென்ஷன் இருந்தாலும்
அவ கையாலே ஒரு பில்டர் காஃ பி குடிச்சா டென்ஷன் எல்லாம் நிமிசத்துல காணாம போய் இருக்கும் தெரியுமா ?

அவளோடு காலமெல்லாம் காதலோடு வாழணும்னு ஆசைப்பட்டேன் அது தான் முடியாம போச்சு அட்லிஸ்ட் ஒரு காஃபி கூட குடிக்க முடியாம போச்சேடா என்று பீல் பண்ணினான் கதிர் ...

டே ...உன்னை பார்த்தப்ப அவ பக்கத்துல அவங்க மாமியார் இருந்தாங்களாம் அவங்க அந்த காலத்து மாதிரி சந்தேகபடுவாங்க  அதான் உன்கிட்ட பேசலையாம் உனக்கு பிடிக்கும்னு பிளாஸ்க்ல உன் கயல் காஃபி கொடுத்திருக்காடா என்றான் சசி
அவன் கைகளில் பிளாஸ்கை வைத்தான் ...

சசி கொடுத்தவுடனே பிளாஸ்கில் இருந்த காபியை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி காதலோடு குடிக்க ஆரம்பித்தான் கதிர் ...

இறைவி

எங்கோ யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்,
எனக்கு மனைவியாக
வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகலை
மறந்து விட்டாள்

இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்


ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்

காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்

இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்

மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்

சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்

ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள்  சொல்லி
மார்பில் சாய்ந்தாள்

பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்

அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்

ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்

இப்போது
அவள் அருகில் நான்

கத்தினாள்
கதறினாள்
ஏதேதோ செய்தாள்

வலியால்
அவள் துடிப்பதை பார்த்து

என்னால்
தாங்க முடியவில்லை

அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை

ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை

சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது

அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது

பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்

வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதாள்

எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பாள்
என்று நினைக்கும் போது

நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்

ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள்

ஒரு சில
நிமிடங்களில்

குழந்தையை கையில்
கொடுத்தார்கள்

நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்

அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்

மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும்  மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்

இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்.....

பெண்களின் காதல்

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகுதான்....
.
விரட்டி விரட்டி காதலிக்கும்
போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
.
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது
அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
.
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய
வைக்கும்போதும்
பெண்களின் காதல்
அழகுதான்....
.
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல்
அழகுதான்....
.
யாரேனும் நம்மை தவறாக பேசும்
போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
வீட்டிற்க்கு
வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும்
போது
பெண்களின் காதல்
அழகுதான்.....
.
யார்கூடவும் பகிர்ந்து
கொள்ளமுடியாத
விசயங்களை நம்மோடு பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல்
அழகுதான்....
.
நாம் முதல் முறை காதலை
சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் நம்மை காதல் கண்கள்
கொண்டு
தாக்கும் போது பெண்களின்
காதல்
அழகுதான்...
.
நம்மோடு வெளியே வரும் போது
யாரும் பார்க்காத போதும்
நம்மை யாரோ பார்த்து
விடுவார்களோ என்று
நம்மையும் சேர்த்து பயமுறுத்தும்
போது
பெண்களின் காதல்
அழகுதான்....
.
வெண்ணிலா ஐஸ் கிரீம்
டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ்
இதுவே அதிகம் பிடிக்குமென
நம் செலவை சிக்கனம்
செய்யும் போது பெண்களின்
காதல்
அழகுதான்....
.
எதுவும் வேணுமா என்று
கேட்டாலும்
நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு
என்று
நம்மளையே அசத்தவைக்கும்
போது
பெண்களில் காதல்
அழகுதான் .....
.
நம்மோடு பகிர்ந்து கொள்ள
முடியாத
ஆசைகளை படுக்கை அறையில்
தனியாக தலையனையோடு
பகிர்ந்து
கொள்ளும் போது
பெண்களின் காதல்
அழகுதான்....
.
ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எரியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எரியும் போதும் பெண்களின்
காதல்
அழகுதான் .....

ஒவ்வொரு மணித்துளியும்

ஒவ்வொரு
மணித்துளியும்
என் நினைவு நாளங்கள்
அத்தனையும்
உனக்காக
ஒதுக்கியிருந்தேன் !

ஒவ்வொரு
கத்திருப்புகளிலும்
கரைந்துபோன
காலங்களைபற்றி
கவலைப்படாமலிருந்தேன் !

எதிர்காலம்
என்ற கேள்விக்கு
நீ தான்
பதில் என்றிருந்தேன் !

உன் அருகமையே
என் வாழ்வின்
அளப்பரிய
ஆனந்தம்
என்றிருந்தேன் !

ஆனால்....
கண நேரத்தில்
என் காதலை
கசக்கி எறிந்துவிட்டு
சென்றுவிட்ட
உன்னால்
இன்று .....

கடந்துபோன
காலங்களை
எண்ணி
கவலையில்
ஆள்வதும்
நீயில்லா
எதிர்காலத்தை
எண்ணி
பேதலிப்பதுமாய்..!

என்
நிகழ்காலம்
பயணித்து
கொண்டிருக்கிறது !

உன்
நினைவுகளின்
வலிகளோடு ....!

நவீன காதல்

ராஜா  ஒரு நடுத்தரமான குடும்பத்தை சார்ந்தவன்.. பல்வேறு கனவுகளுடன் பயணப்பட்ட தன் வாழ்க்கையில் பல அடிகளை பட்டவன்.. அவன் பட்ட வலிகளும் வேதனைகளும் பல வித்யாசமான பாடங்களை பயிற்றுவித்திருந்தது..

சோகம், துரோகம், அவமானம் என்னும் முகத்தை மறைக்க கோபம் என்னும் முகமூடி அணிந்தவனானான்..

தன்னை மட்டுமே நம்புபவன் யாருடைய நிழலிலும் இளைப்பாற விரும்புவதில்லை.. பெருமலவிலான தனது நட்பு வட்டாரங்களை பிரிந்து தனிமையில் வாடகை வீட்டில் வசித்து வந்தான்..

பிறர் பாதையில் பயனிக்காமல், தனக்கான தனி பாதையில் பயணித்தான்..

வாழ்க்கையின் பல சிக்கலான சிலந்தி வலைகளை கடந்தவன் இன்று காதல் வலையில்..

முகநூலில் ஒரு குருப் போஸ்ட்டில் கமெண்ட்டில் அவள் ஒருத்தி ஏழு ஆண்களுடன் விவாதம் செய்து கொண்டிருந்தாள்.. அந்த தைரியம், சாதுர்யமான பேச்சு.. குழந்தை தனம்.. விளக்கை தேடி வரும் விட்டில் பூச்சியாய் ஆண்களை ஈர்க்கத்தான் செய்யும்.. அவனும் விட்டில் பூச்சியானான்..

நட்புறவில் இணைந்தான்.. காதலை தெரிவித்தான்.. ஏற்றுக்கொண்டாள்.. நெருக்கமானார்கள்.. அவன் லூசு பொண்டாட்டி என அவளையும், அவள் ஹஸ்பண்ட் என அவனையும் கைபேசியில் பதிவு செய்தனர்..

தற்காலங்களில் கடவுள், கருணையற்றவராய் மனித வாழ்க்கையில் கலவரங்களை ஏற்படுத்தி ரசித்து கொண்டிருப்பார் போலும்..

அவன் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்தார்கள் ஒரு குடும்பத்தினர்..  அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக யாரோ தன்னை அடிக்கடி கவனிப்பதை உணர்ந்தான்.. 

கண்டுபிடித்து விட்டான்.. பெயர் சௌமியா..  +2தான் படிக்கிறாள்.. ஆனால் எதுவும் அவளிடம் கேட்கவில்லை.. அடிக்கடி அவன் வீட்டிற்கு அவன் வளர்க்கும் நாய்க்குட்டியை பார்ப்பதாக கூறி வருவாள்..

ஒருநாள்.. ஒரு தொலைப்பேசி அழைப்பு..  அழைத்துவிட்டு மௌனம் காத்தது.. புரிந்து கொண்டான்..

ராஜா          : சௌமியா..

சௌமியா : ம்ம்ம்ம்.. சொல்லுங்க..

ராஜா           : நீ தான் கால் பண்ணிருக்க நீ தான் சொல்லனும்..

சௌமியா  : நா, மணக்குள விநாயகர் கோவில் பக்கத்துல வெயிட் பண்றன்.. சீக்கிரம் வாங்க.. உங்க கிட்ட பேசனும்..

ராஜா           : என்ன ஆச்சு சௌமி, ஒரு மாதிரி பேசற, ஏதும் ப்ராப்ளமா.. பயப்படாத நா வரன் வெயிட் பண்ணு..

சௌமியா   : ப்ராப்ளம் லாம் இல்ல, நீங்க வாங்க.. பேசனும்..

ராஜா            : ம்ம்ம்.. வெயிட் பண்ணு டென் மினிட்ஸ்ல வரன்..

[கோவிலில்.. ]

ராஜா  : சொல்லு சௌமி.. என்ன ஆச்சு, என்ன விஷயம்..

சௌமி: ம்ம்ம்ம்ம்ம்.. வந்து... ம்ம்ம்ம்  எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு.. ராஜா.. i love u.. எனக்கு நீ வேணும்.. எப்டியும் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண நல்லா பாத்துப்ப.. அது நானா இருக்கனும் ஆச படுறன்.. ப்ளீஸ்..

ராஜா: ஏய், காமெடிலாம் பண்ணாத வா வீட்ல ட்ராப் பண்ற.. கெளம்பலாம் வா..

சௌமி: என்னய பார்த்தா காமெடி பண்ற மாதிரியா தெரியுது.. எனக்கு நீ வேணும் அவ்ளோதான்.. கலங்கிய கண்களுடன் நின்றாள்..

ராஜா: நெனச்சன்..  என்தப்புதான்.. ஆரம்பத்துலயே உன் கிட்ட நான் சொல்லி இருக்கனும்.. அல்ரெடி  எனக்கு ஆல் இருக்கு. வீ லவ் போத்.. அவ பேரு பூஜா.. fb லவ்தான்.. பட் அவளும் நம்ம ஏரியாதான்..  அண்ட் உனக்கும் இப்போ லவ் பண்ற வயசு இல்ல.. ஒழுங்கா படிக்குற வேளய பாரு..

சௌமி: பொய் சொல்லாதீங்க.. நீங்க கமிட்டட்'னு.. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.. எங்க அப்பா, அம்மா அடிக்கடி பேசிப்பாங்க.. உங்கள பத்தி பெருமையா.. நா படிச்சிட்டிருக்கும் போது கேட்டன்.. அண்ட் நா ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. எனக்கு எல்லாம் தெரியும்.. ப்ளீஸ் ஐ நீட் யு ராஜா..

ராஜா: அடி செருப்பு, சொன்னா புரியாதா உனக்கு..  ஒழுங்கா படிக்குற வேலய பாரு போ..

(அழுது கொண்டே அங்கிருந்து செல்கிறாள்)

வீட்டில் அடிக்கடி அவனை பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டாள்.. அவனும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தான்.. ஸ்குல் படிக்கற பொண்ணு மனசு நம்மால கெட கூடாது.. என எண்ணினான்..

இரண்டு மாதம் தொழில் சம்பந்தமாக பெங்களூர் கிளம்பினான்..தன் காதலி பூஜா அனுமதியுடன்..

இரண்டு மாதங்கள் முடிந்தது... வரும்போது வீட்டில் பெற்றோரின் கல்யாண அனுமதியோடு வந்தான்..

தன் வீட்டில் பெற்றோர், பூஜாவை பார்க்க விரும்பியதால்.. பைக்கில் மணக்குள விநாயகர் கோவில் வழியாக அவளை அழைத்து சென்றான்..

வழியில்,

சௌமியை சந்தித்த இடம்.. அங்கே இப்போது இன்னொருவனுடன் அவள் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்..

இதான் கொழந்த மனசு..பொதுவா பொண்ணுங்க உண்மையான அன்புக்காக ஏங்கிட்டு இருக்காங்க..
அவங்க குடும்பத்திலயே அந்த அன்பு கிடைச்சிருந்தா.. இந்த நேரத்துல அவளுக்கு காதல் தேவைப்பட்டு இருக்காது..
இதுல அவ மேல ஒரு தப்பும் இல்ல..
இப்பவும் அவன் கண்ணுக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள்..

மனமென்னும் மரமானது, சிறு புன்னகை பூக்களை உதிய்ந்ததாய் மொனமாய் கடந்து சென்றான்..

இப்போ என்னா சொல்ல வரன்னா..  நம்மலான்ட யாராச்சும் எதயாச்சும் எதிர்பார்த்து பழகினா...
முடியும் முடியாது உடனே சொல்லிடுங்க.. அவங்களுக்கு ஏமாற்றமாச்சும் மிஞ்சும்.. இங்க யாரும் கெட்டவங்க கிடையாது..
நம்மலாம் சாதாரண மனிதர்கள் தானே..

              

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...