ராஜா ஒரு நடுத்தரமான குடும்பத்தை சார்ந்தவன்.. பல்வேறு கனவுகளுடன் பயணப்பட்ட தன் வாழ்க்கையில் பல அடிகளை பட்டவன்.. அவன் பட்ட வலிகளும் வேதனைகளும் பல வித்யாசமான பாடங்களை பயிற்றுவித்திருந்தது..
சோகம், துரோகம், அவமானம் என்னும் முகத்தை மறைக்க கோபம் என்னும் முகமூடி அணிந்தவனானான்..
தன்னை மட்டுமே நம்புபவன் யாருடைய நிழலிலும் இளைப்பாற விரும்புவதில்லை.. பெருமலவிலான தனது நட்பு வட்டாரங்களை பிரிந்து தனிமையில் வாடகை வீட்டில் வசித்து வந்தான்..
பிறர் பாதையில் பயனிக்காமல், தனக்கான தனி பாதையில் பயணித்தான்..
வாழ்க்கையின் பல சிக்கலான சிலந்தி வலைகளை கடந்தவன் இன்று காதல் வலையில்..
முகநூலில் ஒரு குருப் போஸ்ட்டில் கமெண்ட்டில் அவள் ஒருத்தி ஏழு ஆண்களுடன் விவாதம் செய்து கொண்டிருந்தாள்.. அந்த தைரியம், சாதுர்யமான பேச்சு.. குழந்தை தனம்.. விளக்கை தேடி வரும் விட்டில் பூச்சியாய் ஆண்களை ஈர்க்கத்தான் செய்யும்.. அவனும் விட்டில் பூச்சியானான்..
நட்புறவில் இணைந்தான்.. காதலை தெரிவித்தான்.. ஏற்றுக்கொண்டாள்.. நெருக்கமானார்கள்.. அவன் லூசு பொண்டாட்டி என அவளையும், அவள் ஹஸ்பண்ட் என அவனையும் கைபேசியில் பதிவு செய்தனர்..
தற்காலங்களில் கடவுள், கருணையற்றவராய் மனித வாழ்க்கையில் கலவரங்களை ஏற்படுத்தி ரசித்து கொண்டிருப்பார் போலும்..
அவன் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்தார்கள் ஒரு குடும்பத்தினர்.. அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக யாரோ தன்னை அடிக்கடி கவனிப்பதை உணர்ந்தான்..
கண்டுபிடித்து விட்டான்.. பெயர் சௌமியா.. +2தான் படிக்கிறாள்.. ஆனால் எதுவும் அவளிடம் கேட்கவில்லை.. அடிக்கடி அவன் வீட்டிற்கு அவன் வளர்க்கும் நாய்க்குட்டியை பார்ப்பதாக கூறி வருவாள்..
ஒருநாள்.. ஒரு தொலைப்பேசி அழைப்பு.. அழைத்துவிட்டு மௌனம் காத்தது.. புரிந்து கொண்டான்..
ராஜா : சௌமியா..
சௌமியா : ம்ம்ம்ம்.. சொல்லுங்க..
ராஜா : நீ தான் கால் பண்ணிருக்க நீ தான் சொல்லனும்..
சௌமியா : நா, மணக்குள விநாயகர் கோவில் பக்கத்துல வெயிட் பண்றன்.. சீக்கிரம் வாங்க.. உங்க கிட்ட பேசனும்..
ராஜா : என்ன ஆச்சு சௌமி, ஒரு மாதிரி பேசற, ஏதும் ப்ராப்ளமா.. பயப்படாத நா வரன் வெயிட் பண்ணு..
சௌமியா : ப்ராப்ளம் லாம் இல்ல, நீங்க வாங்க.. பேசனும்..
ராஜா : ம்ம்ம்.. வெயிட் பண்ணு டென் மினிட்ஸ்ல வரன்..
[கோவிலில்.. ]
ராஜா : சொல்லு சௌமி.. என்ன ஆச்சு, என்ன விஷயம்..
சௌமி: ம்ம்ம்ம்ம்ம்.. வந்து... ம்ம்ம்ம் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு.. ராஜா.. i love u.. எனக்கு நீ வேணும்.. எப்டியும் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண நல்லா பாத்துப்ப.. அது நானா இருக்கனும் ஆச படுறன்.. ப்ளீஸ்..
ராஜா: ஏய், காமெடிலாம் பண்ணாத வா வீட்ல ட்ராப் பண்ற.. கெளம்பலாம் வா..
சௌமி: என்னய பார்த்தா காமெடி பண்ற மாதிரியா தெரியுது.. எனக்கு நீ வேணும் அவ்ளோதான்.. கலங்கிய கண்களுடன் நின்றாள்..
ராஜா: நெனச்சன்.. என்தப்புதான்.. ஆரம்பத்துலயே உன் கிட்ட நான் சொல்லி இருக்கனும்.. அல்ரெடி எனக்கு ஆல் இருக்கு. வீ லவ் போத்.. அவ பேரு பூஜா.. fb லவ்தான்.. பட் அவளும் நம்ம ஏரியாதான்.. அண்ட் உனக்கும் இப்போ லவ் பண்ற வயசு இல்ல.. ஒழுங்கா படிக்குற வேளய பாரு..
சௌமி: பொய் சொல்லாதீங்க.. நீங்க கமிட்டட்'னு.. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.. எங்க அப்பா, அம்மா அடிக்கடி பேசிப்பாங்க.. உங்கள பத்தி பெருமையா.. நா படிச்சிட்டிருக்கும் போது கேட்டன்.. அண்ட் நா ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. எனக்கு எல்லாம் தெரியும்.. ப்ளீஸ் ஐ நீட் யு ராஜா..
ராஜா: அடி செருப்பு, சொன்னா புரியாதா உனக்கு.. ஒழுங்கா படிக்குற வேலய பாரு போ..
(அழுது கொண்டே அங்கிருந்து செல்கிறாள்)
வீட்டில் அடிக்கடி அவனை பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டாள்.. அவனும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தான்.. ஸ்குல் படிக்கற பொண்ணு மனசு நம்மால கெட கூடாது.. என எண்ணினான்..
இரண்டு மாதம் தொழில் சம்பந்தமாக பெங்களூர் கிளம்பினான்..தன் காதலி பூஜா அனுமதியுடன்..
இரண்டு மாதங்கள் முடிந்தது... வரும்போது வீட்டில் பெற்றோரின் கல்யாண அனுமதியோடு வந்தான்..
தன் வீட்டில் பெற்றோர், பூஜாவை பார்க்க விரும்பியதால்.. பைக்கில் மணக்குள விநாயகர் கோவில் வழியாக அவளை அழைத்து சென்றான்..
வழியில்,
சௌமியை சந்தித்த இடம்.. அங்கே இப்போது இன்னொருவனுடன் அவள் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்..
இதான் கொழந்த மனசு..பொதுவா பொண்ணுங்க உண்மையான அன்புக்காக ஏங்கிட்டு இருக்காங்க..
அவங்க குடும்பத்திலயே அந்த அன்பு கிடைச்சிருந்தா.. இந்த நேரத்துல அவளுக்கு காதல் தேவைப்பட்டு இருக்காது..
இதுல அவ மேல ஒரு தப்பும் இல்ல..
இப்பவும் அவன் கண்ணுக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள்..
மனமென்னும் மரமானது, சிறு புன்னகை பூக்களை உதிய்ந்ததாய் மொனமாய் கடந்து சென்றான்..
இப்போ என்னா சொல்ல வரன்னா.. நம்மலான்ட யாராச்சும் எதயாச்சும் எதிர்பார்த்து பழகினா...
முடியும் முடியாது உடனே சொல்லிடுங்க.. அவங்களுக்கு ஏமாற்றமாச்சும் மிஞ்சும்.. இங்க யாரும் கெட்டவங்க கிடையாது..
நம்மலாம் சாதாரண மனிதர்கள் தானே..