Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts

மறக்கமுடியாத நினைவுகள்


 கோவில்ல எல்லாரும் விளக்கு ஏத்தி தெப்பக்குளத்துல விடுவாங்க, 
அது மிதந்து போறத பார்க்குறதுக்காகவே கோயிலுக்கு போன நாட்கள் ரொம்பவே அழகானது...



பக்கத்து வீட்டுக்காரங்க பார்க்கணும்ங்குறதுக்காக வெடிய கொழுத்தி அவங்க வீட்டுக்கு முன்னாடி வெடிக்கிறது. அவங்க சண்டைக்கு வந்தா ஒண்டும் தெரியாத போல நிற்போம்...


அந்த போன தொட்டு பேச எவ்வளவு ஆசை. என்னதான் மொபைல் விதவிதமா வந்தாலும், 
அந்த STD பூத் ல போய் பேசுற சுகமே தனி...


சின்ன வயசில நம்ம வீட்டுக்கு லெட்டர் வந்தால் நமக்கு எவ்வளவு பெருமையா இருக்கும். அதுமட்டுமல்ல போஸ்ட்மன்ட சைக்கிள் பெல்ல அடிச்சுட்டு அடிச்சுட்டு ஓடி போய்ருவோம்...


அந்த 2.30 மணி பெல்லு அடிச்சதும் எவ்வளவு சந்தோஷம். ஸ்கூல் ல இருந்து ஓட ஆரம்பிச்சா நேரா வீட்ல போய் தான் வண்டி நிக்கும்...


அந்த ரேடியோவில் இருக்கிற பட்டன திருக அவ்ளோ ஆசையா இருக்கும். ஆனா வீட்டில் உள்ள பெரியவங்க அத தொடவே விட மாட்டாங்க. நாங்க தொட்டாலும் எதையாவது நோண்டி வச்சிடுவோம். இருந்தாலும் அந்த ரேடியோவ பார்க்க அவ்ளோ ஆசை நமக்கு...


கோலிசோடா குடிக்கணும் போலவே இருக்கும். ஆனா கேட்டா வாங்கி தர மாட்டாங்க. எப்பவாவது வாங்கி தந்தா நல்லா என்ஜோய்  பண்ணி குடிப்போம்...


என் கூடவே வரனும். அப்ப தான் நான் கார்(பொம்ம) வாங்கி தருவேன், கூட்டத்தில் தொலைந்து விடக் கூடாது என்டு அம்மா சொல்லும் வார்த்தையை நம்பி அம்மாவின் கையை பிடித்துக் கொண்டே திருவிழா சென்ற நாட்களும் உண்டு...

தென்னை மட்டையில் ஏறி ஊரையே சுற்றுவோம். காயத்தோட வீட்ட போனா, அம்மா மருந்து போட்டு விடுவாங்க என்டு நினைப்பம். ஆனா அங்க அம்மம்மா துரத்தி துரத்தி அடிப்பாங்க...


இந்த உலகத்தில எவ்வளவு பெரிய ஓவியர்கள் இருந்தாலும் அவங்க எவ்வளவு பிரமாண்டமான படைப்புக்களை படைச்சாலும், நாம் வரையும் அந்த ரெண்டு மலை அதுக்கு நடுவில ஒரு சூரியன் மாதிரி யாராலும் வரைய முடியாது...

இந்த மயிலிறக குட்டி போட வைக்கிறதுக்கு நாங்க படுற பாடு இருக்கே... அப்பப்பா... மயிலிறக புத்தகத்துக்குள்ள வச்சு அடிக்கடி திறந்து பார்த்துட்டே இருப்போம்...


பொங்கல், தீபாவளி வந்தாலே, புது ட்ரெஸ் எடுத்து அதுல மஞ்சள் வச்சு அம்மா போட்டு விடும் போது ஹேப்பியா இருக்கும். அப்பிடியே அந்த ட்ரெஸ்ஸ ஊரே பார்க்குற மாதிரி நடந்து வருவோம்...


காடுகரையெல்லாம் சுத்தி காலில முள்ளு குத்திட்டு வந்தா,  எங்கட அம்மா தன்னோட எச்சில் தொட்டு ஊசி வச்சு முள்ள எடுத்து விடுவாங்க. என்னா வலி வலிக்கும். இருந்தாலும் அது அழகிய நினைவு தான்..



அந்த காலத்துல எல்லார் வீட்டு வாசல்லையும் உரல் கண்டிப்பா இருக்கும். பக்கத்து வீட்டுக்காரங்க ரெண்டு பேர் சேர்ந்து மிளகாய், அரிசி இடிப்பாங்க. ஏதாவது கதை பேசிட்டே இருப்பாங்க. ஆனா இன்று உரல் என்டா பாதி பேருக்கு என்ன என்டே தெரியாது...


குளிர் காலத்துல இப்படி தான் எல்லாருக்கும் குரங்கு குல்லாவும் சுவிட்டரும் போட்டு விடுவார்கள். ரொம்ப அழகா இருக்கும்...



குளத்துக்கரைல போய் நத்தை பொறுக்குவோம். அந்த ஈரத்துல புரண்டு போட்டி போட்டு யாருக்கு அதிகம் கிடைக்கும் என்டு ஆர்வமா தேடுவம்...

தண்டவாளத்துல காச வச்சு ரயில் போன பிறகு எடுத்து பார்த்தா, நசிஞ்சு போய் இருக்கும். அதுல ஒரு சந்தோஷம் நமக்கு...



ரயில் வந்தா டாட்டா காட்டுறதுக்காக பின்னாடியே ஓடின அனுபவம் ரொம்பவே அழகானது. சின்ன வயசில ரயில் பார்க்கிறதுல எவ்வளவு குஷி நமக்கு...


தோப்புக்குள்ள போய் இந்த மாங்காவ பறிக்கிறது எவ்வளவு கஷ்டம். ரெண்டு மாங்காவ பறிக்கிறதுக்குள்ள தோப்புக்காரன் கம்பு எடுத்து துரத்துவான். என்னா ஓட்டம்...



முன்னர் எல்லாம் எங்கட வீட்டுக்கு குறி சொல்றவங்க வருவாங்க. அவங்களுக்கு அரிசி, காசு, மரக்கறி கொடுப்போம். அத நான் தான் குடுக்கனும் என்டு சண்டை போடுவம் வீட்டில.அவங்க அத வாங்கிட்டு நல்லா இருமா என்டு வாழ்த்திட்டு போவாங்க...


பாட்டி கதை கேட்டு தூங்கின நினைவுகள் எவ்வளவு அழகானவை. பாட்டி கதை கேட்கிறதுக்கு பக்கத்து வீட்டில இருந்து எல்லாம் சின்ன பசங்க ஓடி வருவாங்க...

மழை பெய்து முடிந்ததும் மரக்கிளைல தேங்கி நிற்கிற மழை தண்ணிய ஆட்டி எங்க மேல போட்டதும் தனி சந்தோஷம்...


யாராவது பேசுறாங்களானு டீச்சர் இப்படி தான் பார்ப்பாங்க. ஆனாலும் எங்கள கண்டுபிடிக்கவே முடியாது. படிக்கிற மாதிரியே முகத்த வச்சிட்டு, தலைய குனிஞ்சு பேசிட்டுதான் இருப்போம்...


ஸ்கேல தலைல வச்சு தேச்சு, பேப்பர சின்னதா கிழிச்சு போட்டு, தேச்ச ஸ்கேல் மேல வச்சா ஒட்டி பிடிக்கும். ஏதோ பெரிய மேஜிக் செய்த போல சந்தோஷம்...



பரீட்சை அப்போ படிக்கும் போதும் மட்டும் தான் நாங்க புத்தகத்த திறந்து பார்ப்போம். ஆனா அப்பிடியே படிச்சு தள்ளுற மாதிரி எங்களுக்கு நடராஜா பாக்ஸ், பேனா, றப்பர், பென்சில் எல்லாத்தையும் புதுசா வாங்கி தர சொல்லி அடம்பிடிப்போம்...


மாறுவேட போட்டில கலந்துக்குறதுக்கு எவ்வளவு ஆசையா இருக்கும். என்ன வேஷம் போட்டாலும் கோமாளி மாரிதான் இருப்போம். ஆனா கூட அதுல இருக்கிற அனுபவம் ரொம்பவே அழகானது...


க்ளாஸ் ல கொஞ்சம் நல்லா படிச்சா போதுமே, அவனுங்க ஆட்டம் தாங்க முடியாது. பரீட்சைக்கு போறதுக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சிட்டே இருப்பாங்க...


டீச்சர் முன்னாடி பாடம் நடத்தினா, நாங்க பின்னாடி உட்காந்து ஏதாவது சாப்பிடுட்டு இருப்போம். அதுவும் சத்தமே இல்லாம சாப்டுவோம். பக்கத்துல இருக்கிறவனுக்கு குடுக்கலைனா போட்டு குடுத்துடுவாங்க...


புக்குல இருக்கிற படங்கள இப்படி கட்பண்ணி சேத்து வச்சிருக்கீங்களா..? நாங்க இப்பிடி தான் நிறைய படங்களை சேத்து வச்சிருப்போம்...



அது செஞ்சு கொண்டு வா, இது செஞ்சு கொண்டு வா னு டீச்சர் சொல்லிட்டா போதும் நாங்க உடனே கத்தரிக்கோல், சபை, கலர் எல்லாம் வாங்கி ஏதாவது செய்து கொண்டு போவோம். சின்ன வயசில சொந்தமா நாமாவே செய்றதுல இருக்குற சந்தோஷமே தனி...


ஸ்கூல்ல இந்த ஸ்டாப் ரூம் பக்கத்துல போனாலே ஒரே பயமா இருக்கும். அத க்ராஸ் பண்றதுக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு போவோம்...

இடைவேளை பெல் அடிக்கும் போது, எல்லாரும் தங்கட டிபன் பாக்ஸ் ஓபன் பண்ணேக வருமே ஒரு வாசம்... ஆனா நம்ம எப்பவும் சத்துணவு தான் சாப்பிடுவம். அந்த டைம் பெல் அடிச்சதும் தட்ட தூக்கிடு ஓடுவம்...

ஸ்கூல்ல அடுத்தவன் சட்டைல தண்ணிய ஊத்தி விளையாடுறதுல இருக்கே ஒரு சந்தோஷம், அது அவன முழுசா நனைக்கும் வரை விடவே மாட்டம்...


நமக்கு பிறந்தநாள் வந்தாலே செம ஜாலி தான். புது ட்ரெஸ் போட்டு க்ளாஸ் ல எல்லாருக்கும் சாக்லேட் குடுப்பம், அதுலயும் நம்ம ப்ரண்ட்ஸ் மட்டும் நமக்கு எக்ஸ்ரா 2 சாக்லேட் தருவா. அதுக்காகவே வெய்ட பண்ணுவம்...

வகுப்பில் யாருக்காவது பிறந்தநாள் வந்தா நமக்கு தான் ரொம்ப சந்தோஷம், ஏன்னா சாக்லேட் குடுப்பாங்க. டீச்சருக்கு மட்டும் பெரிய சாக்லெட் குடுக்கிறப்போ நாங்க யோசிப்பம், யாருக்கு அந்த சாக்லேட்ட டீச்சர் குடுக்க போறானு...


க்ளாஸ் பெஞ்சுல கொட்டு அடிக்கிற சுகமே தனி. யார்ரா கொட்டு அடிச்சதுனு வாத்தியார் கேட்கும் போது எவனாவது போட்டு குடுத்திடுவானோ னு பயமா வேற இருக்கும்...



பேசுறவன் பேர போர்டுல எழுதி வை னு டீச்சர் சொல்லிட்டா போதும், இந்த லீடரா இருக்கவனுக பண்ற அட்டூழியம் இருக்கே, அப்பப்பா...



ஆண் தேவதை

ஓர் ஆணிண் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நான் அறிந்த என் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளேன்....  

ஓரு ஆண் தன்னுடைய சிறு வயதில் தாய் தந்தை அன்புடன் வளர்கிறான்.

பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் பழகுகிறான்.அவன் பதின்ம பருவங்களிள் வீட்டின் சுழ்நிலை அறிந்து அதற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளுகிறான்.
அவனுடைய ஆசைகள் நிராசை ஆகின்றன.

கல்லூரி பருவத்தில் தோழர்களுடன் பயணிக்கிறான்.அவனுடைய வாலிபத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம்.

உண்மையான அன்பிற்கும் பொய்யான உறவுக்கும் வேறுபாடு அறியும் காலம் அது

அந்த கல்லூரி பருவத்தில் காதல் வருகிறது... ஆனால் பல ஆண்களுக்கு வீட்டு சுழ்நிலை ,பொருளாதார சிக்கல்,சகோதர,சகோதரி வாழ்க்கை என தியாகம் செய்யப்பட வேண்டியுள்ளது பின் திருமணம் ..

திருமண வாழ்க்கையும் சில நேரங்களில் ஆண்களை சுழ்நிலை கைதியாக்குகிறது... பெற்றோரா? மனைவியா? என.குழம்பிதவிக்கிறான் அவன்

இதில் உறவினர்களின் தவறான புரிதல்களையும் தீர்க்க பாடுபடுகிறான்...
மனைவி குழந்தைகளின் தேவைகளை தீர்க்க வேலையில் ஈடுபட்டு பொருள் ஈட்டுகிறான்......

அவனுக்கான தேவைகள் சுருக்க படுகின்றன....
அவன் அவனுக்காக வாழ்வது அரிதாகி போகிறது சில ஆண்களின் வாழ்கையில்,
ஆணும் தேவதையே
தன் மனைவிக்கு, குழந்தைக்கு... முதுமையில் பெற்றோருக்கு
ஆண் தேவதைதான்.......

காதல் வலி..

அவன் ஒரு நடுத்தரமான குடும்பத்தை சார்ந்தவன்.. பல்வேறு கனவுகளுடன் பயணப்பட்ட தன் வாழ்க்கையில் பல அடிகளை பட்டவன்.. அவன் பட்ட வலிகளும் வேதனைகளும் பல வித்யாசமான பாடங்களை பயிற்றுவித்திருந்தது..

சோகம், துரோகம், அவமானம் என்னும் முகத்தை மறைக்க கோபம் என்னும் முகமூடி அணிந்தவனானான்..

தன்னை மட்டுமே நம்புபவன் யாருடைய நிழலிலும் இளைப்பாற விரும்புவதில்லை.. பெருமலவிலான தனது நட்பு வட்டாரங்களை பிரிந்து தனிமையில் வாடகை வீட்டில் வசித்து வந்தான்..

பிறர் பாதையில் பயனிக்காமல், தனக்கான தனி பாதையில் பயணித்தான்..

வாழ்க்கையின் பல சிக்கலான சிலந்தி வலைகளை கடந்தவன் இன்று காதல் வலையில்..

முகநூலில் ஒரு குருப் போஸ்ட்டில் கமெண்ட்டில் அவள் ஒருத்தி ஏழு ஆண்களுடன் விவாதம் செய்து கொண்டிருந்தாள்.. அந்த தைரியம், சாதுர்யமான பேச்சு.. குழந்தை தனம்.. விளக்கை தேடி வரும் விட்டில் பூச்சியாய் ஆண்களை ஈர்க்கத்தான் செய்யும்.. அவனும் விட்டில் பூச்சியானான்..

நட்புறவில் இணைந்தான்.. காதலை தெரிவித்தான்.. ஏற்றுக்கொண்டாள்.. நெருக்கமானார்கள்.. அவன் லூசு பொண்டாட்டி என அவளையும், அவள் ஹஸ்பண்ட் என அவனையும் கைபேசியில் பதிவு செய்தனர்..

தற்காலங்களில் கடவுள், கருணையற்றவராய் மனித வாழ்க்கையில் கலவரங்களை ஏற்படுத்தி ரசித்து கொண்டிருப்பார் போலும்..

அவன் பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்தார்கள் ஒரு குடும்பத்தினர்..  அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக யாரோ தன்னை அடிக்கடி கவனிப்பதை உணர்ந்தான்.. 

கண்டுபிடித்து விட்டான்.. பெயர் சௌமியா..  +2தான் படிக்கிறாள்.. ஆனால் எதுவும் அவளிடம் கேட்கவில்லை.. அடிக்கடி அவன் வீட்டிற்கு அவன் வளர்க்கும் நாய்க்குட்டியை பார்ப்பதாக கூறி வருவாள்..

ஒருநாள்.. ஒரு தொலைப்பேசி அழைப்பு..  அழைத்துவிட்டு மௌனம் காத்தது.. புரிந்து கொண்டான்..

ராஜா          : சௌமியா..

சௌமியா : ம்ம்ம்ம்.. சொல்லுங்க..

ராஜா           : நீ தான் கால் பண்ணிருக்க நீ தான் சொல்லனும்..

சௌமியா  : நா, மணக்குள விநாயகர் கோவில் பக்கத்துல வெயிட் பண்றன்.. சீக்கிரம் வாங்க.. உங்க கிட்ட பேசனும்..

ராஜா           : என்ன ஆச்சு சௌமி, ஒரு மாதிரி பேசற, ஏதும் ப்ராப்ளமா.. பயப்படாத நா வரன் வெயிட் பண்ணு..

சௌமியா   : ப்ராப்ளம் லாம் இல்ல, நீங்க வாங்க.. பேசனும்..

ராஜா            : ம்ம்ம்.. வெயிட் பண்ணு டென் மினிட்ஸ்ல வரன்..

[கோவிலில்.. ]

ராஜா  : சொல்லு சௌமி.. என்ன ஆச்சு, என்ன விஷயம்..

சௌமி: ம்ம்ம்ம்ம்ம்.. வந்து... ம்ம்ம்ம்  எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு.. ராஜா.. i love u.. எனக்கு நீ வேணும்.. எப்டியும் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண நல்லா பாத்துப்ப.. அது நானா இருக்கனும் ஆச படுறன்.. ப்ளீஸ்..

ராஜா: ஏய், காமெடிலாம் பண்ணாத வா வீட்ல ட்ராப் பண்ற.. கெளம்பலாம் வா..

சௌமி: என்னய பார்த்தா காமெடி பண்ற மாதிரியா தெரியுது.. எனக்கு நீ வேணும் அவ்ளோதான்.. கலங்கிய கண்களுடன் நின்றாள்..

ராஜா: நெனச்சன்..  என்தப்புதான்.. ஆரம்பத்துலயே உன் கிட்ட நான் சொல்லி இருக்கனும்.. அல்ரெடி  எனக்கு ஆல் இருக்கு. வீ லவ் போத்.. அவ பேரு பூஜா.. fb லவ்தான்.. பட் அவளும் நம்ம ஏரியாதான்..  அண்ட் உனக்கும் இப்போ லவ் பண்ற வயசு இல்ல.. ஒழுங்கா படிக்குற வேளய பாரு..

சௌமி: பொய் சொல்லாதீங்க.. நீங்க கமிட்டட்'னு.. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.. எங்க அப்பா, அம்மா அடிக்கடி பேசிப்பாங்க.. உங்கள பத்தி பெருமையா.. நா படிச்சிட்டிருக்கும் போது கேட்டன்.. அண்ட் நா ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. எனக்கு எல்லாம் தெரியும்.. ப்ளீஸ் ஐ நீட் யு ராஜா..

ராஜா: அடி செருப்பு, சொன்னா புரியாதா உனக்கு..  ஒழுங்கா படிக்குற வேலய பாரு போ..

(அழுது கொண்டே அங்கிருந்து செல்கிறாள்)

வீட்டில் அடிக்கடி அவனை பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டாள்.. அவனும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தான்.. ஸ்குல் படிக்கற பொண்ணு மனசு நம்மால கெட கூடாது.. என எண்ணினான்..

இரண்டு மாதம் தொழில் சம்பந்தமாக பெங்களூர் கிளம்பினான்..தன் காதலி பூஜா அனுமதியுடன்..

இரண்டு மாதங்கள் முடிந்தது... வரும்போது வீட்டில் பெற்றோரின் கல்யாண அனுமதியோடு வந்தான்..

தன் வீட்டில் பெற்றோர், பூஜாவை பார்க்க விரும்பியதால்.. பைக்கில் மணக்குள விநாயகர் கோவில் வழியாக அவளை அழைத்து சென்றான்..

வழியில்,

சௌமியை சந்தித்த இடம்.. அங்கே இப்போது இன்னொருவனுடன் அவள் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்..

இதான் கொழந்த மனசு..பொதுவா பொண்ணுங்க உண்மையான அன்புக்காக ஏங்கிட்டு இருக்காங்க.. அவங்க குடும்பத்திலயே அந்த அன்பு கிடைச்சிருந்தா.. இந்த நேரத்துல அவளுக்கு காதல் தேவைப்பட்டு இருக்காது.. இதுல அவ மேல ஒரு தப்பும் இல்ல.. இப்பவும் அவன் கண்ணுக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள்..

மனமென்னும் மரமானது, சிறு புன்னகை பூக்களை உதிய்ந்ததாய் மௌனமாய் கடந்து சென்றான்..

இப்போ என்னா சொல்ல வரன்னா..  நம்மலான்ட யாராச்சும் எதயாச்சும் எதிர்பார்த்து பழகினா... முடியும் முடியாது உடனே சொல்லிடுங்க.. அவங்களுக்கு ஏமாற்றமாச்சும் மிஞ்சும்.. இங்க யாரும் கெட்டவங்க கிடையாது.. நம்மலாம் சாதாரண மனிதர்கள் தானே..

                -------🍀-------🍀--------

  

Cute Love Story

Namma stry hero Raja heroine Ramya

Innaiku Ramya ah ponnu pakka varanga

R.amma :Ramya innaiku ofc leave potudu

Ramya : yen ma

R.appa : yendi pullakita nit ae sollalaya

R.amma : unga ponnu sonna keturuva parunga neengalae sollunga

Ramya : rendu perum sanda podama enanu sollunga

R.appa :onnulada unna innaiku ponnu pakka varanga

Ramya :appa naanthan sonnanae enaku ipo mrge venamnu

R.amma :aprm epodi pannuva

Ramya : apdi pannanumnu thonuna unaku panniko

R.amma :adi kalutha vaai paru

R.appa : enaku ok than da apdiyae enakum

R.amma :enna sonninga😡😡

R.appa :illama coffee kedaikuma nu ketta

Ramya :appa supr ah samalikuringa

R.appa :sari atha viduda innaiku varuvanga en frnd oda family tha rmba naalku aprm last week tha patha athan avunga unna ponnu pakka varatha sonnanga ethum ennala solla mudila da

Ramya :enna pa ipdi soldringa

R.appa :ithu oru formality than da aprm ethathu sollikalam

Ramya :mm sari

Ramya ofc ku leave sollitu kelambura pink colour saree lite makeup free hair vitu knjm ah poo vachukita

Meanwhile RAJA home

RAJA :mudiyathu mudiyathu neenga ena sonnalum enala intha mrge ku othuka mudiyathu

KEERTHI :dei anna una ipo ponnu pakkatha kupduranga ponnu ok sonnatha mrge athukula unarchivasapadatha

R.amma :en pullaiku enadi kora

KEERTHI :ellamae kora tha

R.amma :en pullaya katika antha ponnutha kuduthuvachurukanum

Keerthi :ama ama sonnanga

Raja :adinga

Keerthi :appaaaaa....

R.appa :ena soldran un pulla

R.amma :avan ipo mrge venam nu soldranga

R.appa :enathu

Raja :illapa epo kelambanum

R.amma :😳😳😳

Keerthi :un pullaya nambatha nu sonna ketiya 😂😂😂

Raja oru valiya kelambi vanthutan blue shirt white pant formal dress la semma handsome ah irunthan

Keerthi :dei anna una anni pathanga flat aaiduvanga

Raja :shuu.. summa irudi enga un purushan

Sasi :naa inga iruka mchn

Raja :vaada nallavanae ithula unaku theriyuma

Sasi :ama da

R.appa :innu ena pesuringa kelambunga

Raja :tho kelambita pa

Sasi :oiii..

Keerthi :ennada

Sasi :super ah iruka di intha saree la

Keerthi :😊😊

Raja :pothum vaanga polam

Sasi :ivan oruthan ivanum njoy pannamata nammalayum vidamata nee vaa chlm

Keerthi :😂😂😂

Aprm epdiyo ellarum Ramya vetuku poitanga

Ramya.appa :vaada vaanga ellarum

Raja.appa :epdida iruka

Ramya.appa :enaku enada supr ah iruka ulla vaanga ellarum

Ramya.amma :vaanga ellarum

Aprm ellarum knjm neram pesitu irukanga

Raja.amma :ponna vara sollunga

Sasi :iiiii kuptanga kuptanga

Raja :nee enda ipo pongura

Sasi :oru aarvathula

Raja :aahaan anga paru

Keerthi sasiya ah moraikura

Sasi :illada enaku avunga thangachi

Keerthi :nyabham irutha saritha

Raja :😂😂😂

Sasi :sirikatha da

Ramya ellarukum coffee kudukra

Raja.amma :inga vaa da

Ramya :😊😊

Raja.appa :engaluku ponna rmba pudichuruku

Ramya.appa :engalukum paiyana pudichuruku

Raja.amma :namaku pudicha pothuma vaala poravangaluku pudika venam

Sasi :crct ah sonninga athai ithuku tha neenga venumnu soldrathu

Ramya.appa :ama da paiyan kita kelu

Raja.appa :avan en pecha meeramatan engaluku ok da ramya ah kelu

Ramya.appa :ramya  nee enada soldra

Ramya :unga virupam pa

Sasi :unga appa unkita oru vaartha ketara da ana antha uncle ah paru da

Raja :knjm mooditu iru da

Raja.appa :aprm ennada mathathu ella pesidalam

Apdiyae 1 mnth la mrge mudichutanga

Ipo namma hero heroine ku first nit

At room

Raja Ramya rendu perum sirikuranga

En sirikuranga purilathana vaanga avungalae kekalam

Oru flashback

RAJA and RAMYA ore ofc tha rendu perum 2yrs ah love pandranga 2 family kum love mrge pudikathu apotha p.appa and s.appa close frnds nu therinjuthu

RAMYA R.appa and amma ah follow panni avungala impress pannita athunala R.appa RAMYA pathi visarichu avunga frnd oda ponnunu therinjathum udanae poi ponnu kettu mrge um panni vachutanga

Ivlotha pa nadanthuchu

RAMYA :am so hpy da

RAJA :love u so much di namma aasapata mathiri namma parents samathsthoda namma mrge nadanthuruchu

RAMYA :love you too da

                ****END****

என்னுடையவள் நீ்

கதிர்: "அபி உன்கிட்ட  கொஞ்சம் பேசனும் கேண்டின் வறியா"

அபி: "நீ போடா லேப்கு போய்ட்டு வர்ரேன் "

அபி: "சொல்லுடா என்ன விசயம் "

கதிர்: "நான் உன்ன  விரும்புரேன் "
குடித்துக்கொண்டிருந்த காபி அவன் கூறியதை கேட்டு , புரை ஏறி விட்டது
தான் கேட்டது கனவா நினைவா என்ற அதிர்ச்சியில்

அபி:  "என்னடா கனவு எதும் கண்டியா"

கதிர்: "உன்ன எனக்கு பிடிக்கும் மனப்பூர்வமா உன்ன விரும்புரேன்
ஐ லவ் யூ"

அபி: "லூசுமாரி பேசாம  போய் எக்ஸாம்க்கு படிக்குற வழியப்பாரு"

கதிர்: "அணு விளையாட்டு
இல்ல சீரியஸ்"

அபி: "நானும் சீரியஸ்ஸாதான் சொல்றேன் இனி என்கிட்ட பேசாத கோபமாக சென்றுவிட்டாள் "

இரவு முழுவதும் அணுவிற்கு தூக்கம் வரவில்லை

               மறுநாள்

அபி: "கௌதம்,,,கௌதம்,,,, நில்லு,,,கௌதம்,,,,"

அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விட்டான், போன்,மெசேஜ் விடாமல் செய்தாள் எதற்கும் அவனிடம் இருந்து பதில் இல்லை , இப்படியே  இருபது நாள் சென்றது

'ஏன்டா இப்படி பண்ற மனசே சரியில்ல எக்ஸாம்க்கு படிக்க முடியல  இந்த மெசேஜ்க்கு கௌதமிடம்மிருந்து உடனே பதில் வந்தது'

கதிர்: "இது பைனல்இயர் மனசுலபோட்டு எதையும் குழப்பிக்காம நல்லா படி"

அபி: "அப்ப நீ என்ட பேசமாட்டியா
சிணுங்களுடன் கேட்டவளின் முகத்தை எண்ணி சிரித்தவன்

கதிர் : "எக்ஸாம் முடியட்டும் எதாஇருந்தாலும் அப்பறம் பேசலாம்"

எக்ஸாம்க்குப்பின் அபி எவ்வளவு முயன்றும் கௌதமை தொடர்புகொள்ள முடியவில்லை

        ஒருவருடதிற்கு பின்,,,,,

அபி தனக்கு வந்த வரன்களை எல்லாம் தட்டிவிட்டுக்கொண்டிரந்தாள்

ஒரு நாள் கதிர் இருந்து போன் வந்ததது

கதிர்: "அணு எப்படி இருக்க"?

அபி: "நான் இப்படி இருந்தா உனக்கு என்னடா நாயே"

கதிர்: "என் மேல கோபமா இருக்கியா அணு"

அபி: "சொல்லாமகொல்லாமா  ஓடிப்போனவன் மேல கோப்ப்படாமா  பாசப்பயிறையா வளப்பாங்க, 
இப்ப என்ன ம** குடா போன்பன்ன"

கதிர் :"எனக்கு நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட் பிக்ஸ் ஆயிருக்கு"

அபி : " அதுக்கு என்ன கூப்பிடலாம்னு போன் பண்ணியா போன வைடா நாயே "

அந்த நேரம் அவளின் தந்தை உள்ளே வர

அபி அப்பா:  "யாரம்மா திட்டிட்டு இருக்க"

அபி : "என் ப்ரெண்ட் திடீர்னு மேரேஜ்னு போன் பண்ற அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே என்கேஜ்மென்ட் முடிஞ்சிருக்கு எனக்கு இப்பதான் இன்ஃபார்ம் பண்றா அதான்  திட்டினேன் "

அபி அப்பா : "சரிம்மா நாளைக்கு  உன்ன  பொண்ணு பாக்க வராங்க, வரச்சொல்லட்டுமா"?

அபி : "என்னப்பா என்ன கேக்குறீங்க"

அபி அப்பா:   "இந்த வரனையும் நீ வேணான்னு நினைச்சா இப்பவே சொல்லிடு நாளைக்கு அவங்கள வரவேண்டாம்னு சொல்லியர்றேன் "

அபி : "இல்லப்பா இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன் உங்களுக்கு புடிச்சிருந்தா சரி "

ஆச்சரியத்தோடு மகளை பார்த்தவர்,  அதற்கு மேலும் கேட்க விரும்பாமல்
'வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் '

அபி அப்பா:  "சரிமா,  என்று மகளிடம் கூறிவிட்டு வெளியே வந்து மனைவியிடம் இப்பதான் உன் பொண்ணுக்கு புத்தி வந்துருக்கு நாளைக்கு  வர்ற  வரன எப்படியும் பேசி முடிச்சிடனும் ,,,"

                மறுநாள்

அபி அப்பா :  " இவர்தான் மாப்பிளை"
என்று அவள் தந்தை காட்டிய இடத்தில்

கதிரை பார்த்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு நின்று விட்டாள்

அபி அப்பா:  " நீ படிச்ச காலேஜ்ல தான் மா மாப்பிள்ளையும் படிச்சிருக்காரு "

கதிரோ அபியின்  தந்தை காதில்
ஏதோ கூறினான்

"அதுக்கு என்ன மாப்ள பேசிட்டு வாங்க "

அபி மாப்ள உங்க கிட்ட தனியா பேசணும் பேசிட்டு வாங்க

கதிர்  :  "கோபமாய் இருக்கியா அபி"

அபி  : "இப்ப எதுக்கு இந்த பொண்ணு பாக்குற நாடகம் ,உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை நீ போ"

கதிர்  : "நான் உன்கிட்ட ஏன் காதலை சொன்னப்ப பேசாத
போன்னு சொன்ன"

அபி : "நான் சொன்னா  நீ பேசாம
இருப்பியா, நானே திரும்ப போன்   பண்ணேன் ,மெசேஜ் பண்ணேன் எதுக்குமே நீ ரெஸ்பான்ஸ் பண்ணல ஏன்"

கதிர் : "என் மேல நீ வச்சிருக்க காதலை நீ  உணரணும்ங்குறதுக்காகதான் "

அபி : " புரியாமல் அவனை பார்த்தாள் "

கதிர் : "நீ என்ன விரும்புறேன்னு எனக்குத் தெரியும் மை டியர் "

அபி  : "தெரிஞ்சவன் ஏன் ஒரு வருஷமா தவிக்க விடனும் "

கதிர் : "ஏன் லட்டு பாப்பா, என்ன நம்பிவர்றவள என் சொந்த உழைப்பில்
நான்காப்பாற்ற வேண்டாமா அதுக்குத்தான்
இப்ப சொல்லு நான் உன்னை விரும்புகிறேன்
என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா "

அபி :  அவள் கோபமாக முகத்தை
திருப்பிக்கொள்ளவும்  அவளுக்காக அவன் வாங்கிட்டு வந்த கிப்டை
அவள் முன் மண்டியிட்டு ,
"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா
அபி குட்டி " 

அவனது proposal அவள் மனம் முழுவதும் இன்பத்தை வாரி இறைத்திருந்தது பனிமலையின் நனைந்ததைப்போல் உணர்ந்தவள், அதை மறைத்துக் கொண்டு

அபி:  "உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா லவ் பண்ண மாட்டேன் "

கதிர்:  அதிர்ச்சியோடு அவளை புரியாத  பார்வை பார்த்தான்

அபி:  "ஆமா நான் உன்ன லவ்
பண்ணமுடியாது,
என்கூட காலேஜ்ல படிச்ச கதிர்த்தான் விரும்புறேன் "

கதிர்: "அப்ப நான் யாரு டி"

அபி: "நீ என்ன பொண்ணு
பாக்கவந்துருக்க மாப்பிள "

கதிர்:  "சரி அப்ப இந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டு நான் கிளம்பறேன் "

அபி :  "உன்னை என்ன பண்றேன் பாரு அவள் கை வலிக்கும் வரை அவனை அடித்து ஓய்ந்தவள் உன்னால எங்க அப்பாட்ட எவ்வலோ திட்டு வாங்கி இருக்கேன் தெரியுமாடா"

கதிர்:  "தெரியும் டியர் ,பட் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ , உனக்கு வந்த வரன்
எல்லாம் தட்டி போனது -நீ சொன்னால மட்டும் இல்ல
மறைமுகமாக இருந்து நான்தான்
உனக்கு வந்தவரன்
எல்லாத்தையும் தட்டிவிட்டேன் "

அபி :  " அட பிராடு பயலே...."

கதிர்: " அப்புறம் நீ வேணான்னு சொன்னா உடனே உங்க அப்பா பேசாம இருந்துருவாரூன்னு நெனச்சியா"

தன் தந்தையைப் பற்றி அறிந்தவள் அவன் கூறியதற்க்கு இல்லை என்பது போல் தலை அசைத்தாள்

கதிர்: "என்  காதலை உனக்கு உணர்த்திட்டு எப்படி  டி  உன்ன வேறு ஒருத்தனுக்கு தூக்கி கொடுப்பேன் , என்னைக்கு இருந்தாலும்  என்னுடையவள் நீ "

அவனது காதலின் ஆழத்தை உணர்ந்தவள் அவன் நெஞ்சில் முகம்
புதைத்துக்கொண்டாள்

அங்கிருக்கும் சூழ்நிலையை அவன் உணர்ந்திருந்தாலும்
அந்த நிமிடம் தன் நெஞ்சில் புதைந்திருந்தவளை விடுவிக்க அவனுக்கு மனம் வரவில்லை
வெளியே பேச்சு குரலும் , சிரிப்பொலியும்  தான் அவனை சுய உணர்வுக்கு
கொண்டுவந்தது

கதிர்: "நம்ம சேரனுமா , வேணாமாடி  "

அவன் இப்படிக் கேட்டதும் சட்டென்று   அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு  கோபத்தோடு அவன் முகத்தை பார்த்தாள்

கதிர்: "நம்மளைப் உன் அப்பா இப்படி பார்த்தாரு அவ்வளவுதான் , நம்மளை நாமே
காட்டிகொடுத்தமாதிரி ஆயிடும்
என்னோட சின்ன கிப்ட் "
என்றபடி அபியின் கரங்களைப் பற்றி
அவள் பிஞ்சு விரல்களில் முத்தமிட்டான்

தன்னவனின் முதல் இதழொற்றளிள்  மயங்கி நின்று விட்டாள்  அபி ,
தை மாசம் கல்யாணம் என்று தந்தையின் குரல் செவியில் ஒலித்தது, ,,,,,,

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...