கதிர்: "அபி உன்கிட்ட கொஞ்சம் பேசனும் கேண்டின் வறியா"
அபி: "நீ போடா லேப்கு போய்ட்டு வர்ரேன் "
அபி: "சொல்லுடா என்ன விசயம் "
கதிர்: "நான் உன்ன விரும்புரேன் "
குடித்துக்கொண்டிருந்த காபி அவன் கூறியதை கேட்டு , புரை ஏறி விட்டது
தான் கேட்டது கனவா நினைவா என்ற அதிர்ச்சியில்
அபி: "என்னடா கனவு எதும் கண்டியா"
கதிர்: "உன்ன எனக்கு பிடிக்கும் மனப்பூர்வமா உன்ன விரும்புரேன்
ஐ லவ் யூ"
அபி: "லூசுமாரி பேசாம போய் எக்ஸாம்க்கு படிக்குற வழியப்பாரு"
கதிர்: "அணு விளையாட்டு
இல்ல சீரியஸ்"
அபி: "நானும் சீரியஸ்ஸாதான் சொல்றேன் இனி என்கிட்ட பேசாத கோபமாக சென்றுவிட்டாள் "
இரவு முழுவதும் அணுவிற்கு தூக்கம் வரவில்லை
மறுநாள்
அபி: "கௌதம்,,,கௌதம்,,,, நில்லு,,,கௌதம்,,,,"
அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விட்டான், போன்,மெசேஜ் விடாமல் செய்தாள் எதற்கும் அவனிடம் இருந்து பதில் இல்லை , இப்படியே இருபது நாள் சென்றது
'ஏன்டா இப்படி பண்ற மனசே சரியில்ல எக்ஸாம்க்கு படிக்க முடியல இந்த மெசேஜ்க்கு கௌதமிடம்மிருந்து உடனே பதில் வந்தது'
கதிர்: "இது பைனல்இயர் மனசுலபோட்டு எதையும் குழப்பிக்காம நல்லா படி"
அபி: "அப்ப நீ என்ட பேசமாட்டியா
சிணுங்களுடன் கேட்டவளின் முகத்தை எண்ணி சிரித்தவன்
கதிர் : "எக்ஸாம் முடியட்டும் எதாஇருந்தாலும் அப்பறம் பேசலாம்"
எக்ஸாம்க்குப்பின் அபி எவ்வளவு முயன்றும் கௌதமை தொடர்புகொள்ள முடியவில்லை
ஒருவருடதிற்கு பின்,,,,,
அபி தனக்கு வந்த வரன்களை எல்லாம் தட்டிவிட்டுக்கொண்டிரந்தாள்
ஒரு நாள் கதிர் இருந்து போன் வந்ததது
கதிர்: "அணு எப்படி இருக்க"?
அபி: "நான் இப்படி இருந்தா உனக்கு என்னடா நாயே"
கதிர்: "என் மேல கோபமா இருக்கியா அணு"
அபி: "சொல்லாமகொல்லாமா ஓடிப்போனவன் மேல கோப்ப்படாமா பாசப்பயிறையா வளப்பாங்க,
இப்ப என்ன ம** குடா போன்பன்ன"
கதிர் :"எனக்கு நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட் பிக்ஸ் ஆயிருக்கு"
அபி : " அதுக்கு என்ன கூப்பிடலாம்னு போன் பண்ணியா போன வைடா நாயே "
அந்த நேரம் அவளின் தந்தை உள்ளே வர
அபி அப்பா: "யாரம்மா திட்டிட்டு இருக்க"
அபி : "என் ப்ரெண்ட் திடீர்னு மேரேஜ்னு போன் பண்ற அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே என்கேஜ்மென்ட் முடிஞ்சிருக்கு எனக்கு இப்பதான் இன்ஃபார்ம் பண்றா அதான் திட்டினேன் "
அபி அப்பா : "சரிம்மா நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க, வரச்சொல்லட்டுமா"?
அபி : "என்னப்பா என்ன கேக்குறீங்க"
அபி அப்பா: "இந்த வரனையும் நீ வேணான்னு நினைச்சா இப்பவே சொல்லிடு நாளைக்கு அவங்கள வரவேண்டாம்னு சொல்லியர்றேன் "
அபி : "இல்லப்பா இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன் உங்களுக்கு புடிச்சிருந்தா சரி "
ஆச்சரியத்தோடு மகளை பார்த்தவர், அதற்கு மேலும் கேட்க விரும்பாமல்
'வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் '
அபி அப்பா: "சரிமா, என்று மகளிடம் கூறிவிட்டு வெளியே வந்து மனைவியிடம் இப்பதான் உன் பொண்ணுக்கு புத்தி வந்துருக்கு நாளைக்கு வர்ற வரன எப்படியும் பேசி முடிச்சிடனும் ,,,"
மறுநாள்
அபி அப்பா : " இவர்தான் மாப்பிளை"
என்று அவள் தந்தை காட்டிய இடத்தில்
கதிரை பார்த்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு நின்று விட்டாள்
அபி அப்பா: " நீ படிச்ச காலேஜ்ல தான் மா மாப்பிள்ளையும் படிச்சிருக்காரு "
கதிரோ அபியின் தந்தை காதில்
ஏதோ கூறினான்
"அதுக்கு என்ன மாப்ள பேசிட்டு வாங்க "
அபி மாப்ள உங்க கிட்ட தனியா பேசணும் பேசிட்டு வாங்க
கதிர் : "கோபமாய் இருக்கியா அபி"
அபி : "இப்ப எதுக்கு இந்த பொண்ணு பாக்குற நாடகம் ,உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை நீ போ"
கதிர் : "நான் உன்கிட்ட ஏன் காதலை சொன்னப்ப பேசாத
போன்னு சொன்ன"
அபி : "நான் சொன்னா நீ பேசாம
இருப்பியா, நானே திரும்ப போன் பண்ணேன் ,மெசேஜ் பண்ணேன் எதுக்குமே நீ ரெஸ்பான்ஸ் பண்ணல ஏன்"
கதிர் : "என் மேல நீ வச்சிருக்க காதலை நீ உணரணும்ங்குறதுக்காகதான் "
அபி : " புரியாமல் அவனை பார்த்தாள் "
கதிர் : "நீ என்ன விரும்புறேன்னு எனக்குத் தெரியும் மை டியர் "
அபி : "தெரிஞ்சவன் ஏன் ஒரு வருஷமா தவிக்க விடனும் "
கதிர் : "ஏன் லட்டு பாப்பா, என்ன நம்பிவர்றவள என் சொந்த உழைப்பில்
நான்காப்பாற்ற வேண்டாமா அதுக்குத்தான்
இப்ப சொல்லு நான் உன்னை விரும்புகிறேன்
என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா "
அபி : அவள் கோபமாக முகத்தை
திருப்பிக்கொள்ளவும் அவளுக்காக அவன் வாங்கிட்டு வந்த கிப்டை
அவள் முன் மண்டியிட்டு ,
"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா
அபி குட்டி "
அவனது proposal அவள் மனம் முழுவதும் இன்பத்தை வாரி இறைத்திருந்தது பனிமலையின் நனைந்ததைப்போல் உணர்ந்தவள், அதை மறைத்துக் கொண்டு
அபி: "உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா லவ் பண்ண மாட்டேன் "
கதிர்: அதிர்ச்சியோடு அவளை புரியாத பார்வை பார்த்தான்
அபி: "ஆமா நான் உன்ன லவ்
பண்ணமுடியாது,
என்கூட காலேஜ்ல படிச்ச கதிர்த்தான் விரும்புறேன் "
கதிர்: "அப்ப நான் யாரு டி"
அபி: "நீ என்ன பொண்ணு
பாக்கவந்துருக்க மாப்பிள "
கதிர்: "சரி அப்ப இந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டு நான் கிளம்பறேன் "
அபி : "உன்னை என்ன பண்றேன் பாரு அவள் கை வலிக்கும் வரை அவனை அடித்து ஓய்ந்தவள் உன்னால எங்க அப்பாட்ட எவ்வலோ திட்டு வாங்கி இருக்கேன் தெரியுமாடா"
கதிர்: "தெரியும் டியர் ,பட் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ , உனக்கு வந்த வரன்
எல்லாம் தட்டி போனது -நீ சொன்னால மட்டும் இல்ல
மறைமுகமாக இருந்து நான்தான்
உனக்கு வந்தவரன்
எல்லாத்தையும் தட்டிவிட்டேன் "
அபி : " அட பிராடு பயலே...."
கதிர்: " அப்புறம் நீ வேணான்னு சொன்னா உடனே உங்க அப்பா பேசாம இருந்துருவாரூன்னு நெனச்சியா"
தன் தந்தையைப் பற்றி அறிந்தவள் அவன் கூறியதற்க்கு இல்லை என்பது போல் தலை அசைத்தாள்
கதிர்: "என் காதலை உனக்கு உணர்த்திட்டு எப்படி டி உன்ன வேறு ஒருத்தனுக்கு தூக்கி கொடுப்பேன் , என்னைக்கு இருந்தாலும் என்னுடையவள் நீ "
அவனது காதலின் ஆழத்தை உணர்ந்தவள் அவன் நெஞ்சில் முகம்
புதைத்துக்கொண்டாள்
அங்கிருக்கும் சூழ்நிலையை அவன் உணர்ந்திருந்தாலும்
அந்த நிமிடம் தன் நெஞ்சில் புதைந்திருந்தவளை விடுவிக்க அவனுக்கு மனம் வரவில்லை
வெளியே பேச்சு குரலும் , சிரிப்பொலியும் தான் அவனை சுய உணர்வுக்கு
கொண்டுவந்தது
கதிர்: "நம்ம சேரனுமா , வேணாமாடி "
அவன் இப்படிக் கேட்டதும் சட்டென்று அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு கோபத்தோடு அவன் முகத்தை பார்த்தாள்
கதிர்: "நம்மளைப் உன் அப்பா இப்படி பார்த்தாரு அவ்வளவுதான் , நம்மளை நாமே
காட்டிகொடுத்தமாதிரி ஆயிடும்
என்னோட சின்ன கிப்ட் "
என்றபடி அபியின் கரங்களைப் பற்றி
அவள் பிஞ்சு விரல்களில் முத்தமிட்டான்
தன்னவனின் முதல் இதழொற்றளிள் மயங்கி நின்று விட்டாள் அபி ,
தை மாசம் கல்யாணம் என்று தந்தையின் குரல் செவியில் ஒலித்தது, ,,,,,,