Showing posts with label நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம்.. Show all posts
Showing posts with label நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம்.. Show all posts

மனைவி அமையும் திசை

மனைவி அமையும் திசை ஒரு ஜாதகத்தின் ஏழாம் இடம் மற்றும் அதன் அதிபதியை பொறுத்தே 
அமையும்..

ஏழாம் அதிபதி சூரியன் எனில் மனைவி  கிழக்குதிசை

சந்திரன் எனில் மனைவி தென் கிழக்கு திசை நோக்கி

செவ்வாய் எனில் மனைவி தெற்கு திசை நோக்கி அமைவாள்

புதன் எனில்-வட கிழக்கு திசை நோக்கியும்

குரு எனில்  வடக்கு நோக்கியும்

சுக்கிரன் எனில்  கிழக்கு நோக்கி அமைவது மட்டுமில்லாது உள்ளூரில் அமையவும் வாய்ப்புகள் அதிகம்

சனி எனில் மேற்கு திசை நோக்கியும்.

ராகு எனில் தென் மேற்கு திசை நோக்கியும்

கேது எனில் வட மேற்கு திசையில் இருந்து வருவாள் ஆனால் கேதுவிற்கு 7ம் இடத்தில் நிற்கும் கிரகத்தின் திசையும் ஒத்து வரும்.

குறிப்பு : திசை என்று இங்கு சொல்வது மணமகனின் பிறப்பிடத்தில் இருந்து பெண்ணின் பிறப்பிடமாக 
கொள்ளவேண்டும் 

மனைவி உறவிலா?, அன்னியத்திலா?


7ம் அதிபதியோடு லக்னாதிபதியோ 10 ஆம் அதிபதியோ இணைந்திருந்தால்  உறவில்.
லக்னாதிபதி யோடு சுக்கிரன் இணைய உறவில் கெட்டி மேளத்தோடு திருமணம் நடக்கும்

4க்குடையவர் 2,7ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு பார்த்தாலும் சேர்ந்தாலும் தாய்வழி உறவில்.
4,11 க்குடையவர் சேர்ந்தாலும் பார்த்தாலும் தாய்வழி உறவில் திருமணம் நடப்பதற்க்கான சாத்தியக்கூறுகள்
அதிகம்

9 குடையவர் 2,7, ல் நின்றாலும்,அதன் அதிபதிகளோடு சேர்ந்தாலும் பார்த்தாலும்  உறவில் கெட்டிமேளம் முழங்க அத்தைவழி உறவில் மணம் முடிப்பார் ஜாதகர்

3,7க்குடையவர்கள் இணைவு,பார்வை சகோதரவழி பந்தத்தில் திருமணம் இனிதே அரங்கேறும்

7,5இணைவு,பார்வை,பரிவர்த்தனை,புதன் 7ம் அதிபதியோடு தொடர்பு மாமன் வழியில் அமையும்.

7 ல், சனி, ராகு,கேது அன்னியத்தில் திருமணம் நடைபெறும். 
ஏழில் சனி ,சுக்கிரன் ,குரு இணைவு
ஊரைவிட்டு ஓடி சென்று திருமணம் செய்வார்கள் 

திருமண நட்சத்திரப் பொருத்தம்.

திருமண நட்சத்திரப் பொருத்தம்.

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தைதான் அத்தகை முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரப் பொருத்தத்தை நீங்களும் அறிந்து கொள்ள இதோ. . .

ஆண் நட்சத்திரம் - பெண் நட்சத்திரம்

1.
அஸ்வனிபரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம்சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.
உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம் பாதம்சதயம்
23.
அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டைதிருவோணம், அனுஷம்
25.
மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.
உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.
ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி



பத்து பொருத்தங்கள் - நட்சத்திர பொருத்தம்

பத்து பொருத்தங்கள் - நட்சத்திர பொருத்தம் - திருமண_பொருத்தம்: 

1) தினம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு.  பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:
பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்ச த்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:
நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங் குகளின் விளக்கம் கீழே உள்ளது.குதிரை – எருமை, யானை – சிங்கம், ஆடு – குரங்கு, பாம்பு – எலி, பசு – புலி, எலி – பூனை, கீரி – பாம்பு, மான் – நாய், ஆண் – பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:
பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண் ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:
பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதி க்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு. வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காண லாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):
நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ் ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக் கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல் லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்த முண் டு.

10) நாடி:

27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட் டுள்ளன

.1) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை,  மூலம்,       சதயம், பூரட்டாதி.

2) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

3 கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திரு வோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரி வில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திரு மணப்பொரு த்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிக ளையும் கவனிக்க வேண்டும்.

1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு – இந்த ஐந்தும் முக்கிய மானப் பொருத்தங்கள்.

3) பெண், ஆண் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

4) பெண், ஆண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந் தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்

ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம்பார்க்கலாம்

ஒரே ஒரு நிமிடத்தில்
நீங்களே திருமணப் பொருத்தம்
பார்க்கலாம்..

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்

சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. 

நாம் பிறக்கும் போதே இன்னாருக்கு இவள் துணைவி இன்னாருக்கு இவன் துணவன் என்பதை அந்த
பிரம்மன் எழுதி விடுகிறான். 

பொதுவாக கணவனை விட மனைவி வயதில் சில ஆண்டுகளாவது இளையவளாகத்தான் இருக்கிறாள்...

ஒரு கணவன் இந்த பூமியில் பிறக்கும் போது மனைவியும் பிறப்ப
தில்லை. என்றாலும், அந்த பிரம்மன், இந்தக் கணவன் பிறக்கும் போதே இவனுக்கு இந்த ஊரில் பிறக்கப்
போகும் என்பதை எழுதி விடுகிறான்.

 மலையில் விளையும்
நாரத்தங் காய்க்கும் கடலில் விளையும் உப்புக்கும்
முடிச்சுப் போடுபவன் ஆண்டவன். 

அடுத்த வீட்டில் பெண்ணை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாகத்
தன் மகனுக்கு ஊரெல்லாம் பெண் தேடிச் சுற்றி அலையும் பெற்றோர், தன் மகனுக்கு திருமண வேளை
வரும்போது அடுத்த வீட்டு பகையையும் மறந்து அந்தப்
பெண்ணையே மருமகளாக ஏற்றுக் கொள்வர். 

அழகில்லாத அந்த மருமகள்கூட திருமண வேளை வரும்
போது ரதியாகக் கண்ணுக்குத் தெரிவாள். 

வரதட்சணையோ, கௌரவமோ அல்லது அழகோ அங்கே
ஒரு தடையாக இருப்பதில்லை.

தன்னுடைய மகனுக்கு பெரிய இடத்தில் திரும்
ணம் முடிக்க வேண்டுமென்று சிறுவயது முதலே கற்பனைக் கோட்டையைக் கட்டி வந்திருப்பர் பெற்றோர். ஆனால், அந்த மகனோ திருமணப் பருவம் வந்தவுடன்
ஒரு ஏழைப் பெண் மீது காதல் கொண்டு அவளையே திருமணமும் செய்து கொண்டு வாசலில் வந்து நிற்பான். 

திருமண விஷயத்தில் நாம் நினைத்தது
எதுவும் நடப்பதில்லை . இதற்குக் காரணம் ஆண்டவன் போட்ட முடிச்சு. அந்த முடிச்சை மனிதரால் அவிழ்க்கவோ மாற்றிப் போடவோ முடியாது.

அவரவர் செய்த ஊழ்வினையின் பயனுக்கு
ஏற்பவே திருமண வாழ்க்கை அமைகிறது. 

நல்ல குணமுள்ள மனைவிக்கு 
கெட்ட குணமுள்ள கணவனோ அல்லது 

நல்ல குணமுள்ள கணவனுக்கு 
கெட்ட குணமுள்ள மனைவியோ, 

ஏழைக் கணவனுக்கு பணக்கார
மனைவியோ 
அல்லது பணக்காரக் கணவனுக்கு
ஏழை மனைவியோ, 

அழகுள்ள கணவனுக்கு அழகில்லாத மனைவியோ அல்லது 
அழகுள்ள மனைவிக்கு
அழகில்லாத கணவனோ, 

படித்த கணவனுக்கு படிக்காத மனைவியோ அல்லது படிக்காத கணவனுக்கு
படித்த மனைவியோ - இப்படி அமைவதெல்லாம்
ஆண்டவன் செயல்.

இப்படி அமையும் திருமணம் என்பது கண நேரத்தில் நடந்தேறிவிடும். 

ஆனால் திருமணம் நடந்து
முடிந்த பின்னர் இல்லறமெனும் நல்லறத்தில் புகும்.

அந்தத் தம்பதிகள் சண்டை சச்சரவுகள் இன்றி,
சந்தான பாக்கியத்தோடு, சகல ஐஸ்வர்யங்களோடு,
தீர்க்காயுளோடு வாழ வேண்டாமா?

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது' - வள்ளுவர் வாக்கு..

அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை ஒருவ
அமைய வேண்டுமானால், 
கணவன் மனைவி
இருவருடைய ஜெனன ஜாதகத்திற்கிடையே 

தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீதீர்க்கம், யோனி, ராசி, 
ராசிதிபதி, வசியம், ரஜ்ஜு,வேதை என்ற 10 வித பொருத்தங்கள் வேண்டுமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

இந்த பத்து பொருத்தங்களில் 
கணம், யோனி,ரஜ்ஜீ என்ற 3 பொருத்தங்கள் மிக முக்கியமானவையாகும். 

கணப் பொருத்தம் இல்லாவிட்டால் குணம் வக்கப் போவதில்லை. 

யோனிப் பொருத்தம் இல்லா
விட்டால் தாம்பத்திய உறவில் இன்பம் கிடைப்பதில்லை. 

ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாவிட்டால் மாங்கல்யம் நிலைப்பதில்லை. 

ரஜ்ஜுப் பொருத்தம் இல்லா
விட்டால் திருமணமே செய்யக் கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

 எனவே மணமக்கள், திருமணத்
திற்குப் பின்னர் நிலைத்த சந்தோஷத்தோடு வாழ
வேண்டுமானால், திருமணம் செய்யும் முன்னர்
ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...