Showing posts with label ஆலயதரிசனம். Show all posts
Showing posts with label ஆலயதரிசனம். Show all posts

நாகதோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்


நாகதோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்கள்: 


ராகு, கேது தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 50 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.

1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.

2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.

3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.

5. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதில் உண்மை இல்லை.

6. ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதி மூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.

7. நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

8. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.

9. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

10. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.

11. கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும்.

12. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.

13. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

14. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

15. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.

16. ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.

17. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

18. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

19. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.

20. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும். 

21. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

22. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும். 

23. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

24. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

25. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

26. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.

27. ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந் தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

28. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வரஞ வேண்டும்.

29. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

30. ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.

31. துர்க்கா சூக்த மந்திரங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் ஆஹ¨தி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது.

32. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.

33. ராகு ஜாதகத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனி பரிகாரங்கள் இருந்தாலும் ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு வருமாறு:-

34. தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

35. தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

36. துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

37. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

38. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

39. கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.
40. வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.

41. கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

42. குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

43. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

44. கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.

45. கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

46. கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

47. மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

48. கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம்.

49. கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. 

50. சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில்

திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில்:




அன்னை பார்வதி, இமயமலையிலிருந்து மரகதவல்லியாக வந்து சென்னை திருமுல்லைவாயலில் குடிகொண்டதால் இங்கு அவளை பச்சைமலை அம்மன் என அழைத்து வழிபடுகிறார்கள்.

இந்தக் கோயிலில் மன்மதன் ரதி, பெருமாள், முடியால் அழகி பூங்குறத்தி, விநாயகர், பைரவர் ஆகியோருடன் திருமால் பெரிய மீசையுடன் வாழ்முனியாக அமர்ந்திருக்கிறார். எதிரில் சுகரிஷியும் கருடாழ்வாரும் துணை நிற்கின்றனர். செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகிய ஆறு முனிகளும் அமர்ந்து காவல் காக்கின்றனர். எதிரே அவர்களது குதிரை முதலிய வாகனங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நிற்கின்றன. எதிரில் கௌதம முனிவர் சிவலிங்க உருவோடு நின்ற கோலத்தில் அருள, அவருக்கு வலப்புறம் பச்சையம்மன் தவக்காலத்தில் வழிபட்ட மன்னாதீஸ்வரர், அகோர வீரபத்திரர் சன்னிதிகள் உள்ளன.

கலாச்சாரச் சிறப்பு நிறைந்த இந்தப் பச்சைமலை அம்மன் கோயில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புடன் திகழ்ந்திருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள சுமார் 15 பச்சையம்மன் தலங்களுக்குள் பழமையும் தொன்மையும் வாய்ந்தது இது.

இடப்பாகம் வேண்டித்தவம்

கயிலாயத்தில் இருந்து பார்வதி இங்கு வந்து குடிகொண்டது வரலாறு.

சிவனும் பார்வதியும் வீற்றிருக்க அங்கே வந்த பிருங்கி மாமுனிவர் சிவனை மட்டும் வலம்வந்து வழிபட்டுச் சென்றார். சிவசக்தியான பார்வதி தேவி, இருவரையும் வணங்காமல் சிவனை மட்டும் பிரித்து வணங்கிச் செல்வது நியாயமில்லை என வாதிட்டதோடு, இது போன்ற தவறு இனி ஏற்படாமல் இருக்கச் சிவனின் உடலில் சரிபாதி வேண்டும் என வேண்டினார். சிவன் மறுக்க, வைராக்கியத்தோடு சிவனைப் பிரிந்து தவம் செய்ய உரிய அனுமதியைப் பெற்றார்.

காவி உடை, ருத்திராட்சம், சடை தரித்துப் பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தைத் தேடினார். இமயம் தொடங்கி ராமேஸ்வரம், கன்னியாகுமரிவரை அனைத்துத் தலங்களிலும் நீராடி, சிவபிரான் குடிகொண்டுள்ள தலங்களில் சிவபூஜை செய்யக் கிளம்பினார். பார்வதியுடன் அவருடைய தோழிகளான 64 யோகினியர் துணையாக வந்தார்கள்.


ஏழு முனிவர்கள்

காசி முடித்து உஜ்ஜயினி வரும்போது அக்னி வீரன், ஆகாச வீரன் உட்பட மொத்தம் ஏழு சகோதரர்கள் பெண் பித்தர்களாகவும் அநீதர்களாகவும் கொடுமையானவர்களாகவும் ஆண்டுவந்தனர். அக்னி வீரன், அழகு மிகுந்த பெண்ணான உமாதேவியிடம் சென்று தான் அவரைக் கண்டு மோகிப்பதாகக் கூறினான். பார்வதி உடனே சிவனைத் துதிக்க, திருமால் பிரம்மா மற்றும் அஸ்வினி தேவர்கள் அவருக்குப் பக்கத் துணையாக வந்தனர்.

தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னி வீரனைக் கண்டு பெரிய அரக்க வடிவம் கொண்ட திருமால், வானளவு உயர்ந்து அவனைத் தன் காலடியில் அழுத்திச் செயலற்றவனாக்கினார். வானளவு உயர்ந்து நின்றதால் வான் முனி எனப்பட்டு வாழ்முனியாக மருவி அழைக்கப்பட்டார். உடன் வந்த ரிஷிகளும் திருமாலைப் போல் பேருரு கொண்டனர்.

சாகாவரம் பெற்றிருந்த சகோதரர்கள் ஆகாய வீரன், ஜல வீரன் சண்ட வீரன், ரண வீரன், கோட்டை வீரன், அந்தர வீரன் ஆகியோரைச் செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகியோர் அவர்களைச் செயல்படாதவாறு செய்தனர். அவர்களின் தலை மட்டும் தெரிய, முனிவர்கள் எழுவரும் பூமிக்குள் அழுத்திக்கொண்டு அமர்ந்தனர். அக்னி வீரனின் மகனான வீரமுத்து இதைக் கண்டு வெகுண்டெழுந்து போருக்கு வர, வாழ்முனியான திருமால் அவனது படைகளை அழித்தார். அவனை வதம் செய்யப் போகும்போது அவனுடைய மனைவி வீராட்சி விஷ்ணுவின் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்க, வாழ்முனி அவனை விடுவித்தார்.

அரக்கனை அழித்த உமையம்மை:

தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்ப, பார்வதிக்குத் துணையாக மகாலட்சுமி (வேங்கடமலை நாச்சியார்), சரஸ்வதி (பூங்குறத்தி நாச்சியார்), இந்திராணி (ஆனைக் குறத்தி ரதி) ஆகியோர் இருப்பார்கள் எனக் கூறிச் சென்றார் திருமால்.

சிவன் கட்டளைப்படி அவர்களோடு உமையாள் காசிமா நகர் சென்று அன்னபூரணியாகி அறம் செய்து யோக பூமியான காசியை விட்டு ஒவ்வொரு சிவத்தலமாக பூஜை செய்து மோக பூமியான காஞ்சி செல்லத் தொடங்கினார். வழியில் தவம் செய்யத் தேர்ந்தெடுத்த திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் உமையம்மை சிவ கங்கை சூரிய புஷ்கரணி என்னும் சக்தி தீர்த்தத்தை உருவாக்கினார்.

அந்தத் திருக்குளத்தின் கரையில் மக்களுக்கும் தேவர்களுக்கும் அல்லல் கொடுத்துவந்த ஹதாசுரனையும் அவனது படைத்துணை மகாபூதத்தையும் அழித்தார். அங்குக் கோயிலை அமைத்து சிவபூஜை செய்தார்.

சென்னை அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வலது புறத்தில் திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 அடி தொலைவில் உள்ளது அருள்மிகு பச்சைமலையம்மன் என்ற பச்சையம்மன் திருக்கோயில். இங்கே தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையும் சாதாரன நாட்களில் மக்கள் தரிசனம் செய்யலாம்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பெளர்ணமி ஆகியவை சிறப்பு தரிசனம் செய்ய சிறந்த நாட்களாகக் கொள்ளப்படுகின்றன. அம்மன் திருத்தலங்களில் நடைபெறும் ஆடி முதல் நவராத்திரி போன்ற அனைத்துத் திருநாட்களிலும் இங்கே சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.

வைகல் நாதர் கோவில், திருவைகல் மாடக்கோவில்

வைகல் நாதர் கோவில், 
திருவைகல் மாடக்கோவில்


இறைவன் பெயர்..
வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்

இறைவி பெயர்..
கொம்பியல்கோதை, வைகல் நாயகி

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும்.

வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 


1) ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 

2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 

3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில். சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் 

இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸவரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும். கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.

#தல வரலாறு..
முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவிலகளையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

1. துளமதி யுடைமறி தோன்று கையினர் இளமதி யணிசடை எந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய வளமதி தடவிய மாடக் கோயிலே. 

2. மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர் மையகண் மலைமக ளோடும் வைகிடம் வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே. 

3. கணியணி மலர்கொடு காலை மாலையும் பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் தணியணி உமையொடு தாமுந் தங்கிடம் மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே. 

4. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. 

5. விடம்அடை மிடற்றினர் வேத நாவினர் மடமொழி மலைமக ளோடும் வைகிடம் மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் குடதிசை நிலவிய மாடக் கோயிலே. 

6. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே. 

7. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை வருமுகி லணவிய மாடக் கோயிலே. 

8. மலையன இருபது தோளி னான்வலி தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக் கோயிலே. 

9. மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகுஇடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே. 

10. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர் பிடகுஉரை பேணிலார் பேணு கோயிலாம் மடம் உடையவர் பயில் வைகல் மாநகர் வடமலை அனைய நல் மாடக் கோயிலே. 

11. மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை சிந்தை செய்பவர் சிவலோகஞ் சேர்வரே. 

அமைவிடம்..

கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும் உள்ளது..

பருவதமலைஅன்னதான மடம்..

பருவதமலை
அன்னதான மடம்..


முருகனின் திருவடி பதிந்த இடம்!  ஞானமலை...
முருகனுடைய இளம் திருவடிகளே மயில் மீதும், தேவர்கள் தலைமீதும், திருப்புகழ் ஏட்டின் மீதும் பட்டன என்று அருமையாகச் சொல்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
தேவர், முனிவர் போற்றும் திருமுருகனின் திருப்பாதங்கள், வள்ளியின் அன்புக்காக காடும் மலையும் நடந்தன. அவளது அன்பை ஏற்று அவளை மணந்தான் ஆறுமுகன். அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்களுக்கு மனமுவந்து இரங்கி, அவரது பக்தியை மெச்சி, அவருக்குத் திருவடி காட்டி தீட்சை அளித்தான், முருகன். அத்தகைய அரிய பேறு நமக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா? அதற்கு என்ன வழி? அருணகிரிநாதர் சென்று தரிசித்து திருவடி தரிசனமும் யோகாநுபூதியும் பெற்ற ஞானமலை என்னும் தலத்திற்கு நாமும் சென்று, திருப்புகழ் பாடி அவன் திருவருளைப் பெறலாம் வாருங்கள்!

திருவண்ணாமலையிலிருந்து அருணகிரிநாதர், "வயலூருக்கு வா!' என்றழைக்கப்பட்டு அங்கே பொய்யாக் கணபதியின் அருளால் திருப்புகழ் பாடும் முறை உபதேசிக்கப் பெற்றார். அங்கிருந்து பல மலைகளையும், பல தலங்களையும் தரிசித்துச் செல்லும் வழியில், பலப்பல இடங்களில் அருட்செயல் புரிந்து அவரை ஞான மலைக்கு அழைத்தார் ஞான பண்டித சுவாமியான முருகன்.
ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலைக் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. "மலைவி பரிகாசம் செய்ய சுற்றத்தார் மனம் வெறுப்படைய ஊரில் உள்ள பலரும் நகைக்க, அனைவரும் பழிச்சொற்களை ஆராயாது பேசிட, அதனால் அருணகிரியார் மனத்தில் துன்பம் மிகுந்து, "நான் எடுத்த பிறப்பு இதற்குத்தானோ' என்று நாள்தோறும் நினைத்து, முடிவில் அருணை கோபுரத்தின் மீதிருந்து குதித்து அவர் உயிரைவிடத் துணிந்த சமயத்தில், அவர் முன் தோன்றி தீட்சை செய்த' முருகனின் திருப்பாதத்தை மீண்டும் தரிசித்திட விரும்பினார்.

திருவண்ணாமலையில் அருளியதை இங்கு நினைவுகூர்ந்து அந்த அனுக்ரஹத்தை மீண்டும் ஞானமலையில் வேண்டினார். ஒரு பாடலையும் பாடினார். அவரது பிரார்த்தனைப்படி ஞானமலையில் மீண்டும் திருவடிக்காட்சி நல்கி அவருக்கு யோகாநுபூதியை அருள்பாலித்தார் ஞானவடிவேலன்.

ஞானமலை எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடை 1997-ம் ஆண்டு வரை யாருக்குமே தெரியாதிருந்தது. 1998-ம் ஆண்டு செய்தித்தாளில் வெளிவந்த செய்தி ஒன்றில், "காளிங்கராயன் என்பவன் ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்' என்று, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றைப் பற்றிய தகவலே முருகனருள் கொண்டு, ஞானமலையின் இருப்பிடத்தைக் அறிய உதவியது.
காளிங்கராயன் (1322-1340) சம்புராயர் காலத்தில், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தவன். இக்கல்வெட்டு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள மலைமேல் இருக்கும் சுனை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆதாரமாகக் கொண்டே அருணகிரிநாதர், தெய்வானை காவலனின் திருவடி தரிசனம் பெற்ற ஞானமலை தலத்தை உறுதி செய்ய முடிந்தது.

ஞானமலை அடிவாரத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியை தரிசனம் செய்துவிட்டு 150 படிகள் ஏறி ஞானபண்டித சுவாமி திருக்கோயிலை அடைகிறோம். கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்கி, பலிபீடம், மயில்வாகனம் ஆகியவற்றை தரிசித்து மகாமண்டபத்திற்குள் நுழைகிறோம்.

கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி அருட்காட்சி அளிக்கிறார். ஒருமுகம் நான்கு கரங்களுடன் பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை ஏந்தி முன்வலக்கரத்தில் அபயமுத்திரை காட்டி முன் இடக்கரத்தை இடுப்பில் வைத்தபடி நின்ற கோலத்தில் கந்தப்பெருமான் காட்சியளிக்கிறார்.

இவ்வடிவை "பிரும்மசாஸ்தா வடிவம்' என்று ஆகமங்களும் சிற்ப நூல்களும் குறிப்பிடுகின்றன. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்ம தேவனை சிறையிலிட்டு சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட அருட்கோலமே பிரம்ம சாஸ்தா வடிவமாகும்.

ஞானமலையில் அமைந்துள்ள இவ்வடிவம், பல்லவர் காலத்தது. இது 1300 ஆண்டுகள் முற்பட்டது என்பதை இவ்வடிவ சிற்ப அமைதியைக் கொண்டு தீர்மானிக்க முடிகிறது.

தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த "குறமகள் தழுவிய குமரன்' வடிவம் அற்புதமாக உள்ளது. நீல மயிலில் அமர்ந்த கோலக் குமரன் இடது மடிமீது வள்ளியை அணைத்தவாறு காட்சியளிக்க, அருகில் அருணகிரிநாதர் கூப்பிய கரங்களுடன் நின்று அழகு முருகனை கண்டுகளிக்கும் எழிற்காட்சி. தெற்குச் சுவரில் ஞானமலைக்குரிய இரண்டு திருப்புகழ், பதிகம், வரலாறு முதலானவை கல்வெட்டுகளாகப் பதிக்கப்பெற்றுள்ளன.

மலையின் மேற்புறம் ஏறிச்செல்லும் வழியில், வேல்முருகன் உண்டாக்கிய "வேற்சுனை' இடதுபுறம் உள்ளது.
மலைமீது ஏறிச் சென்றால் அங்கே ஞானப்பூங்கோதையுடன் ஞானகிரீச்வரர் காட்சியளிக்கிறார். அருணகிரிநாதரைப் பரமகுருவாகக் கொண்டு திருவண்ணாமலையில் வாழ்ந்தவர், ஞானவெளிச்சித்தர். இவரை பாலைச் சித்தர் என்றும் மக்கள் அழைத்தனர். ஞானமலையில் பல்லாண்டுகள் அவர் தவமியற்றினார். 

மக்களின் உடற்குறைகளை நீக்கி நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தைப் போதித்து வாழ்ந்தவர். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளில் இவர் ஞானமலை முருகன் திருவடியில் கலந்தார். இவரது திருவுருவை, ஞான பண்டிதசுவாமி கோயில் உள் மண்டபத்தூணில் தரிசிக்கலாம். அவர் ஞானசமாதி கொண்டுள்ள இடத்தில்தான் ஞானகிரீச்வரப் பெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். 

இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலைச் சித்தருக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் முன்பு மற்றொரு சித்தர் இங்கு தவமியற்றியுள்ளார். இவரும் அடியார்களுக்கு மூலிகைகளும் திருநீறும் அளித்து நோய்களை குணப்படுத்தியுள்ளார் என்ற அறிய முடிகிறது. அவரது சமாதி, மலை அடிவாரத்தில் உள்ளது.
ஞானகிரீச்வரர் திருக்கோயிலின் பின்புறம் ஞான பண்டித சுவாமியின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடத்தை தரிசிக்கும்போது நமக்கு பக்திப் பரவசம் மேலிடுகிறது. அருணகிரியாருக்கு முருகன் திருவடிக்காட்சி தந்து யோகாநுபூதி அளித்ததற்கான சான்று இங்கே பதிந்துள்ள முருகனது பாதச்சுவடுகளே! "ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் பொருள் உண்டு.

ஞானமலை என்பதைத் திருவடி பதிந்துள்ள மலை என்றும் கூறலாம். வேதங்களும் காணாத வேலனின் திருப்பாதங்கள் பதிந்த மிகப் புனிதமான இந்தத் தலத்தில் நாம் உடலால் வலம்வர (அங்கப்பிரதட்சணம் செய்ய) முருகன் திருவடிப்பூங்கோயில் மண்டபம் உருவாகியுள்ளது. ஏறக்குறைய 1500 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இம்மண்டபத்தில் அடியவர்கள் அமைதியாக தியானம் செய்யும்போது அற்புதமான பக்தி அதிர்வுகளை உணர முடிகிறது. இந்த தியான மண்டபம் அமைந்துள்ள இடமே ஞானவெளிச் சித்தர் தவம் செய்த இடமாகும். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்வதால் நோய்கள் நீங்கும்; எண்ணியவை கைகூடும்; மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

இம்மலையில் மிகுதியாகக் காணப்படும் வெப்பாலை என்னும் குடசப்பாலை மரம், அரிய மூலிகை மரமாகும்.
ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும், வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கர் மலையும், வடகிழக்கில் தணிகை மலையும் அமைந்துள்ளன. வள்ளமலை, ஞானமலை, திருத்தணிகை மலை மூன்றும் முக்கோணவடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று மலைகளையும் முறையே காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளில் தரிசிப்பது மிகவும் விசேஷமானது என்பது முருகனடியார்களது நம்பிக்கை.
ஆண்டு தோறும் ஆடிக் கிருத்திகையன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காவடிகளுடன் ஞானமலை முருகனை தரிசனம் செய்ய வருகிறார்கள். 

ஆண்டு தோறும் குமாரசஷ்டி, ஆனிமாதம், சுப்ரமண்ய சஷ்டி கார்த்திகை மாதம் ஆகிய நாட்களில் இங்குள்ள ஆறு அடி உயரமுள்ள ஞானவேலுக்கு விசேஷ அபிஷேகம், சத்ருசம்ஹார திரிசக்தி அர்ச்சனை முதலியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. "குறமகள் தழுவிய குமரனின்' பஞ்சலோக விக்ரகத்திற்கு விசேஷ அலங்காரம் முதலியன செய்து கிரிவலம் வரும் விழா கார்த்திகையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்புகழ்த் திருப்படி திருவிழாவும் ஏகதின லட்சார்த்தனை வைபவமும் மாதம் தோறும் பிரதோஷ வழிபாடும் நடைபெறுகின்றன.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஞானாச்ரமம் திருமாளிகையில் குமரனின் பஞ்சலோக விக்ரகம் வழிபாட்டில் உள்ளது. அடியார்கள் திருப்புகழ் பாடி வழிபாடு செய்யவும், அன்னதானத்திற்கும் இத்திருமாளிகை பயன்படுகிறது. அருணகிரிநாத சுவாமிகளுக்குத் திருவடிக் காட்சியளித்த ஆட்கொண்டதும் முருகனது திருப்பாதங்கள் பதிந்ததும் பாலைச் சித்தர் தவமியற்றி ஞானசமாதி கொண்டதுமான ஞானமலைக்கு அன்பர்கள் பெருமளவில் சென்று வழிபட்டு உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ ஞானபண்டித சுவாமி திருவருளை வேண்டிப் பணிகின்றோம்.

எங்கே இருக்கிறது?

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப் பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் மங்கலம் என்ற ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவிந்தச்சேரி கிராமம். சென்னையிலிருந்து 110 கிலோ மீட்டர். 

அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் உள்ள சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு. மங்கலம் கிராமத்தில் ஞானமலை அலங்காரவளைவு நமக்கு வழிகாட்டியாக உதவும்....

உலகநாயகி ஸ்ரீஉலகாண்டஈஸ்வரி அம்மன்..

உயர்வான வாழ்வருளும் உலகநாயகி 
ஸ்ரீஉலகாண்டஈஸ்வரி அம்மன்..



பக்தர்களைப் பிடித்த நோய்களையெல்லாம் ஓட ஓட விரட்டி ஓட்டும் பிடாரி அவள். அதனால்தான் அந்த ஊருக்கே `ஓட்டப்பிடாரம்' என்ற பெயர் வந்தது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. பிறந்த ஓட்டப்பிடாரம் ஊரிலே அருள்பாலிக்கும் உலகாண்ட ஈஸ்வரி அம்மன்தான் நாம் இப்போது தரிசிக்கப்போகும் தெய்வம்.

இந்த ஊரில் காலரா, அம்மை போன்ற நோய்களெல்லாம் வராமல் உலகாண்ட ஈஸ்வரிதான் காப்பாற்றுகிறாள். குழந்தைவரம் கேட்டுப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் இவள்தான் கண்கண்ட தெய்வம். அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளுக்கு உலகம்மாள், உலகநாதன் என்று பெயர் வைப்பது இங்கே சர்வ சாதாரணம்...'' அம்பாளின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகிறார்கள் பக்தர்கள்.

சிறிய கோயில் என்றாலும் அற்புதமாக இருக்கிறது ஆலயம். வாசலில் ஈச்சமர உயரத்திற்கு கோட்டைக் கருப்பசாமி காவலுக்கு நிற்கிறார். அவருக்கு அருகே சங்கு ஊதியபடி ஸ்ரீஆழி சங்கிலி பூதத்தார் நிற்கிறார் .

வாயில் மண்டபத்தைத் தாண்டினால் நெடிதுயர்ந்த கதவுகளுடன் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் வேதாளத்தையும், வைரவரையும் தரிசனம் செய்யலாம். எதிரே ஆஸ்கார பலிபீடம்  காட்சியளிக்கிறது.

கீழ்ப்பக்கத்தில் கன்னி விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.
 *தவசித் தம்பிரான், கொம்பு மாடன், கொம்பு மாடத்தி, பேச்சி, பிரம்ம சக்தி* ஆகியோர் காவல் தெய்வங்களாக இங்கே காட்சிதருகிறார்கள். மண்டபத்துக்குள் கிழக்கு நோக்கி *நல்ல மாடசாமி, பேச்சியம்மன், கருப்பசாமி* ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

கர்ப்பகிரகத்தில் உலகாண்ட ஈஸ்வரியம்மன் வடக்குத் திசை நோக்கித் தன் பெரிய விழிகளால் கோலோச்சி அருள்பாலிக்கிறாள். வேப்பமர நிழல் சூழ அம்பாள் கல்மண்டபக் கருவறையில் எழிலாக அமர்ந்திருக்கிறாள்.
இவளது சிறப்பை வ.உ.சிதம்பரம் பிள்ளை, தான் எழுதிய சுய சரிதையில் `வேண்டிய எல்லாம் வேண்டியாங்களிக்கும் உலகம்மை` என்று பரவசப்பட்டு எழுதியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில்தான் இந்த அம்மன் முதலில் கோயில் கொண்டிருந்ததாகவும், அங்கிருந்து இங்கே குடிபெயர்த்த கிராமத்தார்கள், ஆற்றல்மிகு உலகம்மனையும் அழைத்து வந்து விட்டார்கள் என்றும் தல புராணம் கூறுகிறது.

இந்த ஊரின் பழைய பெயர், வீரபாண்டியபுரம். உலகம்மை இங்கே குடிகொண்டதிலிருந்து ஓட்டப்பிடாரம் என்று மாறிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசித் திங்களில் நவராத்திரி விழாவும், ஆடி மாதம் முளைக்கொட்டுத் திருவிழாவும், பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் கொடை விழாவில் அம்மனுக்குப் பாலாபிஷேகமும் நடைபெறும். பங்குனி கடைசித் திங்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவார்கள். 

வெண்பாவிற்குப் புகழேந்தி, சிலேடைக்குக் காளமேகம் என்பது போல கசப்புக் கவிதைகளுக்கு, ஆண்டான் கவிராயர் என்று சொல்வார்கள்.அந்த ஆண்டான் கவிராயர் பிறந்த ஊர் இந்த ஓட்டப்பிடாரம்தான்

ஆண்டான் கவிராயர்...

அடியென்றால் அப்படியோர் அடி விழுந்தது ஆண்டானுக்கு. அதுவும், பழுத்த பிரம்படி. அடித்தவர், திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்தான்.

காரணம் என்ன?
ஆண்டானுக்குச் சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவில்லை. ஆண்டான், நன்கு படித்த பண்டிதர் வீட்டில் பிறந்தவன்தான். ஆனால், இவன் மட்டும் இப்படியிருக்கிறானே என்ற கவலை ஆசிரியருக்கு. அடி பின்னியெடுத்து விட்டார். பார்த்தான், ஆண்டான். அடியில் வலி பொறுக்க முடியாமல் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி வந்து விட்டான்.

எங்கே போவது?
வீட்டுக்குப் போனால் அப்பா அடிப்பாரே!

அதனால், நேராக உலகாண்ட ஈஸ்வரியின் கோயிலுக்குச் சென்று விட்டான்.

கோயிலுக்குள் நுழைந்தவன், இங்கேயும் தன்னைத் துரத்திக் கொண்டு வாத்தியார் வந்து விடுவார் என்று பயந்தானோ என்னவோ, நேராய் கர்ப்பகிருகத்தினுள் நுழைந்த ஆண்டான், உள்ளே நுழைந்ததும் கதவைப் பூட்டி உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான்.

அந்த நேரத்தில் உலகாண்ட ஈஸ்வரி, கோயிலில் இல்லை. அவள்தான் ஊர்க் காவலுக்கு வெளியில் சென்று விட்டாளே?

ஊரைச் சுற்றி முடித்த தேவி, ஆலயத்திற்குத் திரும்பினாள். தன் கர்ப்பகிருகத்தின் கதவுகள் உட்பக்கம் இறுக மூடித் தாழிடப்பட்டிருப்பதைக் கண்டாள், உலகாண்ட ஈஸ்வரி.
`கதவைத் திற'' என்றாள்.

புலமை பெறுக..

உள்ளேயிருந்த ஆண்டானின் நா தடுமாறியது. ``அம்மா, தாயே, நான் மக்குப் பிள்ளையாக இருக்கிறேன். பாடங்கள் எல்லாம் என் நாவினில் ஏறவில்லை.

எனக்குக் கல்வியையும் புலமையையும் நீ தந்தால்தான் கதவைத் திறப்பேன்'' என்று பிடிவாதம் பிடித்தான்.உலகம்மை புன்னகைத்துக் கொண்டாள். ``உன் நாவை நீட்டு'' என்றாள். சந்தேக புத்தி கொண்ட ஆண்டான், அப்போதும் கதவைத் திறக்கவில்லை. சாவித் துவாரம் வழியாக தன் நாக்கை நீட்டினான். உலகம்மை மீண்டும் புன்னகைத்தாள்.

அருகிலிருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியைப் பறித்து அவனது நாவில் `புலமை பெறுக' என்று எழுதினாள்.

அவ்வளவுதான், பிரம்மாவின் தலையெழுத்தோடு, உலகம்மையின் கலையெழுத்து சேர, ஆண்டானின் மனசுக்குள் கவிதை அலைபாய்ந்தது.

கசப்பு
வரம் பெற்றுவிட்டான் ஆண்டான். வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டாமா? ஒரு கவிதை பாடினான். கசப்புக் கவிதை. தன்னை அடித்த வாத்தியாரின் மேல் வெறுப்புக் கவிதை.

இவர் பாடிய கசப்பு கவிதைகள் பல வாயிலிருந்து உதிப்பது மற்றவருக்கு  சாபமாகவே இருந்தது

இவரே பின்நாளில் ஏரல் ஸ்ரீநட்டார் கொண்ட அம்மன்  திருக்கோவில் விஜயம் செய்தார் அப்போது மகனே கசப்பை விடுத்து இனிய பாடல் இயற்று என்றாள் அன்னை அருளோடு இனிமை உரைத்தார் 

ஏரல் ஸ்ரீநட்டார் கொண்ட அம்மன் கோவிலில் கவிராயர் சிலை அமைத்து வழிபடபடுகிறார் 

அமைவிடம்...
தூத்துக்குடியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், திருநெல் வேலியிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் உள்ளது..

பண்ணாரி மாரியம்மன்.

பண்ணாரி மாரியம்மன்.                  


அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு  பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக  விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது.  நவராத்திரியையொட்டி இவளை தரிசித்து வருவோம்.

தல வரலாறு...

பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடுநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடுவுடன் வரும். மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தார். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூறினார். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, ""நான் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வூர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புகிறேன். என்னை "பண்ணாரி மாரியம்மன்' எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள்,'' என்றார்.

அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத் துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

தல சிறப்பு..

இந்த அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மாறாக, மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது.

கோயில் அமைப்பு..

தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். 

குண்டம் திருவிழா..

இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு "கரும்பு வெட்டுதல்' என்று பெயர். தற்போது பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.

கண்வியாதிக்கு தீர்த்தம்...

காட்டு இலாகா  அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் குறிவைத்துச் சுட்டார். இதன்பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி  உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக  நம்பப்படுகிறது.திருவிழா காலத்தில் தென்படாத மிருகங்கள்: பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் காட்டில் உள்ளது. இங்கு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. கோயில் தெப்பக்கிணறு அருகில் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகளும் கட்டப் பட்டுள்ளன. திருவிழா காலங்களில் இந்த மிருகங்கள் பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை.

பூச்சாற்று சிறப்பு...

பங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில்  சுற்றுவட்டாரப்பகுதிக்கு வீதி உலா வருகிறாள். சோளகர் என்ற மலைவாசிகள் வாத்தியங்ளும், அருந்ததி இனத்தார் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.

திருவிழா..

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.

திறக்கும் நேரம்:
காலை 5.30 முதல் இரவு 9 மணி.

இருப்பிடம்..
கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்...

சொரிமுத்து ஐயனார் கோயில்

சொரிமுத்து ஐயனார் கோயில்


முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும் சொரிமுத்து ஐயனார் கோயில் அச்சன்கோவில்,  ஆரியங்காவு,  குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர்.

சபரிமலையிலேயே  ஐயப்பன் முதலில்  அமர்ந்தார் என்பர். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்தக் கோயிலில் #சாஸ்தா அமர்ந்தாராம்.

 இங்கு  மூலவராக சொரிமுத்து  ஐயனார், மகாலிங்கம் உள்ளனர்.  இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். தீர்த்தம் பாண தீர்த்தம்.  இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் #காரையார் என்ற இடத்தில் உள்ளது இக்கோயிலில் ஆடி மாதம், தைமாதம் அமாவாசைகள்,  கடைசி வெள்ளிக்கிழமை, மற்றும் பங்குனி உத்திரம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.   

பொதிகை மலையில் விழும் மிகப் பெரிய அருவியே #பாணதீர்த்தம். கோடை காலத்திலும் வற்றாத அருவியிது. இந்த புண்ணிய அருவியில் "ஆடி அமாவாசை"  அன்று நீராடினால் பாவங்கள் விலகும். தாமிரபரணி ஆறு, பொதிகையிலிருந்து ஓடிவரும் போது 122 அடி உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது.  இத் தீர்த்தம்  உடலின் அழுக்கை மட்டுமல்ல, .  நமது  உள்ளத்து   மாசுகளையும் போக்குகிறது.   பொதிகை மலையிலேயே #காரையார் உள்ளது.

பாணதீர்த்தத்தின் அருகே சொரிமுத்து ஐயனார் கோவில் இருக்கிறது.
இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு,  வலது காலை தொங்கவிட்டபடி சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார்.  இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை,  குதிரை வாகனங்கள் உள்ளன.  இவரது சந்நிதியில் சப்தகன்னியர்கள் உள்ளனர்.  இவருக்கு முன்னால் உள்ள மண்டபத்தில்  நாய் வாகனத்தோடு பைரவர் இருக்கிறார். 

இக்கோயிலில் காவல் தெய்வங்களாகச்  சங்கிலி பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடன்,  தூசி மாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன்,சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடி மாடசாமி, மொட்டடையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளன.

இக்கோயிலில் பிரார்த்தனையாக பக்தர்கள்  இங்குள்ள இலுப்பை  மரத்தில் மணியைக் கட்டுகின்றனர். அந்த மரம்  மணியை  விழுங்கி விடுவதைப்  போல மரத்தினுள்ளேயே மணிகள் பதிந்துவிடுகின்றன. எனவே இதனை  "மணி விழுங்கி மரம்'  என்கின்றனர்.  பொதிகை மலையில் உள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை விழா மிகவும் விசேஷமானது. 

இங்கு சாஸ்தா #சொரிமுத்து_ஐயனார் என்ற பெயரில் பூரணா, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சாஸ்தாவின் அவதாரமே #ஐயப்பன் என்பதால் "சபரிமலை ஐயப்பன்"  கோயிலுக்கு முந்தியது இக்கோயில்.  சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிகின்றனர். 

பட்டவராயர்..
இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் என்பவர்  தாழ்த்தப்பட்ட குலத்தில் வந்த   இரு பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டாராம். இவர் பசுக்களைப் பாதுகாக்கும் ஒரு போரில் பங்கேற்று மரணமடைந்தாராம்.  அவரே  "பட்டவராயர்"  என  இந்த கோயிலின் ஒரு பகுதியில் சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொம்மக்கா, திம்மக்கா என்ற தம் இரு மனைவியருடன் பட்டவராயர் சாமி வீற்றிருக்கிறார்.  இவரது சந்நிதியில் பக்தர்கள் செருப்பைக்  காணிக்கையாகக் கட்டுகின்றனர்.

முதலாண்டில் கட்டப்படும் செருப்பு மறு ஆண்டு  பார்க்கும் பொழுது அது தேய்ந்திருக்குமாம். இரவில்  பட்டவராயர் இந்த செருப்புகளை அணிந்து கொண்டு ஊர்வலம் செல்கிறார்! என்பது மக்களின் நம்பிக்கை.  இது வனப்பகுதி என்பதால் வெளியாட்கள் இங்கே அதிகம் வருவதில்லை;  இறைவனுக்கு காணிக்கை ஆக்கியிருக்கும் செருப்புகளை  யாரும்  தொடுவதில்லை. அப்படியிருந்தும் செருப்புகள் தேய்வது, இறைவனின் அதிசயமாகக்  கருதப்படுகிறது. 

கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவியின் திருமணத்தின் போது  பூமியைச்  சமன்ப்படுத்த அகத்திய மாமுனிவரைப் பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவபெருமான்.  அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த வேளையில்   சிவலிங்கப்  பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த  சிவலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில் இவ்வழியாக  மாடு மேய்ப்பவர்கள் மாடுகளை ஓட்டிச் செல்லும்போது, தொடர்ந்து இந்த இடத்தில் பசுக்கள்  தானே  பாலை சொரிந்தன. எனவே அங்கே மக்கள் தோண்டிப் பார்த்தபோது அதனுள் சிவலிங்கம் இருப்பதை கண்டெடுத்து கோயில் எழுப்பினார். 

இத்தலத்திலேயே தர்மசாஸ்தாவின் சந்நிதி கட்டப்பட்டுள்ளது. சாஸ்தாவை கிராமப்புறங்களில்  ஐயனார் என்பர். ஐயன் என்றால் தலைவன் என்று பொருள்; மரியாதைக்காக "ஆர்"  விகுதியைச்  சேர்த்து  "ஐயனார்" என்கின்றனர்  பக்தர்கள்.  "மழை  பொழிவதைப் போல பக்தர்களுக்குக்  கணக்கின்றி அருள்புரிபவர்"  என்பதும், இவரை வழிபட்டால் சொரியும் முத்தென மழை பொழியும்!  என்பதாலும்,  இவர்  #சொரிமுத்து_ஐயனார் எனப்பட்டார்.

காலத்தே மழைபெய்ய வேண்டுமென   இவரை மக்கள் வேண்டுகின்றனர்.   இதனால் கிராம மக்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கிறது.  மழை இல்லாத காலங்களில் இந்த ஐயனாருக்குப் பூஜை செய்தால் மழை பொழியும்!  என்பது மக்களின் நம்பிக்கை. 

ஒரு நாள் அகத்தியர் தாமிரபரணில் கரையில் தவம் மேற்கொண்டிருந்த போது அசரிரீ ஒன்று, இப்போது வானில் ஒரு ஜோதி தோன்றும்!  அதை கவனி!  என்றது. அகத்தியரும் கண் விழித்துப்பார்த்தார்.  அப்பொழுது சிவபெருமானுக்கும்_பார்வதி தேவிக்கும்,   விநாயகர், முருகன், தர்மசாஸ்தா (சொரிமுத்து ஐயனார்) ஆகியோர் பூஜை செய்த காட்சி அகத்தியருக்குத்  தெரிந்தது;  அப்படி தெரிந்த நாளே  "ஆடி அமாவாசை"  நாளாகும்.

புறத்தே இருட்டாக இருந்தாலும் மனம் வெளிச்சமாக இருந்தால்  புற இருள்  பெரிதாக தெரியாது.  இந்த அரிய தத்துவத்தை விளக்கும் வகையிலேயே சொரிமுத்தையனார் கோவிலில் அமாவாசை நாளான இருட்டு நாளில் ஒளி விழா நடக்கிறது.   அவர் கண்ட காட்சி வெளியேயும் உள்ளேயும், வெளியேயும் எங்கும் ஒளிமயமாக தெரிந்தது. 

இதனால்  மகிழ்ச்சியடைந்த அகத்தியர் இந்த தலத்தில் ஆடி அமாவாசையன்று யார் வந்து பாணதீர்த்தத்தில்  நீராடி இங்கிருக்கும் சொரிமுத்து ஐயனாரை வழிபடுகிறார்களோ, அவர்களுக்குச் சகல நலங்களும் கிட்டும்! என்று ஆசீர்வதித்தார். எனவே ஆடி அமாவாசையான  இருட்டு நாளில் இங்கே  "ஒளிவிழாவாக" பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
அதனால் தான் ஆடி அமாவாசை இக்கோயிலில்  மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது...

பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்

பிரச்சனைகளை தீர்க்கும் 
அற்புத ஆலயங்கள்.....

அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த  மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்... 

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம்ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம். 

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்தபட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பலகாரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன. 

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்திஎன்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் -  நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும். 

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள்நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!
 
மனநோய் அகற்றும் " திருவிடை மருதூர்

சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தலநாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில்இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை...

 புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வவியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

 கடன் தொல்லைகள் தீர்க்கும்  திருச்சேறைருண விமோச்சனர்..

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார்பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்யஅனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.  

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்  சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்....

கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்துஅருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்துசங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளைசிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய  ‘ஸ்ரீவாஞ்சியம்’..

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

அட்சரப்பிரயாசம் 
( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்....

அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களைகற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கானஅட்சரப்பியாசம் நடைபெறுகிறது.குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்துவந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்துபயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும்வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம்....

முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் 
வைத்தியநாதர்....

மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும்திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமிதீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையைஉட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராதவியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ளசாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"....

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர்தந்தை யாகம் செய்ய தேவையான பொருள்கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன்மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும்வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

  
நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்.

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்.

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர் .

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள் .

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்கதிருநீலக்குடி எனும் தென்னலக்குடி.

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீரதிருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் .

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்.

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன் .

விரைவில் திருமணம் கைகூட காசி விஸ்வநாதர் கோயில் "நவ கன்னியர் வழிபாடு" 

நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மல்ர்கள், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.  கும்பகோண நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள " மகாமக " குளக்கரையில் உள்ளது இத் திருத்தலம்.

#மாங்கல்ய பலம் அருளும் பஞ்ச மங்கள சேத்ரமாம் " திருமங்கலக்குடி "....

நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான். 

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான். 

மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

இத் திருத்தலம், கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், சூரியனார் கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளது. 

மாங்கல்யப் பேறு தரும் " கருவிலி கொட்டிட்டை சர்வாங்க சுந்தரி "

தட்ச யாகத்தின் போது, தாட்சாயினியை பிரிந்த ஈசன், இத் தலம் வந்தடைந்தான். ஈசனை மீண்டும் அடைய வேண்டி, அம்மையும் இங்கே வந்தடைந்தாள். அப்பனும், அம்மையும் இணைந்த இத் திருக்கோயில், திருமணம் கை கூடுவதற்கும், மாங்கல்ய பேறு நீடிப்பதற்க்கும் வழிபடப்படுகிறது. இது பிறப்பை அறுத்து மோட்சம் அருளும் தலமாதலால், " கருவிலி " என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் நீங்கும். இத் தலத்தை தரிசிப்பது, கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்த பலன் அருளும் கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில், நாச்சியார் கோயில் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் கூந்தலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இத் திருத்தலம். 

திருமணம், மகப் பேறு, சுகப் பிரசவம் அருளும் " திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை "

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். 
நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும். இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது இத் திருக்கோயில். 

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம்" 

முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் " மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 
 
திருமணத் தடைகள் நீக்கும் சார்ங்கபாணி கோயிலின் " கோமலவல்லி " நாச்சியார் "....

சாரங்கபாணி திருக்கோயிலின் நாச்சியார் " கோமலவல்லி " தனிச் சிறப்பு கொண்டவர். தாயாரின் அவதாரத் தலம் இது என்பதால், இங்கு நாச்சியாருக்கே முதல் மரியாதை. தாயாரை வழிபட்ட பின்னரே மாலவனை வணங்க வேண்டும். இத் தாயாருக்கு, தங்கள் வசதிக்கேற்ப புடவை சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் திருமணாமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். மன வேறுபட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர், கருத்தொருமித்து ஒன்று சேர்வர். வழிபடும் சுமங்கலிப் பெண்களின் " மாங்கல்ய பலம் " பெருகும். தடை பட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இத் திருத்தலம். 

திருமணத் தடை அகற்றும் " திருப்புறம்பியம் ஸ்ரீ குகாம்பிகை"

பிரளயம் காத்த விநாயகர் வீற்றிருக்கும் திருப்புறம்பியத்தில் உள்ள " ஸ்ரீகுகாம்பிகை " சந்நதி மிகச் சிறப்பானது. குழந்தை வடிவு கொண்ட ஆறுமுகனை, தன் இடையில் தாங்கி நிற்கும் இந்த அம்பிகைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், வேண்டுவோர்க்கு அருள் புரிகிறாள் இந்த் அம்பிகை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற இத் திருத்தலம். 

விவாகத் தடைகள் அகற்றும் 

திருமங்கைச்சேரி வரதராஜ பெருமாள் "...

"புன் நாகம்" என்ற பாம்புக்கு பெருமாள் காட்சி தந்த இத் திருத்தலம், ராகு மற்றும் சர்ப தோஷங்கள் நீக்கும் பரிகார நிவர்த்தி தலமாக விளங்குகிறது. " மண்ணிற்கு தென்பால் நின்ற திருமாலே " என்று திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற இத் தல வரதராஜ பெருமாளை வணங்கினால், திருமண தடைகள் நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும்.   வேறெங்குமில்லாத வண்ணம், இத் தலத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடையில் கிழக்குக் நோக்கி, தனது வலது காலை ஓரடி முன் வைத்து பெருமானை வணங்கும் பக்தர்களுக்கு உதவ தயாராக உள்ளது போன்று காட்சி தருகிறார் " பால ஆஞ்சநேயர் ". 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்த்லம் கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 
பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் பூமாதேவி சமேத " ஆதி வராகப் பெருமாள் " 

தன் இடப் பக்க தொடையில் பூமா தேவியை கொண்டு காட்ச் தரும் " ஆதி வராகப் பெருமாள் ", பூமி சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர். ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில், நெய் விளக்கேற்றி வணங்கி, சகஸ்ரநாமம் செய்து, அன்ன தானம் அளித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். வழிபடுவோருக்கு புத்திர பாகியம் கிடைக்கும்.  இத் திருத்தலம், கும்பகோணத்தின் மையப் பகுதியில், சக்கரபாணி கோயிலின் அருகில் உள்ளது.

மணம் போல் மணாளன் அமைந்திட 

கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் அருகிலுள்ள "நிறம் மாறும் லிங்க திருமேனி கொண்ட திருநல்லூர்" 

திருமணத் தடைகள் அகன்றிட 

கும்பகோணம் திருப்பனந்தாளை அடுத்து அமைந்துள்ள ஆதி குரு வீற்றிருக்கும் " திருலோகி சுந்தரேஸ்வரர் 

திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட

திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் தனி மணடபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் "சோமஸ்கந்தர்" 

தடை படும் திருமணம் இனிதே நடைபெற 

கும்பகோணத்தில் அமையப்பெற்ற "குரு பரிகார தலமான ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி " 

திருமணத் தடைகள் நீங்க

கும்பகோணத்தில் அமைந்துள்ள " ராகு பரிகார தலமான - திரு நாகேஸ்வரம் ராகு பகவான் "  

இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை "..

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம்  செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" 

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக  சம்பந்தர் அருளிய பதிகம் இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே...!

திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில் 30 அறிய தகவல்

திருவேற்காடு கருமாரியம்மன்
திருக்கோயில் 30 அறிய தகவல்



1. கருமாரியம்மன் மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். அன்னை சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் அருளாட்சி செய்கிறாள்.

2. அன்னைக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள்.

3. தினமும் காலையில் கோபூஜை நடக்கிறது, மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது.

4. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது, இதனை "பதி விளக்கு' என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் இருப்பது விசேஷமான அமைப்பு.

5. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது.

6. பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.

7. கோயிலுக்கு வெளியில் "திருச்சாம்பல் பொய்கை" தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் அழகிய கொடிமரம் உள்ளது.

8. பெரும்பாலான மாரியம்மன் தலங்களில் திருவிழாவின் போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.

9. பசு சாணத்தில் செய்த சாம்பலையே (திருநீறு) இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர்.

10. முற்காலத்தில் இப்பகுதியில் நாக புற்று ஒன்று இருந்தது, இதனை மக்கள் வணங்கி வந்தனர். பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும் படி கூறினாள்.

11. பக்தர்கள் இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை, சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள்.

12. புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும் போது அனைவரின் கண் முன்பாக வெளியேறியது.

13. இந்த நாகம் ராஜகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

14. புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

15. அகத்தியருக்கு காட்சி தந்த வேற்கன்னி அம்பாள் தனிச் சன்னதியில் காட்சி தருகிறாள். 

16. இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. அன்னையே "மரச்சிலை அம்மன்" என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

17. அன்னையிடம் வேண்டிக் கொண்டால் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே அன்னையிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இருக்கிறது.  
     
18. பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். அம்பிகை பால ரூபத்தில், சிம்ம வாகனத்துடன் நின்றிருக்கிறாள்.

19. சீனிவாசர் பெருமாள் பத்மாவதி தாயார், ஆஞ்சநேயர், வள்ளி, தெய்வானையுடன் முருகன்,  தெட்சிணாமூர்த்தி, அங்காள பரமேஸ்வரி, உச்சிஷ்ட கணபதி, காயத்ரி, மகாலட்சுமி, நவக்கிரகம் ராஜராஜேஸ்வரி, சாவித்திரி, துர்க்கை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

20. கருமாரியம்மனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது. அமாவாசையில் இவளுக்கு மிளகாய் வத்தல் யாகம் நடக்கிறது.

21. கோயில்களில் திருவிழா அதிகபட்சம் 15 நாட்கள் நடக்கும். அரிதாக சில அம்பாள் கோயில்களில் 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர். ஆனால், இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் நடக்கிறது.

22. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பிகைக்கு 108 குட அபிஷேகம் நடந்து வீதியுலா செல்கிறாள். 9ம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகிறாள்.

23. மாசி மகத்தன்று அம்பாள் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள். நவராத்திரி விழா. தை மாதம் பிரம்மோற்ஸவம், ஆடி மற்றும் புரட்டாசியில் பெரிய திருவிழா நடைபெருகிறது.

24. அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்தும், அக்னி சட்டி எடுத்தும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  

25. தேவி கருமாரியம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் இங்கும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

26. தல விருட்சம் கருவேல மரம், தீர்த்தம் வேலாயுத தீர்த்தம், காமீகம் முறைப்படி பூஜை செய்கின்றனர்.

27. அருகில் வேதபுரிஸ்வரர் திருக்கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது.

28. வைகாசி மாதம் சீனிவாசர் பெருமாளுக்கு கருட சேவை சாதிக்கிறார்.

29. அம்பிகை தானாக தோன்றியதால் இவளுக்கு, "கருவில் இல்லாத கருமாரி' என்ற பெயரும் உண்டு.
  
30. ஆலய முகவரி அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077, சென்னை. திருவள்ளூர் மாவட்டம்..

வள்ளி மலை

வள்ளி மலை


வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புபெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.

இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும்.

படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன.

ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வ‌ள்‌ளிமலை‌க் கோ‌‌யிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கா‌ல் ம‌ண்டப‌ப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனா‌ல் அ‌‌வ்‌விட‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் எ‌‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் செ‌ய்யாம‌ல் அ‌‌ந்த க‌ல்லை அ‌ப்படியே மூடி‌வி‌ட்டன‌ர் எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை.

படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.

நுழைவா‌யி‌லி‌ல் உ‌ள்ள ஒரு ச‌‌ந்ந‌தி‌யி‌ல் வ‌ள்‌ளி அ‌ம்ம‌ன் பாறை‌யி‌ல் செது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த ‌சி‌ற்ப‌த்‌தி‌ற்கு‌ம் ஆடைக‌ள் அ‌ணி‌வி‌க்க‌ப்ப‌ட்டு ‌தீபாராதனைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன. அவரை வண‌ங்‌கி‌வி‌ட்டு உ‌ள்ளே செ‌‌ல்லு‌ம் போது சாதாரண உயர‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌ம் கு‌ணி‌ந்துதா‌‌ன் செ‌ல்ல வே‌ண்டு‌ம். அ‌வ்வளவு தா‌ழ்வான நுழைவா‌யிலை அடு‌த்து முருக‌ன் க‌ர்‌ப்ப‌கிரக‌ம் கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறது.

மேலே பா‌ர்‌த்தா‌ல் பாறை எ‌ங்கே நமது தலை‌யி‌ல் ‌விழு‌‌ந்து‌விடுமோ எ‌ன்ற அ‌ச்ச‌ம் உருவா‌கிறது. பாறைகளை‌க் குடை‌ந்து அத‌ற்கு‌ள் முருகனை வை‌த்து வ‌ழிபட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் ‌எ‌ப்படி தோ‌ன்‌றி‌யிரு‌க்கு‌ம் எ‌ன்று ‌பிர‌ம்‌மி‌ப்பாக உ‌ள்ளது.

எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.

மேலும்
அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானை‌யி‌ன் உருவம் கொண்ட பாறை எ‌ன்று ந‌ம்பு‌ம் ப‌க்த‌ர்க‌ள் அதனை கணேச கிரி என்று ப‌க்‌தியோடு வண‌ங்குகிறார்கள்.

கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.

மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம்.

இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.

இ‌ந்த கோ‌யி‌ல் மாலை 5 ம‌ணி வரை ம‌ட்டுமே ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம். கோ‌யிலு‌க்கு‌ள் 4 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் செ‌ன்று‌வி‌ட்டா‌ல் அத‌ற்கு ‌பி‌ன்ன‌ர் 2 ‌கி‌.‌மீ. தூர‌ம் நட‌ந்து செ‌ன்று ஆ‌சிரம‌ம், சுனை, ‌திருமா‌ல் ‌கி‌ரீ‌ஸ்வர‌ர் கோ‌யி‌ல்களை த‌ரிசன‌‌ம் ச‌ெ‌ய்து‌வி‌ட்டு ‌திரு‌ம்ப இயலு‌ம். கோ‌யி‌‌லி‌ன் நடை சா‌ர்‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம், ம‌ற்ற பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ன்று ‌திரு‌ம்ப த‌னி வ‌‌ழி உ‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ச் செ‌ல்ல இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம்.

எனவே இறை‌த்த‌ன்மை வா‌ய்‌ந்த இ‌‌‌த்தல‌த்‌தி‌ற்கு செ‌ன்று வ‌ள்‌ளி‌‌ மலை‌யி‌ன் அ‌ற்புத‌த்தை க‌ண்டு வாரு‌ங்க‌ள். வ‌ள்‌ளி, தெ‌ய்வயானை சமேதரா‌ய் ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌ம் முருக‌னி‌ன் அருளை‌ப் பெ‌ற்று வாரு‌ங்க‌ள்.

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில்...


கடலூர் மாவட்டத்தில் சிவபுரி என்னும் ஊரில் அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. 

மூலவர் : உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்

அம்மன்/தாயார் : கனகாம்பிகை

தல விருட்சம் : நெல்லி

தீர்த்தம் : கிருபா சமுத்திரம்

புராணப்பெயர் : திருநெல்வாயில்

ஊர் : சிவபுரி

மாவட்டம் : கடலூர்

தல வரலாறு :

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது திருஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட, 'அம்மா! அப்பா!" என்று அழுதுக் கொண்டிருந்தார்.

இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் திருஞானசம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த திருஞானசம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து இருந்தார்.

குளித்து விட்டு வந்த தந்தை, 'பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கி சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்துவிட்டாயே," எனச்சொல்லி குச்சியால் திருஞானசம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். சிவன், பார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி கையை நீட்டிய திருஞானசம்பந்தர், 'தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாத இருதயர். திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது.

பிறகு மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோவிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சி பொழுதாகிவிட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினார்கள். 

திருஞானசம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோவில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் 'உச்சிநாதர்" என்றும் 'மத்யானேஸ்வரர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

தலப்பெருமை :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 3வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் சிவபெருமான் கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவன், பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.

சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதி 'திருநெல்வாயில்" என அழைக்கப்பட்டது. தற்போது சிவபுரி எனப்படுகிறது. இங்கு தான் கோவில் அமைந்துள்ளது.

சக்தியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

பிரார்த்தனை: 

இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுவதும் அந்த குழந்தையின் வாழ்வில் உணவு பிரச்சனை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

நேர்த்திக்கடன்:

சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர்.

 ⚛️🔆⚛️🔆⚛️🔆⚛️

ஏகாம்பரேஸ்வரர்

ஏகாம்பரேஸ்வரர்


12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும்... 

ராசி கோவிலாக திகழ்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்.

12 ராசிகள் அமைந்த சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் மற்றும் திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என்று சொல்லக் கூடிய பஞ்சகங்கள் போன்றவை தான் நிர்ணயம் செய்கின்றன.

இவைகளால் ஏற்படக்கூடிய தோஷங்களில் ராசி ரீதியாகவும், நட்சத்திர ரீதியாகவும் மனிதர்களாகிய நாம் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகிறோம்.

அந்த பாதிப்பில் இருந்து விடுபட பலரும் பரிகாரத் தலங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

அந்த வகையில் நமக்கெல்லாம் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்.

சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் இதுவாகும்.

12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் இந்த ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ராசி கோவிலாக திகழ்கிறது.

இத்தல இறைவனின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் காமாட்சியம்மன். இந்த சிவாலயத்தில் வட்ட வடிவிலான பீடம் அமைந்துள்ளது.

இந்த பீடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகளுக்குரிய குறிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஐராவதம், புண்ட்ரீகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபவுமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள்(யானைகள்), நாகங்கள், 64 கலைகளை விளக்கக்கூடிய சிற்பங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை, பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக்கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பீடத்தின் மீதுதான் அனுக்கிரக மூர்த்தியாக ஏகாம்பரேஸ்வரரும், சாரங்கநாத சித்தர் வழிபட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இது போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இத்தலத்தில் காமாட்சியம்மன், சிந்தாமணி மாணிக்க விநாயகர், ஐஸ்வர்ய மகாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி, அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம்புரி விநாயகர், நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகிய சன்னிதிகளும் தனித் தனியாக அமையப்பெற்றுள்ளன.

சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டதாகவும், அவர் இந்த ஆலயத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் கருதப்படுவதால், அவர் நினைவாக துளசி மாடமும், அதன் அருகில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த சித்தர் சன்னிதியில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும், 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது.

இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை வைத்து எடுத்துச்செல்கின்றனர்.

கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் அமையப்பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும்.

ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னிபிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு.

இத்திருத்தலத்தில் மாதம் இருமுறை பிரதோஷம், சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட விசேஷங்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இத்தலத்தில் பக்தர்கள், தங்கள் ராசிக்குரிய இடத்தில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தற்போது 63 நாயன்மார்கள் மற்றும் சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரது திருமேனிகளை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல் 12 மணி வரையும், இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

இந்தக் கோவிலுக்கு அருகில் பரந்தமலை என்னும் மலை உள்ளது. அங்கு சப்தகன்னியர்களும், வற்றாத சுனையும் உள்ளது.

எல்லா காலத்திலும் அந்த சுனையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். மேலும் அங்கு சித்தர்கள் வாழ்ந்த சிறிய குகைகளும் காணப்படுகின்றன.

அமைவிடம்

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது.

இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

கல்லூரியில் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது...

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோவில்

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோவில்


தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது..

நந்தியம் பெருமான் பூலோகத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் ஒரு முறை பசுக்கள் பலவற்றுடன், பம்பா நதிக்கரையில் உள்ள வன்னி வனத்திற்கு சென்றார். அங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்த அபிராமேஸ்வரரை வணங்கி பல நாட்கள் தவம் புரிந்து கொம்புகளைப் பெற்றார். எனவே இந்த தலம் ‘ஆமாத்தூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘திரு’ என்பது தெய்வத் தன்மை பொருந்திய வார்த்தை என்பதால், ‘திருவாமாத்தூர்’ என்று வழங்கப்படலாயிற்று.

இந்த ஆலயத்தை வட மொழியில் ‘கோமாதுபுரம்’, ‘கோமாதீஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள். சைவ சமயக் குரவர்களில் மூன்று பேர், இந்த ஆலயத்தைப் பற்றி திருப்பதிகங்கள் பாடிஉள்ளனர். அருணகிரிநாதரும் இந்த ஆலயம் பற்றி செய்யுளும் இயற்றியுள்ளார். அதில் இந்த தலத்தை ‘மாதை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆலயம் தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றினாலும் சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அபிராமேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மிகவும் பழமையான திருத்தலமாக இது இருப்பதை, நந்தியம் பெருமானின் தல வரலாறு மூலமாக அறியமுடிகிறது. கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்கத்தின் மீது, சந்திரப் பிறை போல, பசுவின் கால் குளம்பின் சுவடு காணப்படுவது சிறப்பு அம்சம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. இந்த இறைவன் சற்று இடதுபுறமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறார் என்பது விசேஷமானது.

ஆலயத்தின் உள்ளே அஷ்ட லிங்கங்கள், அதாவது எட்டு மூர்த்திகள் அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு லிங்க மூர்த்தி (அபிராமேஸ்வரர்), ராமபிரானின் வேண்டுகோள்படி அனுமன் கொண்டு வந்த லிங்க மூர்த்தி (அனுமதீஸ்வரர்), சகரஸ்ர லிங்கம், குபேரலிங்கம், அண்ணாமலையார், காசி விஸ்வநாதர், வாயு திசையில் உள்ள வாயு லிங்கம், ஈசான மூர்த்தி ஆகிய லிங்கங்கள் பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும்.

அபிராமேஸ்வரர் திருக்கோவில் கிழக்கு நோக்கியும், சற்று வடப்புறம் தள்ளி நேராக மேற்கு நோக்கி முத்தாம்பிகையம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இவர்கள் இருவரையும் வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறை கோஷ்டத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் லிங்கோத்பவரும் வீற்றிருக்கிறார்கள். லிங்கோத்பவரை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் நன்மைகள் பலவும் வந்து சேரும்.

இந்த ஆலயத்தில் திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. இந்தப் பாறையின் முன்பாக நின்று பொய் சொல்பவர்கள், தேவர்களாக இருந்தாலும் அவர்கள் மீளாத துன்பக் கடலில் வீழ்வார்கள் என்பது ஐதீகம். எனவே பொய் சாட்சியால் சிக்கலில் இருக்கும் வழக்குகள் பலவும், இங்கு வந்து தீர்க்கப்படுவது கண்கூடாக நடக்கும் செயலாகும்.

இத்தல இறைவனை அகத்தியர், வசிஷ்டர், துர்வாசர், பிருகு, பராசரர், விசுவாமித்திரர், வியாசர் ஆகிய ஏழு முனிவர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அம்பிகை, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், நாரதர், உரோமசர், பிருங்கி முனிவர், மதங்க முனிவர், பன்னிரு கதிரவர்கள், அஷ்டவசுக்கள், மகாகாளன், ராமபிரான், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், இரட்டை புலவர்கள் முதலானோரும் இத்தல இறைவனை வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.

முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் (கி.பி.1012), சீரங்க தேவ மகாராயர் (கி.பி.1584) காலம் வரை பேரரசர்- சிற்றரசர் காலத்து எழு பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. திருக்கோவில் இறைவன் மீது திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களையும், திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் பாடியுள்ளார்கள். இதனால் இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்திற்கு கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம்...
விழுப்புரம் நகரில் இருந்து திருவாமாத்தூருக்கு பஸ் வசதிகள் உள்ளன. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆலயம் இருக்கிறது...

சீதளாதேவி மகாமாரியம்மன் வலங்கைமான்

சீதளாதேவி மகாமாரியம்மன் 
வலங்கைமான்



இக்கோயிலின் மூலவராக மாரியம்மன் உள்ளார். 

அவர் சீதளாதேவி அம்மன் என்றும் பாடை கட்டி மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.

மகாமாரியம்மன் உருவில் சிறியவள்: எளிமையானவள். 

ஆனால் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளை விட பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள். 

குழந்தையே இந்த தலத்தில் மாரியம்மனாக வீற்றிருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது

இத்தலத்தின் உள் சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர் இருளன், பேச்சாயி, பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளன. 

வாய் பேச முடியாத குழந்தைகளை இந்த தலத்துக்கு அழைத்து வந்து மாரியம்மனுக்கும் பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாக சர்க்கரை பொங்கலிட்டு படைத்து வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. 

உடலில் எந்த பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கபிரதடசணம்  வருவது இந்த தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

அம்மை நோய் கண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகி விடும். 

கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண் பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும், 

கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண் மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். 

கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சையின் சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.

தல வரலாறு:

வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்  காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார்.  அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள்.  இருவரும்  இறைபக்தி மிக்கவர்கள்.  காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார்.  அவர் மனைவி  பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார்.   வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார்.  அன்று வெள்ளிக்கிழமை,  நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன.  எல்லாம் இறையருள்  என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

அப்போது,  ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார்.  குளித்துவிட்டுக் கரையேறிய பின்  அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள்.  அங்கே  விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக்  கண்டாள்.  தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர்.  அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள்.  குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.  

அந்தக்  குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர்.  கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர்.  தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம்.   புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை  நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை  வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது.  இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப்  பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும்.  அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.

ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர்.  குழந்தையை எடுத்து  வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள்.  ஆனால் கடுமையான  அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது.  ஆறாத்துயரம் அடைந்த  கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம்  வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். 

சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்.

பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக்  கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர்.  அவர்கள் நான்தான் மாரியம்மன்  குழந்தை வடிவில் இங்கு வந்தேன்.  என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார்.   அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது 

மக்கள் வந்து  வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி  மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே  விளங்கலானாள்.  அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக  கூறப்படுகிறது.

மகா மாரியம்மன்:

நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வைத்தபடி வீர சிம்மாசன்த்தில் மகா மாரியம்மன் வீற்றிருக்கிறார். வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியுமும், இடது மேற்க ரத்தில் சூலமும், இடது கீழ்க ரத்தில் கபாலமும் வைத்திருக்கிறார். அம்மனின் இரு தோள்களிலும் இரு நாகங்கள் உள்ளன. 

இந்த தல மாரியம்மனை தீபமேற்றி வழிபட்டு, அர்ச்சித்தால் நாகதோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

தலச்சிறப்பு:

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர்.  நோய் குணமானவுடன்,  'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர்.  பக்தர்கள், "தன்  உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது  படுத்து ஆலயத்தை வலம் வருவதாக  வேண்டிக் கொள்வர்". 

பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான  பாடை  வழிபாடுகள் நடைபெறும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர்.  பிறகு சுமந்து வருவர்.  கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக்  கொண்டு முன்னால் வருவார்.  இவர்கள் ஆலயத்தை வலம்  வந்ததும் பாடை பிரிக்கப்படும்.  பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார்.  வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக்  காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

போலீசாரின் மண்டகப்படி

வலங்கைமான் காவல் நிலையத்தில 1942-ம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் போது பாடைக் காவடி மற்றும் அலகு பாவடி போன்றவை எடுக்கக் கூடாது என்று அந்த போலீஸ் அதிகாரி தடை விதித்தர். அந்த வருடம் பாடைக்காவடி எடுத்து வந்த பக்தர்களை வாய்க்கு வந்தபடி திட்டியாதோடு, தன் கைப்பிரம்பால்  அவர்களை  விரட்டியடித்தார்.

பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கண்டு துடிக்காமல் இருப்பவர் தாயல்லவே! சிறிது நேரத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் கண் பார்வை திடீரென்று பறிபோனது. ‘கண்தெரிய வில்லையே! என்று  கதறிய அந்த அதிகாரி அம்மை நோயாலும் பாதிக்கப்பட்டார். அகிலத்தை காக்கும் அம்மனின் பக்தர்களை துர்வார்த்தைகளால் தூற்றியதால். அம்மனின் கோபத்திற்கு கிடைத்த சாபம் இதுவென்று அப்போது தான் போலீஸ் அதிகாரிக்கு தெரியவந்தது.

அவர் உடனடியாக ஒரு பேப்பரையும், பேனா வையும் அங்கிருந்த ஒருவரிடம் வாங்கி, இனி மேல் எந்த அதிகாரியும் என்போல் பாடைக் காவடி விழாவுக்கும், இறை காரியத்திற்கும் தடையாக இருக்காதீர்கள் என்று எழுதி கையெழுத்திட்டார். சற்று நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அன்று முதல் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து பங்குனி மாத திருவிழாவின் போது ஒரு நாள் மண்டகப்படி இன்றளவும், பயபக்தியுடன் அம்மனுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருவிழாக்கள்:

ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. 

ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா,

ஆவணி கடைசி ஞாயிறு தெப்பத்திருவிழா,

பங்குனி 2-ம் ஞாயிறு "பாடைகாவடி திருவிழா" சிறப்பானது,

பங்குனி மூன்றாவது ஞாயிறு "புஷ்பபல்லாக்கு",

பங்குனி "கடைஞாயிறுதிருவிழா".

பங்குனித்திருவிழா பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்குகிறது. அன்று இரவு அம்பாளுக்கும் பூசாரிக்கும் காப்பு கட்டப்படுகிறது. காப்புக் கட்டிக் கொள்ளுதல் என்பது இவ்விழா முடியும் வரை தூய்மையாக இருந்து விழாவை புனிதமாக முடித்து வைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் உறுதிச் செயலாகும். காப்பு கட்டிய பின் விழா முடிந்து காப்பவிழ்க்கும் வரை அவ்வூர் மக்கள் வெளியூர் செல்லக்கூடாது என்பது மரபு. 8-ஆம் நாள் திருவிழாவைப் “பாடைக்காவடி திருவிழா” எனச் சிறப்பாக அழைப்பர்.

திருவிழா அன்று வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலை சுற்றி நூற்று கணக்கான பாடைகள். பாடைகளில் பிணங்கள், பிணங்களுக்கு அடிக்கப்படும் மேளம், தீச்சட்டி என ஒரு பகல் நேரத்தில் வீதி முழுக்க பாடைகாவடிகள் வரும். பாடைகளில் படுத்திருப்போர் வாய்கட்டி உடலில் கயிறு கட்டி பாடைகாவடி எடுக்கும் பக்தர்களை பார்க்கும் போது அன்னையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை எத்தகையது என்பது புரிந்தாலும் ஒரு உயர்ந்த தத்துவத்தையும் இந்த பாடைகட்டி திருவிழா போதிக்கிறது.
நாம் எப்படி தான் வாழ்ந்தாலும் கடைசியில் இதுதான்.

இவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கும் வரை எப்போதும் எல்லோரிடமும் அன்போடும் நல்ல மனதோடும் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பாடைக்காவடியுடன் ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்க அலகுக்காவடிகள், பால் அலகுக்காவடிகள் காலை முதல் கோவிலுக்கு வந்த வண்ணம் இருக்கும் காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும். இவ்விழா அன்று மாலை செடில் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவின் மறுநாள் திங்கட்கிழமை மீன் திருவிழா என்ற விழா இப்பகுதியில் நடைப்பெறும். மீன் திருவிழாவில் அனைத்து ஊர்களிலிருந்து மீன்கள் முதல்நாள் இரவே வந்திருந்து மீன் சந்தையாக வியாபாரம் நடைப்பெறும்.

அன்று வலங்கைமான் பகுதி மக்கள் திருவிழாவை காண வெளியூரிலிருந்து வந்திருக்கும் தங்கள் உறவினர்களுக்கு மீன் விருந்து செய்வதை மீன் திருவிழா என வலங்கைமான் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஏப்ரல் மாதம் புஷ்ப பல்லக்கு விழாவும் ஞாயிற்றுக்கிழமை கடை ஞாயிறு திருவிழாவும் நடைபெறுகிறது. விழா தொடங்கிய நாள் முதல் இரவு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு. மாடுகளும் நோய்வாய்பட்டுவிட்டால் அன்னையை நினைத்து விபூதி பூசி வேண்டிக்கொண்டு அவைகள் நலமான பிறகு ஆடு மாடுகளை அன்னை சீதளாதேவிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து 9km தூரத்தில் உள்ளது கோவில்.
கும்பகோணத்தில் இருந்து
மன்னார்குடி செல்லும் வழியில்  வலங்கைமான்  மெயின் சாலையில் 
குடமுருட்டி ஆற்றை கடந்தவுடன் சாலை ஒரத்திலேயே அமைந்துள்ளது ஆலயம்..

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...