Showing posts with label Keerai Benefits In Tamil. Show all posts
Showing posts with label Keerai Benefits In Tamil. Show all posts

அகத்திக்கீரை

அகத்திக்கீரை



சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது.

 அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

 மேலும் அகத்திக்கீரையில் 
மாவுச் சத்து,  இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.



* அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
 
* அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
 
* அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை,  மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

* தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும், மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.
 
* உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து   விடுபடலாம்.
 
* தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும்  உடலில் உள்ள பித்தம் குறையும்.
 
* அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர்  தடையில்லாமல் போகும்.
 
* அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.

முளைக்கீரை

முளைக்கீரை


முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.

காய்ச்சல், ஜுரம்

சீதோஷண மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், ஜுரங்கள் போன்றவை குணமாகும்.


மூலம்

மூலம் எனப்படும் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் புடைப்பு, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த மூல வியாதியை நீக்க முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிடுவதால் உள் மூலம், பௌத்திரக் கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

பசியின்மை

ஒவ்வொரு வேளை உணவு உண்டு முடித்ததும் அடுத்த வேளை உணவுக்காக பசி உணர்வு வயிற்றில் ஏற்பட வேண்டும். பசியின்மை ஏற்பட்டிருப்பவர்கள் முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாக்கும்.


ருசியின்மை

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமயம் சிலருக்கு எந்த ஒரு உணவு சாப்பிட்டாலும் நாக்கில் ருசியின்மை உண்டாகும். இந்த பிரச்சனை ஏற்பட்டவர்கள் முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, அவித்துச் சாப்பிட்டு வந்தால் நாக்கில் ஏற்படும் ருசி அறிய முடியாத குறைபாடு நீங்கும்.

ஊட்டச்சத்து

உடல் வளர்ச்சிக்கு தேவையான பல சத்துகள் முளைக்கீரை கொண்டுள்ளது. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். தங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு முளைக்கீரை சமைத்து சாப்பிட கொடுக்க வேண்டும்


பித்தம்

உடலில் இருக்கின்ற பித்தத்தின் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் அளவு சமசீராகி பித்தம் குறைபாடுகளால் ஏற்படும் மயக்கம் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை சீராகும்.

வயிற்று புண்கள்

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அடிக்கடி உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல்களில் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது. இப்படி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீர முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.


முகப்பொலிவு

முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அதிலும் பெண்கள் முகப்பொலிவாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் அடிக்கடி தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு ஏற்படும்.

தோல் வியாதிகள்

தோல் வியாதிகள் ஏற்பட்டால் பலருக்கும் அது மிகுந்த சங்கடத்தை தருகின்றது. சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் ஏற்பட்டவர்கள் முளைக்கீரையை உண்பதினால் குணமடையும். மேலும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை ஈரப்பதத்தையும், பளபளப்பான தன்மையையும் தருகிறது.

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரை

  • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.

  • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.

  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

  • பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

  • முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

  • ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.

  • ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.





முருங்கைக் காய்


  • முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

  • முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

  • வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது.

  • முருங்கைக்காயை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல், மூட்டு வலி குணமாகும்.

  • கர்ப்பப்பையின் குறைகளை போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்த உதவுகிறது.

அரைக்கீரை

அரைக்கீரையை நீர்விட்டு அலசி நெய்விட்டு வதக்கி தினமும் காலை உண்டு வந்தால் ஆண்மை பெருகும்.உடல் பலம் அதிகரிக்கும்.

அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.குடல் புண்கள் விரைவில் குணமாகும்.அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.

இந்த அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, உடல் வலுவை தரும்.தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த அரைக்கீரையை தொடர்ந்து உண்டு வராலாம்.
நல்ல பலன் கிடைக்கும்.

பொதுவாக பத்திய சாப்பாடு உண்பவர்களுக்கு இந்த அரைக்கீரை மிகவும் சிறந்தது.நோயால் துவண்டு போன உடலை வலுப்படுத்தும் சக்தியும் இந்த அரைக்கீரைக்கு உண்டு.வாயு மற்றும் வாத நீர்களையும் சரிசெய்கிறது.

அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது.

இந்த கீரையை தொடர்ந்து , உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நூரையீரல் நோய்கள் நீங்கும் .வாதம்,பித்தம்,கபம் போன்றவற்றை சரிசெய்யும்.நரம்புகளை வலுப்படுத்தும்...

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


Keerai Benefits In Tamil

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...