Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

ஆல்பம் பாடல் அழகே அழகே (2015)

ஏண்டி உன்ன நான் லவ் பண்ணுறான்
ஏண்டி உன் பின்னால் நாயா சுத்துறேன்...
 
ஏண்டி உன்ன நான் நாளும் நினைக்கிறன்
அடி ஏண்டி அடி ஏண்டி அடி ஏன் 
உன் போல பொண்ண இந்த உலகத்துல பார்த்தது இல்லே...

எந்தன் மனசை கொள்ளை கொண்ட பொன்னே வேறே யாரும் இல்ல 
அழகே அழகே என் அழகே 
நிலவே நிலவே முழு நிலவே  
அழகே அழகே என் அழகே 
நிலவே நிலவே முழு நிலவே  

கனவில் வந்தே பெண்ணே நீயே நீதானா 
உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனா 

நெஞ்சுக்குழி ஓரத்துல நீ இருந்தா போதும் புள்ள
நீ மட்டும் போதும் புள்ள வேற யாரும் தேவை இல்லை 
நீ போகும் பாதை அதுல நான் வருவேன் நிழலை போல
வார்த்தை நீயும் கூறடி 

கனவில் வந்தே பெண்ணே நீயே நீதானா 
உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனா 
அழகே அழகே

அழகே உன்னை பிரியே மாட்டேன் 
உன்னை பிரிஞ்சு வாழ மாட்டேன் 
அது சொர்க்கம் என்றாலும் நரகம் என்றாலும் கூடவே வருவேன் 
உன்னோடு சேர கூடி வாழ உசுரை கூடி விடுவேன் 

அழகே அழகே என் அழகே 
நிலவே நிலவே முழு நிலவே  
பெ : அழகே அழகே என் அழகே 
நிலவே நிலவே முழு நிலவே  

அழகே அழகே என் அழகே 
நிலவே நிலவே முழு நிலவே  
அழகே அழகே என் அழகே 
நிலவே நிலவே முழு நிலவே 

ஆல்பம் : அழகே அழகே (2015)
இசை : ஹெம்ஸ் மியூசிக் 
வரிகள் : நிசான்
பாடகர்கள் : நிசான், தேனுஜா 

அவதாரம் {தென்றல் வந்து தீண்டும் போது}

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

96 அந்தாதி

பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்.
சதா, ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல்
ஏற்றி திரியும் காதல்
பிரத்யேக தேடல்

தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இலதில் .

தானே, எல்லாமும் ஆகி
நாம் காணும் ரூபமே
இத்தியாகி காதல்.
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா, மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாத ஊடல்.

நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி.
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி.
நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஓட்டும் நீர் பூச்சி.
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி.

காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலந்தோறும் தொடரும் டைரி

காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெட்ர டிகிரி

ஓர் விடைகுள்ளே
வினாவெல்லாம் பதுங்குதே
ஹா.. நாள் கரைந்ததே
மறைந்ததேமுடிந்ததே ஹா..

கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சம் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நெறையுதே
காண்பதெல்லாம் காதலடி..

காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா கூட வா போதும் போதும்
காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகவா  நீ....

ஆ
திகம்பரி
வலம்புரி
சுயம்பு நீ
ஆ

பிரகாரம் நீ
பிரபாவம் நீ
பிரபாகம் நீ நீ
ஆ.. ஆ..

சிங்காரம் நீ
ஆங்காரம் நீ
ஓங்காரம் நீ நீ நீ

அந்தாதி நீ அந்தாதி நீ
அந்தாதி நீ நீ
ம்ம்ம் தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்

காதல்,

ஒரு நாள் உங்களை வந்தடையும்
அதை அள்ளி அனைத்துக்கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்
காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்

கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்.
காத்திருங்கள்.

ஒரு வேலை காதல் திரும்பினால்
தூரத்தில் தயங்கி நின்றால்.
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்
போதும் காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்

மாற்றங்களே வினா
மாற்றங்களே விடை

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...