மறக்கமுடியாத நினைவுகள்


 கோவில்ல எல்லாரும் விளக்கு ஏத்தி தெப்பக்குளத்துல விடுவாங்க, 
அது மிதந்து போறத பார்க்குறதுக்காகவே கோயிலுக்கு போன நாட்கள் ரொம்பவே அழகானது...



பக்கத்து வீட்டுக்காரங்க பார்க்கணும்ங்குறதுக்காக வெடிய கொழுத்தி அவங்க வீட்டுக்கு முன்னாடி வெடிக்கிறது. அவங்க சண்டைக்கு வந்தா ஒண்டும் தெரியாத போல நிற்போம்...


அந்த போன தொட்டு பேச எவ்வளவு ஆசை. என்னதான் மொபைல் விதவிதமா வந்தாலும், 
அந்த STD பூத் ல போய் பேசுற சுகமே தனி...


சின்ன வயசில நம்ம வீட்டுக்கு லெட்டர் வந்தால் நமக்கு எவ்வளவு பெருமையா இருக்கும். அதுமட்டுமல்ல போஸ்ட்மன்ட சைக்கிள் பெல்ல அடிச்சுட்டு அடிச்சுட்டு ஓடி போய்ருவோம்...


அந்த 2.30 மணி பெல்லு அடிச்சதும் எவ்வளவு சந்தோஷம். ஸ்கூல் ல இருந்து ஓட ஆரம்பிச்சா நேரா வீட்ல போய் தான் வண்டி நிக்கும்...


அந்த ரேடியோவில் இருக்கிற பட்டன திருக அவ்ளோ ஆசையா இருக்கும். ஆனா வீட்டில் உள்ள பெரியவங்க அத தொடவே விட மாட்டாங்க. நாங்க தொட்டாலும் எதையாவது நோண்டி வச்சிடுவோம். இருந்தாலும் அந்த ரேடியோவ பார்க்க அவ்ளோ ஆசை நமக்கு...


கோலிசோடா குடிக்கணும் போலவே இருக்கும். ஆனா கேட்டா வாங்கி தர மாட்டாங்க. எப்பவாவது வாங்கி தந்தா நல்லா என்ஜோய்  பண்ணி குடிப்போம்...


என் கூடவே வரனும். அப்ப தான் நான் கார்(பொம்ம) வாங்கி தருவேன், கூட்டத்தில் தொலைந்து விடக் கூடாது என்டு அம்மா சொல்லும் வார்த்தையை நம்பி அம்மாவின் கையை பிடித்துக் கொண்டே திருவிழா சென்ற நாட்களும் உண்டு...

தென்னை மட்டையில் ஏறி ஊரையே சுற்றுவோம். காயத்தோட வீட்ட போனா, அம்மா மருந்து போட்டு விடுவாங்க என்டு நினைப்பம். ஆனா அங்க அம்மம்மா துரத்தி துரத்தி அடிப்பாங்க...


இந்த உலகத்தில எவ்வளவு பெரிய ஓவியர்கள் இருந்தாலும் அவங்க எவ்வளவு பிரமாண்டமான படைப்புக்களை படைச்சாலும், நாம் வரையும் அந்த ரெண்டு மலை அதுக்கு நடுவில ஒரு சூரியன் மாதிரி யாராலும் வரைய முடியாது...

இந்த மயிலிறக குட்டி போட வைக்கிறதுக்கு நாங்க படுற பாடு இருக்கே... அப்பப்பா... மயிலிறக புத்தகத்துக்குள்ள வச்சு அடிக்கடி திறந்து பார்த்துட்டே இருப்போம்...


பொங்கல், தீபாவளி வந்தாலே, புது ட்ரெஸ் எடுத்து அதுல மஞ்சள் வச்சு அம்மா போட்டு விடும் போது ஹேப்பியா இருக்கும். அப்பிடியே அந்த ட்ரெஸ்ஸ ஊரே பார்க்குற மாதிரி நடந்து வருவோம்...


காடுகரையெல்லாம் சுத்தி காலில முள்ளு குத்திட்டு வந்தா,  எங்கட அம்மா தன்னோட எச்சில் தொட்டு ஊசி வச்சு முள்ள எடுத்து விடுவாங்க. என்னா வலி வலிக்கும். இருந்தாலும் அது அழகிய நினைவு தான்..



அந்த காலத்துல எல்லார் வீட்டு வாசல்லையும் உரல் கண்டிப்பா இருக்கும். பக்கத்து வீட்டுக்காரங்க ரெண்டு பேர் சேர்ந்து மிளகாய், அரிசி இடிப்பாங்க. ஏதாவது கதை பேசிட்டே இருப்பாங்க. ஆனா இன்று உரல் என்டா பாதி பேருக்கு என்ன என்டே தெரியாது...


குளிர் காலத்துல இப்படி தான் எல்லாருக்கும் குரங்கு குல்லாவும் சுவிட்டரும் போட்டு விடுவார்கள். ரொம்ப அழகா இருக்கும்...



குளத்துக்கரைல போய் நத்தை பொறுக்குவோம். அந்த ஈரத்துல புரண்டு போட்டி போட்டு யாருக்கு அதிகம் கிடைக்கும் என்டு ஆர்வமா தேடுவம்...

தண்டவாளத்துல காச வச்சு ரயில் போன பிறகு எடுத்து பார்த்தா, நசிஞ்சு போய் இருக்கும். அதுல ஒரு சந்தோஷம் நமக்கு...



ரயில் வந்தா டாட்டா காட்டுறதுக்காக பின்னாடியே ஓடின அனுபவம் ரொம்பவே அழகானது. சின்ன வயசில ரயில் பார்க்கிறதுல எவ்வளவு குஷி நமக்கு...


தோப்புக்குள்ள போய் இந்த மாங்காவ பறிக்கிறது எவ்வளவு கஷ்டம். ரெண்டு மாங்காவ பறிக்கிறதுக்குள்ள தோப்புக்காரன் கம்பு எடுத்து துரத்துவான். என்னா ஓட்டம்...



முன்னர் எல்லாம் எங்கட வீட்டுக்கு குறி சொல்றவங்க வருவாங்க. அவங்களுக்கு அரிசி, காசு, மரக்கறி கொடுப்போம். அத நான் தான் குடுக்கனும் என்டு சண்டை போடுவம் வீட்டில.அவங்க அத வாங்கிட்டு நல்லா இருமா என்டு வாழ்த்திட்டு போவாங்க...


பாட்டி கதை கேட்டு தூங்கின நினைவுகள் எவ்வளவு அழகானவை. பாட்டி கதை கேட்கிறதுக்கு பக்கத்து வீட்டில இருந்து எல்லாம் சின்ன பசங்க ஓடி வருவாங்க...

மழை பெய்து முடிந்ததும் மரக்கிளைல தேங்கி நிற்கிற மழை தண்ணிய ஆட்டி எங்க மேல போட்டதும் தனி சந்தோஷம்...


யாராவது பேசுறாங்களானு டீச்சர் இப்படி தான் பார்ப்பாங்க. ஆனாலும் எங்கள கண்டுபிடிக்கவே முடியாது. படிக்கிற மாதிரியே முகத்த வச்சிட்டு, தலைய குனிஞ்சு பேசிட்டுதான் இருப்போம்...


ஸ்கேல தலைல வச்சு தேச்சு, பேப்பர சின்னதா கிழிச்சு போட்டு, தேச்ச ஸ்கேல் மேல வச்சா ஒட்டி பிடிக்கும். ஏதோ பெரிய மேஜிக் செய்த போல சந்தோஷம்...



பரீட்சை அப்போ படிக்கும் போதும் மட்டும் தான் நாங்க புத்தகத்த திறந்து பார்ப்போம். ஆனா அப்பிடியே படிச்சு தள்ளுற மாதிரி எங்களுக்கு நடராஜா பாக்ஸ், பேனா, றப்பர், பென்சில் எல்லாத்தையும் புதுசா வாங்கி தர சொல்லி அடம்பிடிப்போம்...


மாறுவேட போட்டில கலந்துக்குறதுக்கு எவ்வளவு ஆசையா இருக்கும். என்ன வேஷம் போட்டாலும் கோமாளி மாரிதான் இருப்போம். ஆனா கூட அதுல இருக்கிற அனுபவம் ரொம்பவே அழகானது...


க்ளாஸ் ல கொஞ்சம் நல்லா படிச்சா போதுமே, அவனுங்க ஆட்டம் தாங்க முடியாது. பரீட்சைக்கு போறதுக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சிட்டே இருப்பாங்க...


டீச்சர் முன்னாடி பாடம் நடத்தினா, நாங்க பின்னாடி உட்காந்து ஏதாவது சாப்பிடுட்டு இருப்போம். அதுவும் சத்தமே இல்லாம சாப்டுவோம். பக்கத்துல இருக்கிறவனுக்கு குடுக்கலைனா போட்டு குடுத்துடுவாங்க...


புக்குல இருக்கிற படங்கள இப்படி கட்பண்ணி சேத்து வச்சிருக்கீங்களா..? நாங்க இப்பிடி தான் நிறைய படங்களை சேத்து வச்சிருப்போம்...



அது செஞ்சு கொண்டு வா, இது செஞ்சு கொண்டு வா னு டீச்சர் சொல்லிட்டா போதும் நாங்க உடனே கத்தரிக்கோல், சபை, கலர் எல்லாம் வாங்கி ஏதாவது செய்து கொண்டு போவோம். சின்ன வயசில சொந்தமா நாமாவே செய்றதுல இருக்குற சந்தோஷமே தனி...


ஸ்கூல்ல இந்த ஸ்டாப் ரூம் பக்கத்துல போனாலே ஒரே பயமா இருக்கும். அத க்ராஸ் பண்றதுக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு போவோம்...

இடைவேளை பெல் அடிக்கும் போது, எல்லாரும் தங்கட டிபன் பாக்ஸ் ஓபன் பண்ணேக வருமே ஒரு வாசம்... ஆனா நம்ம எப்பவும் சத்துணவு தான் சாப்பிடுவம். அந்த டைம் பெல் அடிச்சதும் தட்ட தூக்கிடு ஓடுவம்...

ஸ்கூல்ல அடுத்தவன் சட்டைல தண்ணிய ஊத்தி விளையாடுறதுல இருக்கே ஒரு சந்தோஷம், அது அவன முழுசா நனைக்கும் வரை விடவே மாட்டம்...


நமக்கு பிறந்தநாள் வந்தாலே செம ஜாலி தான். புது ட்ரெஸ் போட்டு க்ளாஸ் ல எல்லாருக்கும் சாக்லேட் குடுப்பம், அதுலயும் நம்ம ப்ரண்ட்ஸ் மட்டும் நமக்கு எக்ஸ்ரா 2 சாக்லேட் தருவா. அதுக்காகவே வெய்ட பண்ணுவம்...

வகுப்பில் யாருக்காவது பிறந்தநாள் வந்தா நமக்கு தான் ரொம்ப சந்தோஷம், ஏன்னா சாக்லேட் குடுப்பாங்க. டீச்சருக்கு மட்டும் பெரிய சாக்லெட் குடுக்கிறப்போ நாங்க யோசிப்பம், யாருக்கு அந்த சாக்லேட்ட டீச்சர் குடுக்க போறானு...


க்ளாஸ் பெஞ்சுல கொட்டு அடிக்கிற சுகமே தனி. யார்ரா கொட்டு அடிச்சதுனு வாத்தியார் கேட்கும் போது எவனாவது போட்டு குடுத்திடுவானோ னு பயமா வேற இருக்கும்...



பேசுறவன் பேர போர்டுல எழுதி வை னு டீச்சர் சொல்லிட்டா போதும், இந்த லீடரா இருக்கவனுக பண்ற அட்டூழியம் இருக்கே, அப்பப்பா...



RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...