இந்திய உணவு கழகத்தில் 585. காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 585 (வடக்கு மண்டலத்தில் 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39) 

வயதுவரம்பு: 01.07.2029 தேதியின்படி  28க்குள் இருக்க வேண்டும். 


குதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அறிவிப்பை பாத்து தெரிந்துகொள்ளவும். பொதுவாக பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்தவர்கள், பி.காம் முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: 

இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: 

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை:  

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு மண்டலத்தின் ஒரு பதவிக்கு மட்டும் www.fci.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க  கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitmentfci.in/assets/FINAL%20ADVERISEMENT%20WITH%20REVISED%20SCHEDULE.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்..


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 

28.2.2020 முதல் 30.3.2020

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...