எழாம் மாதம்

குழந்தையின் வளர்ச்சி: 

குழந்தையின் மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இருள், வெளிச்சத்தை சிசு உணரும். தொடர்ந்து அசைவுகளை ஏற்படுத்தும். கல்லீரலும் நுரையீரலும் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும். 

குழந்தையின் நாக்கில் சுவை அரும்புகள் தோன்றும். 

குழந்தை 15 முதல் 17 இன்ச் உயரம் இருக்கும். 1.1 கிலோ முதல் 1.3 கிலோ எடை இருக்கும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்: 

தூக்கமின்மை, மூச்சுத் திணறல், கால் வலி, உள்ளங்கை - பாதங்களில் நமைச்சல், வயிற்றுப் பகுதியில் தோல் விரிவாவதன் அடையாளம் தோன்றும். கர்ப்பப்பை, சிறுநீர்ப்பையில் அழுத்தம் கொடுப்பது அதிகரிக்கும்.

 இதனால், அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்னை ஏற்படும். முதுகு வலியும் ஏற்படும். மலச்சிக்கல், மூலம் ஏற்படலாம்.

குறிப்பு: இந்த மாற்றங்கள், அவரவர் உடல்நிலை, எடை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடலாம்.

 
செய்யவேண்டியவை: 

பிரசவம் பற்றிய விழிப்பு உணர்வு இருப்பது நல்லது. இதற்கான வகுப்புகளில் பங்கேற்கலாம். பிரசவம் தொடர்பான புத்தகங்களை வாசிக்கலாம்.

பிரசவம் தொடர்பாக மற்றவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நினைத்துப் பயப்பட வேண்டாம்

ஒவ்வொருவரும் தன் கர்ப்பக் காலத்திலும், பிரசவத்திலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சற்று மிகைப்படுத்திச் சொல்வார்கள். எனவே, தெளிவான மனநிலை அவசியம்.

பிரசவத்தை எதிர்கொள்வது பற்றி, டாக்டர் சொல்லித்தந்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இது உங்களுக்கு இரண்டாவது குழந்தை என்றாலும், மீண்டும் டாக்டரிடம் பயிற்சி முறைகளைக் கேட்டுக்கொள்ளவும்...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...