ஆறாம் மாதம்

குழந்தையின் வளர்ச்சி: 

குழந்தைக்கு மேலும் இரண்டு உணர்வு அமைப்புகள் தோன்றும். ஒன்று- சுவை. மற்றொன்று- தொடுதல் உணர்வு. ஆண் குழந்தையாக இருந்தால், வெளியே உருவாகி இருந்த விதையானது (டெஸ்டிஸ்) அதன் இடத்தை நோக்கி நகரத் தொடங்கும்.

பெண் குழந்தையாக இருந்தால், இனப்பெருக்க மண்டலம் உருவாகும். குழந்தையின் நடுக்காது எலும்பு வலுவடையும். இதனால், செவித்திறன் மேம்படும். 

இன்னும் சில வாரங்களில் சுற்றிலும் எழும் சத்தத்துக்கு, குழந்தை பதில் அளிக்க ஆரம்பிக்கும். குழந்தையின் கண்கள் திறக்கும். இப்போது, குழந்தையின் உயரம் 11 முதல் 14 இன்ச் இருக்கும். எடை 400 முதல் 650 கிராம் இருக்கும்..

உடலில் ஏற்படும் மாற்றங்கள்: 

கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். குழந்தையின் அசைவுகளை தினமும் உணர முடியும். உடல் எடை அதிகரிப்பது உச்சத்தில் இருக்கும். நெஞ்சு எரிச்சல், முதுகுவலி, வெரிகோசிஸ் வெய்ன் போன்ற கர்ப்பக் காலத்தின் பின்பகுதி அறிகுறிகள் இப்போது தோன்ற ஆரம்பிக்கும்.

செய்யவேண்டியவை: 

36-வது வாரத்துக்கு முன்பு பிரசவம் ஏற்படுவது குறைப்பிரசவம் 
(ப்ரீடேர்ம் லேபர்). 

இந்தக் காலத்தில் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதன் அறிகுறிகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்று விழிப்புடன் இருக்க வேண்டும். டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...