குழந்தை இப்போது 46 செ.மீ. அளவுக்கு வளர்ந்திருக்கும். 2.7 கிலோவுக்கு மேல் இருக்கும்.
குழந்தையின் எடை என்பது,
தாயின் உடல்நிலை, எடுத்துக்கொண்ட சத்தான உணவு மற்றும் மரபியல் சார்ந்து வேறுபடும்.
37-வது வாரத்தில், குழந்தையின் நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்கும்.
37-வது வாரத்தில், குழந்தையின் நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்கும்.
மூச்சுவிடுதல் பயிற்சியைக் குழந்தை செய்யத் தொடங்கும். ஆண் குழந்தை எனில் விதையானது, விதைப்பையை நோக்கி நகர்கிறது. பெண் குழந்தை எனில், பெண் பிறப்புறுப்பு வளர்ச்சி அடைகிறது. குழந்தையைச் சுற்றிப் பாதுகாப்பாக இருந்த மெல்லிய ரோமங்கள் மற்றும் தோலைச் சுற்றி இருந்த மெழுகு போன்ற அமைப்பு மறைந்துவிடும்.
40-வது வாரத்தில், குழந்தை வெளிவரத் தயாராகிவிடும்.
எந்த நிலையில் வெளியேற வேண்டும் என்பதையும் குழந்தையால் உணர முடியும்...
கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
குழந்தை வெளியேற வசதியாக இடுப்புப் பகுதியைத் தளர்த்தும் பணியில் உடல் ஈடுபடும். இதற்கான ஹார்மோன் சுரந்து, இடுப்பு எலும்பு மற்றும் மற்ற மூட்டுப் பகுதியிலும் தளர்வை ஏற்படுத்தும்.
தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மார்பகத்தில் பால் சுரக்க ஆயத்தமாகும். பனிக்குடம் உடைந்ததும் பால் சுரக்க ஆரம்பித்துவிடும்.
தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மார்பகத்தில் பால் சுரக்க ஆயத்தமாகும். பனிக்குடம் உடைந்ததும் பால் சுரக்க ஆரம்பித்துவிடும்.
குழந்தை, இடுப்புப் பகுதியை நோக்கி நகர்வதால், மூச்சுவிடுவது கொஞ்சம் எளிதாகும். எப்போது பிரசவம் ஏற்படும் என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டே இருக்கும்...
செய்யவேண்டியவை:
நன்கு ஓய்வெடுக்க வேண்டும். குழந்தையின் அசைவை உற்றுக் கவனிக்க வேண்டும். அசைவு குறைவதுபோல் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பிரசவத்தை எளிமையாக்க, சொல்லிக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்...
பிரசவத்தை எளிமையாக்க, சொல்லிக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்...
பிரசவ வலி:
கருப்பையின் தசைகள் இறுகும். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து ஏற்படும். பின்னர் இது நீடித்தும், கடுமையானதாகவும் இருக்கும். முதுகின் கீழ்ப்பகுதியில் வலி ஏற்படும். பிறப்புறுப்பில் ரத்தக் கசிவுடன் கூடிய திரவம் வெளிப்படும்.
பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். வலி ஏற்பட்டதுமே, மருத்துவமனைக்குச் சென்றுவிடுதல், பிரசவ நேர அவசரநிலையைத் தவிர்க்க உதவும்...