மூன்றாம் மாதம்

குழந்தையின் வளர்ச்சி: 

கரு உருவாகி எட்டு வாரங்கள் கடந்த நிலையில், எலும்பு செல்கள், மென்மையான கார்டிலேஜ் செல்கள் உருவாகும். இந்தக் காலத்தில் 'எம்ப்ரியோ' வளர்ச்சி அடைந்து 'ஃபியூட்டஸ்' என்ற நிலையை அடையும். 

குழந்தையின் முகத்தில்- மூக்கு, 
காது, உதடு, நாக்கு போன்றவை உருவாகும். ஈறுகளுக்கு அடியில் பற்களும் முளைக்க ஆரம்பிக்கும். 

கைகளில், விரல்கள் தோன்றும். கை விரல்களில் நகமும், உள்ளங்கையில் ரேகைகளும் உருவாகும். காலில்- பாதம், விரல்கள் உருவாகும். 
கையும், காலும் அசைய ஆரம்பிக்கும்.

இந்தச் சின்னஞ்சிறு குழந்தை சிரிக்கும், சிணுங்கும், கை விரலை சூப்பும், பனிக்குடத்தின் நீரை விழுங்கி, அதைச் சிறுநீராக வெளியேற்றும். 

(இந்தப் பனிக்குட நீர் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை முற்றிலும் மாற்றப்பட்டுவிடும்).

குழந்தையின் இதயத் துடிப்பை அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் துல்லியமாகக் கேட்க முடியும். 

இப்போது, குழந்தை மூன்று இன்ச் உயரமும், கிட்டத்தட்ட 30 கிராம் எடையும் இருக்கும்.

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்: 

குழந்தை வளர்வதால், இந்த மாதத்தில் தாயின் எடை, தோராயமாக இரண்டே கால் கிலோ அளவுக்கு அதிகரித்து இருக்கும். 

சிலருக்கு உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது. மனதளவில் 'நாம் கருவுற்றிருக்கிறோம்' என்ற எண்ணம், பரவசத்தை ஏற்படுத்தும். பொலிவும் வசீகரமும் அதிகரிக்கும்.

செய்யவேண்டியவை: 

குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்கு சுத்திகரிக்கப்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பாலைப் பருகுவது நல்லது.

மருத்துவரின் ஆலோசனைப்படி, 
13-வது வாரத்தில், 'டவுன் சின்ட்ரோம்' உள்ளிட்ட மரபணு குறைபாடு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

வயிறு மற்றும் இடுப்புப் பகுதி பெரிதாகும் என்பதால், அதற்கு ஏற்ற ஆடைகளைத் அணிய வேண்டும். எலாஸ்டிக் தன்மையுள்ள ஆடையைப் பயன்படுத்தலாம்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...