நான்காம் மாதம்

குழந்தையின் வளர்ச்சி : 

நஞ்சுக்கொடி மற்றும் குழந்தையின் அனைத்து உறுப்புக்களும் தோன்றி இருக்கும். இப்போது இருந்தே சிசு பெரிதாகத் தொடங்கும். வெளிப்புற பாலின உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்.

குழந்தை தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும். வெளிப்புறச் சத்தங்களைக் கேட்கத் தொடங்கும். பனிக்குட நீரில் சுற்றிச்சுற்றி வரும்.

குழந்தை ஐந்து முதல் ஆறு இன்ச் அளவுக்கு வளர்ந்திருக்கும். 
அதன் எடை, 110-120 கிராம் இருக்கும்.

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

இந்த மாதத்தில் வயிறு பெரிதாகும். மெலிந்த தேகம் உடையவராக இருந்தாலோ, ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலோ, 

சிசுவின் அசைவை உணரலாம். 

இது கடைசியாக மாதவிலக்கு வந்ததில் இருந்து 16 வாரங்களுக்குப் பிறகு நிகழும்.

இந்த நேரத்தில், சருமத்திலும் மாற்றங்கள் தெரியும். ரத்தக்குழாய்கள் அதிக அளவில் வேலை செய்யும். ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக, சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படலாம். கருப்பைக்கு முன்பைக்காட்டிலும் இரண்டு மடங்கு ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. சிறுநீரகத்துக்கு 25 சதவிகிதம் அதிகமாக ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. எனவே, இதயம் அதிக அளவில் வேலை செய்யும்.

செய்யவேண்டியவை: 

மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி வல்லுநர்களிடம் ஆலோசித்து, எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்க வேண்டும்.

தொடர் மற்றும் எளிமையான பயிற்சிகள் செய்வது, தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியத்தைத் தரும். 
நேரம் தவறாமல், சத்தான 
உணவைச் சாப்பிட வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்த, நல்ல புத்தகங்கள் வாசிப்பது, இனிமையான பாடல்கள் கேட்பது நல்லது. இது, வயிற்றில் வளரும் கருவுக்கு ஆரோக்கியமான உடல், மன வளர்ச்சியைக் கொடுக்கும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...