தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என அழைக்கப்படும் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மின்னியல், இயந்திரவியல், கட்டடவியல் பிரிவுகளில் உதவிப்
பொறியாளர் பணிகளுக்கு இஇஇ, இசிஇ, இஐஇ , சிஎஸ்இ,ஐடி, மெக்கானிக்கல், புரொடக்ஷன், மேனுபாக்சரிங், சிவில்
ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் என்ஜினீயரிங் படித்திருக்கவேண்டும் அல்லது எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்,
சிவில் என்ஜினீயரிங் பிரிவுகளில் ஏஎம்ஐஇ படித்திருக்கவேண்டும், பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, டிப்ளமோ தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
குறைந்தபட்சம் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட
பழங்குடிப் பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 35 வயது. மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(முஸ்லிம்) ஆகியோருக்கு 32 வயது இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை. விண்ணப்பக்கட்டணம் மற்றும் தகுதித் தேர்வு
தொடர்பான விவரங்களை இணையதளம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
கணினிவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,
விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. முன்னர் விண்ணப்பிக்கவர்கள்
விண்ணப்பித்துள்ளதாக கருதப்படுவர் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.3.2020
விவரங்களுக்கு: www.tangedco.gov.in