கடவுளுக்கு இணையானது

கடவுளுக்கு இணையானது!!!

நாம் உண்ணும் உணவானது 
கடவுளுக்கு இணையானது என்பதை குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லித்தர வேண்டும்.

உணவை வீணடிக்காமல், வீணாகும் உணவைத் தேவைப்படுபவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதுவே உணவுக்கு நாம் தரும் மரியாதை ஆகும் .

முதியோர் இல்லம், அறக்கட்டளைகளுக்குத் தெரிவித்தால்
அவர்கள் மீதமான உணவை எடுத்துக் கொண்டு தங்கள்
இல்லங்களில் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவார்கள் அல்லது வெளியே பசியால் உணவுக்காக காத்துக்
கொண்டிருப்பவர்களுக்கு வழங்கலாம், இதனால் நமக்கு
மனநிறைவு ஏற்படுவதோடு, அந்த உணவைத் தயாரிக்க
நாம் செல்வு செய்த பணம் வீணாகவில்லை என்ற
சமாதானமும் ஏற்படும்


நிலத்தில் உணவு தானியங்களை விவசாயிகள் பயிரிட்டு
விளைவித்து, ஆலைகளில் சுத்தப்படுத்தி, கிடங்குகளில்
பாதுகாத்து, பின்னர் பல இடங்களுக்கு விநியோகித்து
அவை கடைகளில் விற்பனையாகி. 
சமையலறைக்கு வந்து, சமையல் செய்து, பின்னர் நம் தட்டில் உணவாக மாறும்வரை பல நிலைகளில் உணவுப் பொருள்கள்
வீண்டிக்கப்படுகின்றன. இவ்வாறு பல நிலைகளைச் சந்தித்து நாம் உண்பதற்காக நமது தட்டில் இருக்கும்
உணவுப் பண்டத்தை அற்பக் காரணங்களுக்காக மீண்டும்
வீணடிப்பது, பல உழைப்பாளர்களின் உழைப்பை உதாசினப்படுத்துவது போலாகும்..


நமது விருப்பத்திற்கு மாறாக மற்றவர்கள் உணவு
வழங்கினாலோ, கட்டாயப்படுத்தி உணவு உட்கொள்ளச்
சொன்னாலோ நாம் அதிகமாக உண்ணக்கூடாது, நமக்குத்
தேவையான அளவு உணவை உண்பது நமது கடமை
இம்மாதிரியான அன்புத் தொல்லைகளின் போது நாம் நமது
விருப்பத்தில் உறுதியாக இருந்து தேவைக்கு அதிகமாக
உணவு உண்பது உடலுக்கு கேடு என்பதை அவர்களுக்கும்
எடுத்துரைத்து மறுத்து விடுவதே சாலச்சிறந்தது...



நாம் உணவை உன்டு அதன் மூலம் கிடைக்கும் சக்தியை பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அலுவலகங்களிலும் இறுதியில் மருத்துவமனைகளில் இழக்கிறோம். பணத்தின் மீதான மதிப்பு குறைய குறைய நாம் உணவின் மீதான
மரியாதையை இழந்து விட்டோம். 

உணவை விண்டிக்காமல்
இருந்தோமேயானால் நமது அன்றாடச் செலவில் பாதிகுறையும்...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...