இது மூன்று பாகங்களாக வெளிவர உள்ளது...
தன் வாழ்வில் அனைத்தையும் இழந்த ஒருவன், தான் இனிமேல் துறவியாக மாறிவிடலாம் என்று யோசிக்கிறான்.
துறவி வாழ்க்கை அத்தனை சுலபமாக அவனை ஏற்றுக் கொள்ளுமா என்ன?
கண்டிப்பாக இல்லை.
அவன் துறவியாக நினைத்து, அடுத்த அடியை எடுத்து வைத்ததுமே, அவனுக்கு அடி மேல் அடி விழுகிறது. பின் ஒரு மிகப்பெரிய பயணத்தை அவன் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பின் எங்கோ இருந்த மகுடம் தன் தலையை நோக்கி வருகிறது. தஞ்சை அரண்மனையில் ஏங்கி நிற்கும் ஒரு உடைவாளுக்காக இவன் ஏங்க ஆரம்பிக்கிறான். இந்தப் பயணத்தின் போது சோழர்களையும், பாண்டியர்களையும் சந்திக்கிறான். அந்த சந்திப்பின்போது உச்சபட்ச பெருமையை அடைகிறான்.
உச்சபட்ச வேதனையை அடைகிறான் உச்சபட்ச துரோகத்தையும் காண்கிறான். இத்தனையும் இந்திரன் கொடுத்த உடைவாளுக்காகவா? ராயரின் மகுடத்திற்காகவா? துறவி வாழ்க்கைக்காகவா? பதிலைக் காண இந்த பயணத்தில் இணையுங்கள்....