நார்மலா ஒரு குழந்தை பிறக்குதுன்னா அதுக்கு ஒரு கருமுட்டை அண்ட் ஒரு விந்தணு தேவை. அந்த கருமுட்டை நல்லா முதிர்ச்சி அடைஞ்சி வளந்து இருக்கனும்.
அதே மாதிரி விந்தணுக்கு ஒரு உடல் பகுதி, ஒரு வால் பகுதி இருக்கனும்.
அப்போ தான் அது நல்லா நீந்தி போய் கருமுட்டையை அடைஞ்சு கருவை உருவாக்க முடியும்.
கருமுட்டை உள்ள விந்தணு போக அந்த விந்தணுக்கு மேல ஒரு கேப் மாதிரி இருக்குற எடத்துல ஒரு ஆசிட் மாதிரி ஒரு திரவம் இருக்கும்.
அந்த திரவம் போய் கருமுட்டை மேல பட்டா தான் கருமுட்டையோட ஓடு உடைஞ்சு விந்தணு உள்ள போக முடியும். சில பேருக்கு அந்த விந்தணு மேல இருக்குற திரவம் இல்லாமலோ இல்ல வீரியம் குறைஞ்சோ இருந்தாலோ கருமுட்டை உள்ள போகாது
கரு உருவாகது. அதே மாதிரி கருமுட்டையோட ஓடும் அதோட தன்மையை விட்டு ரொம்ப அதிக ஸ்ட்ராங்கா இருந்தாலும்
கரு உருவாகாமல் போய்டும். இப்படி இருக்குறவங்களுக்கு தான் மெடிக்கலி குழந்தையை பெத்துக்க ஏற்பாடு பண்ணுவாங்க.
அதாவது IVF மாதிரி செய்வாங்க.
IVF அப்படின்னா In vitro fertilization அப்படின்னு அர்த்தம். அதாவது டெஸ்ட் ட்யூப் பேபினு சொல்லுவாங்க