குளியல் சோப்பு தயாரிப்பு

குளியல் சோப்பு தயாரிக்கும் முறை


 அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சோப்புகளை இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். இதற்கு முதலீடு என்பது குறைந்த அளவே, வீட்டிலிருந்தே தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஏற்ற தொழிலாகும். இனி கற்றாழை சோப்பு எப்படி தயாரிப்பது என்பது பற்றி காண்போம்.

தேவையான பொருள்கள் :

தண்ணீர் - 300 மி.லி

காஸ்டிக் சோடா - 100 கிராம்

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 600 மி.லி

கற்றாழை - தேவையான அளவு

வாசனை திரவியம் - தேவையான அளவு

தயாரிக்கும் முறை :

முதலில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் காஸ்டிக் சோடாவை சேர்த்து சிறிது நேரம் நன்கு கலக்க வேண்டும். 

(குறிப்பு : காஸ்டிக் சோடாவை தண்ணீருடன் சேர்க்கும் போது கவனமாக கையாள வேண்டும்.)

 அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மாவு பதம் வரும் வரை கிளற வேண்டும்.

பின்னர் அதில் கற்றாழை மற்றும் வாசனை திரவியம் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு கடைசியாக அச்சில் ஊற்றி காய வைக்க வேண்டும். (இதில் கற்றாழைக்கு பதிலாக பப்பாளி, வேம்பு, மஞ்சள் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.)

 சோப்பு காய்ந்ததும் ஒரு மாதம் கழித்து பயன்படுத்துவதற்கு தயார் ஆகி விடும். அதனை பேக்கிங் செய்து மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...