பூண்டு


நன்மைகள் :

1) ஒரு வெள்ளைப்பூண்டு , ஏழு மிளகு , ஒன்பது மிளகாய் இலை இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.

2) பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில் பூச்சிவெட்டு முடி வளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

3) குப்பைமேனி இலையுடன் பூண்டைச் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து , இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வர வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்து விடும்.

4) பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும் .

5) வெள்ளைப்பூண்டு , வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் தேமல் மறைந்து விடும்.


6) பச்சைப்பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும் . உற்சாகம் ஏற்படும். இரத்த அழுத்தம் குறையும்.

7) பூண்டை நசுக்கி சாறெடுத்து சாறை உள்நாக்கில் தடவ உள்நாக்கு வளர்ச்சி குறையும் .

8) பூண்டோடு எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

9) பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாதநோய் குணமாகும் .

10) பூண்டுடன் ஓமத்தை நசுக்கிப் போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி , கொட்டாவி குறையும் .

11) பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் , மாரடைப்பு வராது . இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது .

12) பூண்டானது இரத்தத்திலுள்ள cholesterol அளவைக் கட்டுப்படுத்துகிறது.

13) இது பசியைத் தூண்டும்.

14) பூண்டுச் சாறை முகப்பரு மீது தடவ முகப்பரு மறையும் .

15) பூண்டு இருதய நோய் வராமல் தடுக்கும்.

முதலுதவிக்காக :



1) நல்லெண்ணெயில் பூண்டை இட்டுக் காய்ச்சி காதில் விட காதுவலி, காதுநோய் ஆகியவை குணமாகும்.

2) பூண்டையும் , சிறிது உப்பையும் சேர்த்து உண்டால் திடீரென ஏற்படும் வயிற்றுவலி , நெஞ்சு எரிச்சல் , நெஞ்சுக் கரிப்பு குறையும்.

3) பூண்டைச் சாப்பிட்டால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலி மறையும்.

4) பூண்டுச் சாற்றில் , சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...