செல்போனே
இல்லேன்னா...
சண்டைகள்
குறையும்!
ஆபீஸ்ல
ஒழுங்கா
வேலை
நடக்கும்!!
வீட்டு
வேலைகள்ல
பெண்டிங்
விழுகாது!!!
கட்டடம்
ஒழுங்கா
வளரும்!!!
செவிட்டு மிஷின்
தேவைப்படாது!!!
பார்வைக்
கோளாறு
பருவக்
கோளாறு
வராது!
வந்தாலும்
வளராது!!!
தனியா
பேசிக்கிட்டு
சந்தேகப் பிராணியா
திரியமாட்டோம்!!!
அறைகளுக்குள்ளே
நம்மை
நாமே
பொதைச்சுக்கிட்டு
நம்மை நாமே
இழந்துரமாட்டோம்!!!
கல்யாணம்,காய்ச்சி,
கிரஹப்பிரவேசத்துக்கு
நேருல போயி
நாமும்
சந்தோஷத்தில குளிச்சு
மத்தவுஹளையும்
இன்பத்திலயும்
பாசத்திலயும்
கரைய விடுவோம்!!!
ஊர் கூடித்
தேர் இழுப்போம்!!!
டிராக்டரை வைச்சுத்
தேரோட்டம் நடத்தி
மனுஷத்தன்மை
இல்லாததைக்
கடவுளுக்கிட்டே
புரூப் பண்ணமாட்டோம்!!!
டச் போன்
ஒழிஞ்ச பிறகுதான்
குடும்ப உறுப்பினர்களோட
டச் அதிகமாகும்!!!
ரொம்ப
சந்தோஷம்
என்னன்னா
டைவர்ஸ்ங்கிற
கெட்ட வார்த்தை
செத்துச் சாம்பலாயிடும்!!!
யம்ம்ம்மாடி!!!!!
எம்பூட்டு
நிம்மதியை
நாம
இழந்துட்டு
அலையுறோம்!!!
நம்ம
ஐயா, அப்பத்தா மாதிரி
நிம்மதியா
வாழ்வோம்!!!!