ஐயா நம்மாழ்வாரின் எதார்த்த விளக்கங்கள்

 ஐயா நம்மாழ்வாரின் எதார்த்த விளக்கங்கள் 

கேள்வி பதில்.👇

1. வயல்ல எலித்தொல்லை? 

அய்யாவின் பதில்:
🦗🦗🦗🦗🦗🦗
ஒரு எலியை கொன்னு மீன் அமிலம் தயாரிக்கும்போது கூடவே போட்டு 20 வது நாள் எடுத்து 10லிட்டர் தண்ணிக்கு 100 மில்லி கலந்து வரப்பு ஓரமா தெளியுங்க. எலி வயலுக்குள்ள அண்டவே அண்டாது.

2. பயிர்ல பூச்சி தொல்லை?

அய்யாவின் பதில்:
🐝🐞🐝🐞🐝🐞🐝🐞
அது ஒன்னும் பெரிய விஷயமில்லையய்யா! ஆடு மாடு திங்காத இலைகளை எடுத்து சின்ன சின்னமா வெட்டி மாட்டு மூத்திரத்தில ஊறப்போட்டு 10 வது நாள் எடுத்து, 10லிட்டருக்கு தண்ணிக்கு 100மில்லி கலந்து பயிர் மேல தெளிக்க அந்த வாடைக்கு தாய் பூச்சி நம்ம பயிர்ல வந்து முட்ட போடாது. அப்பிடியும் போகலையா கொஞ்சம் இஞ்சி , பூண்டு ,மிளகாய் சேர்த்து அடிங்க. எப்பேர்ப்பட்ட பூச்சியா இருந்தாலும் நம்ம பயிர்ல வந்து முட்டை போதாது.

3. பல வருசமா ரசாயன உரம்போட்ட வயல மாத்த 5 வருஷமாகுமா?

அய்யாவின் பதில்:

ஆறுமாசத்துல மாத்திடலாம்யா! 
20 வகையான விதைகளை(20 கிலோ) சமமா எடுத்து விதைச்சு மொத 20 நாள்ல மடக்கி உழுவனும், திரும்ப அதே அளவு விதைச்சு இப்போ 45 வது மடக்கி உழனும் , திரும்பவும் அதே அளவு விதைச்சு இப்போ 65 வது நாள்ல மடக்கி உழுதாச்சுன்னா, எத்தனை வருசமா கெட்டுப்போன நிலமா இருந்தாலும் மீட்டுடலாம்.
அந்த விதைகள் 4 வகையான தானிய பயிர்கள்,4 வகையான பருப்பு ,4வகையான எண்ணெய் வித்துக்கள்,4 வகையான வாசனை(அஞ்சறை பெட்டி ) செடி விதைகள்,4 வகையான உரச்செடிகள்.

4. இயற்கை விவசாயத்துல அதிக மகசூல் இல்லேன்னு சொல்லறாங்க ?

அய்யாவின் பதில்:

யார்யா சொன்னது? 
போய் இயற்கை விவசாயம் செய்றவங்கிட்டே கேட்டு பாருங்க
மகசூல் இருக்கா?  இல்லையான்னு ? 
இந்த 60,70 வருசமாதான இந்த பூச்சி கொல்லி, ரசாயன உப்பு எல்லாம் வந்தது. 
அதுக்கு முன்னாடி பல்லாயிரம் ஆண்டுகள் செடிகளுக்கு யாரு யூரியா போட்டு வளர்த்தா? யாரு எண்டோசலபான் தெளிச்சா? 

உங்களை சொல்லி குத்தமில்லை பசுமை புரட்சி அப்படி நமக்கு கத்து கொடுத்திட்டு.

5. அரசாங்கம் இயற்கை விவசாயத்தை கையில எடுக்க தயங்குதே?

அய்யாவின் பதில்:

ஆமா! 
ரசாயன , பூச்சி கொல்லி தயாரிக்கிற கம்பெனி கமிஷன் கொடுக்கிறான். இயற்கை விவசாயம்ன்னா உரம், விதை ,பூச்சி விரட்டி எல்லாத்தையும் விவசாயியே உற்பத்தி செய்துக்குவாரு. அப்புறம் எப்படி அரசாங்க அதிகாரி , மந்திரிக்கெல்லாம் கமிஷன் கிடைக்கும்.?

இனி அரசாங்க விரும்பினாலும் விரும்பாட்டியும் விவசாயி இயற்கை விவசாயத்துக்குள்ள திரும்பிடுவார்.

6. ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணி எடுக்கிறாங்களே?

அய்யாவின் பதில்:

தப்பா சொல்றீங்க!
தண்ணிய எடுக்கல, 
திருடுறோம்! 
நம்ம வருங்கால புள்ளைங்களோட தண்ணிய திருடுறோம்.

நிலத்துக்கு கீழ 10 அடிவரைதான் நமக்கு எடுக்க உரிமை இருக்கு. அதுக்கு கீழே போய் தண்ணியெடுத்தா அது நம் வருங்கால சந்ததியின் நீர். அதை அவனிக்கில்லாமல் திருடுகிறோம் . வானத்திலிருந்து பெயிற மழை தான்யா மனுசனுக்கு சொந்தம்.
எவ்வளவு சீக்கிரம் புரிஞ்சிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சிக்கோணும். 

ஏன்னா யாரும் இங்க நிலையா இருக்கப்போறதில்ல. யாரும் கோச்சுக்க கூடாது நம்மாழ்வாரும் ஒரு நாள் சாகத்தான் போறார். “வந்தவரெல்லாம் நின்றுவிட்டால் , இந்த மண்ணில் இடம் ஏது” 
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” - நல்லது கேட்டது வேறு யாருகிட்டேயும் இருந்து வறதில்ல, நமக்கு நாமளே உருவாக்கிக்கிறது. அப்படித்தானே?

இன்னும் எத்தனை எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். 

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...