பன்னிரென்டு உயிர்களையும்
பதினெட்டு மெய்களையும்
ஒரு ஆயுதத்தையும் ஆதாரமாக்கி அவதாரம் எடுத்தவளே!
தென்றலென்று இரசித்தடவா
உன்னை தேனென்று ருசித்திடவா?
கலையென்று வணங்கிடவா
உன்னை கடல் என்று மளைத்திடவா?
சுவையென்று பருகிடவா
உன்னை உயிரென்று நினைத்திடவா?
உன்னை வணங்கவா
இல்லை வாழ்த்தவா?
உன்னில் மயங்கவா
இல்லை மாய்ந்திடவா?
கவிகளுக்கு வரம்
அளித்தவளே!
காவியங்களுக்கு உயிர் கொடுத்தவளே!
சொல்லுக்கு இடம்
தந்தவளே!
சொல்வதற்க்கெல்லாம் இசை கொடுத்தவளே!
நெழிந்து வளைந்து காகிதத்தில்
கண்ணுக்கு இனித்தவளே!
நெகிழ்ந்து நெகிழ்ந்து உன்னை
இரசிக்க செய்பவளே!
உன் மனமென்ற இலக்கணத்தை
மாசுப்படுத்தினால் மன்னித்திடு!
உரிமையில் ஒருமைகளை
உதிர்த்தபடி உலருகிறேன்!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
பல்லாயிரம் கவிகளால் வாழ்த்தபெற்றவளே
இச்சிறியவளின் தீண்டல்
உன்னை சேருமோ சேராதோ?
இவள் வர்ணனைக்கு
சவாலிட்டு யோசனையிலும்
விரல் நுனி வாசனையிலும் வண்ணத்து பூச்சியாய் அமர்ந்து வேடிக்கை காட்டி தேவதையாய்
பறந்து தோல்வியில்
விழ செய்பவளே!
உன் உருவில் வரி வடித்து,
சிரம் தாழ்த்தி மெய் சிலிர்த்து,
சிவந்த இதழில் முத்தமிட்டு
அவள் இசையில்
தமிழென்று உச்சரித்து
நாவினுக்கோ முக்தி அளித்து
நாயகியை வணங்குகிறேன் -என்
தமிழ் தாயவளை வணங்குகிறேன்!