காய்கறிகள் மற்றும் பழங்கள்
டோர் டெலிவரி
இந்நிலையில், நோய் தொற்றின் தாக்கம் மேலும், தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கே நேரிடையாக சென்று கொடுக்கவும் அரசு திட்டமிட்டு அதற்கான செயலில் இறங்கியுள்ளது.
அத்தியவாசிய பொருட்கள், காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதால், தோட்டக்கலைத்துறை சார்பாக இணையதளம் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை டோர் டெலிவரி செய்திடும் வகையில்
www.ethottam.com
என்ற இணையதளத்தை அரசு தொடங்கியுள்ளது. இதில், ரூ. 300, 500, 600 என மூன்று தொகுப்பில் காய்கறிகளும், ரூ. 500, 600, 800 என்ற மூன்று தொகுப்பில் பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே கிளிக் செய்து பெற்று கொள்ளலாம்.