அப்பளம் தயாரிக்கும் முறைகள்:

அப்பளம் தயாரிக்கும் முறைகள்:



 அப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருட்களில் ஒன்றாகும். அதற்கு காரணம் அதன் மொரு மொரு தன்மை தான். இதனை தயார் செய்ய அதிக அளவில் முதலீடும் தேவைபடாது, வீட்டிலேயே சிறிய அளவில் தொடங்கி அதன் மூலமும் நல்ல லாபமும் பெறலாம்.




தேவையான பொருட்கள் :

1. பச்சை அரிசி - 1 கிலோ

2. எலுமிச்சம்பழம் - 1

3. பெருங்காயம் - சிறிதளவு

4. எள்ளு - சிறிதளவு

5. தேங்காய் எண்ணெய்

6. உப்பு - தேவையான அளவு

செய்முறை :

*  முதலில் அரிசியை தண்ணீரில் நன்கு ஊற வைக்க வேண்டும், பிறகு அரைமணி நேரம் கழித்து நீரை வடிய வைத்து அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அரிசியை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, பின்பு ஆறியவுடன் மாவக அரைத்து கொள்ள வேண்டும்.

* மேலும் நீரில் தேவையான அளவு உப்பையும், பெருங்காயத்தையும் எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

* கரைத்த நீருடன் எள் மற்றும் அரைத்து வைத்த மாவையும் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* உருட்டிக்ய மாவை உரலில் போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சம்பழச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து இடித்துக் கொள்ளவேண்டும்.

* இடித்து வைத்துள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டிக் வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட வேண்டும்.

விற்பனை செய்யும் முறைகள் :

* காயவைத்த அப்பளத்தை தேவையான அளவுகளில் பாக்கெட் செய்து நம் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கும் விற்பனை செய்யலாம்.




RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...