பொதுவாக அனைவரது குழப்பமே இதுதான். அதாவது நன்றாகத்தான் இருப்போம் திடீர் என்று உடல் நல குறைவு ஏற்படும், என்ன காரணம் என்றாலும் தெரியாது.
சிலருக்கு பருவமாற்றத்தின் காரணமாக கூட உடல் நலகுறைவு ஏற்படுகிறது. இவற்றின் முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
(increase immunity) குறைவின் காரணமாகவே இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி in English – Immunity
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் ஏ, சி, இ
வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
(increase immunity) தன்மை வாய்ந்தது.
அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது.
கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா பழம் ஆகியவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இவற்றை நாம் அதிகமாக உணவில் எடுத்து கொண்டோம் என்றால் அதிகளவு ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு அதிகளவு வலிமையையும் அள்ளித்தருகிறது.
இதனுடன் தினமும் 5 பாதாம் பருப்பும் சாப்பிட்டால் அதிக வலிமை பெறலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீரை:
வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன.