ஆபாசமல்ல,


கழிவறை சுவர்களில்
நிர்வாணமாக வரைந்து
வைத்திருந்தான் அவளது
மார்பகங்களை  அவன்

பெண்களின் நிர்வாண படத்தை பார்த்து மகிழ்ந்திருந்தான்
மற்றொருவன்

பேருந்து நிலைய நிழற்குடையில் அவளது பெயரெழுதி அவளை
அனுபவிக்க ஓர் இரவிற்கு இத்தனை ரூபாய் என குறிப்பிட்டு அதற்கான எண்களையும் எழுதி வைத்திருந்தான்
யாரோ ஒருவன்

மதிகெட்டோரே கேளுங்கள்

யோனியென்பது காமத்தின்
வாசலல்ல,
மார்பகம்யென்பது கவர்ச்சியின்
விளம்பரமல்ல,
பெண் என்பவள்
போதையுமல்ல,

தாய்க்கு உள்ளதே
தமக்கைக்கும்,
தமக்கைக்கு உள்ளதே
தாரத்திற்கும்,
தாரத்திற்கு உள்ளதே,
பெண்கள் யாவர்க்கும்

அம்மாக்களின் மார்புப்பாலில்
காமம் கலப்பதிலை

தமக்கைகளின் ஆடைவிலகளில்
ஆபாசம் தட்டுபடுவதில்லை

தாரங்களின் அரவணைப்பில்
தாய்மை குறைவதில்லை

பெருத்த தொடை இரண்டுக்கு நடுவில்
வயிற்றின் அடிப்பகுதியில்
அமைந்திருக்கும்
எலும்பின் சதைமூடிய
யோனியின் வழியே கருவுற்று
உருபெற்று உயிர் பெற்று
ஒரு பெரு வலியோடு
வெளியேறிவர்கள் தானே
நாம் என்பதை மறந்து போய்
மதி இழந்து போய் வாழ்ந்து வருகிறோம்

புரிந்து கொள்ளுங்கள்

பெண்கள் யாவரும்
காமத்தின் அடையாளமல்ல
அவர்கள்
போதைகளின் புகலிடமும் அல்ல
இச்சைக்கு இன்னொரு பெயர்
பெண்கள் என்று எண்ணாதீர்கள்

ஏனெனில் அவர்கள்
நம்மில் பாதி ...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...